எஸ் புதூர் (செம்மாம்பட்டி புதூர் என்பதன் சுருக்கம்) (ஆங்கிலம்: S Pudur) தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டம், எஸ். புதூர் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்த ஒரு கிராம ஊராட்சி ஆகும். இங்கு அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது.இங்கிருந்து மாநிலத்தின் முக்கிய பகுதிகலான திருச்சி,மதுரை,கோயம்புத்தூர்,புதுக்கோட்டை,பழனி மற்றும் திண்டுக்கல்லிற்கு பேருந்து வசதி உள்ளது.ஒன்றிய தலைநகராக இருக்கும் s.புதூருக்கு அருகில் உள்ள நகரம் பொன்னமராவதி ஆகும்.விவசாயம் பிரதானமாகயிருக்கும் இவ்வூரில் அரிச்சான்கண்மாய் புதியிகண்மாய் விரஞ்சான்கண்மாய் 3 பிரதாண நீர்தேக்கங்கள் இவ்வூர் விவசாயத்திற்கு நீரை வழங்குகிறது.இவ்வூரின் குடிநீர் தேவையை சீலப்பநாயக்கர் ஊரணி பூர்த்திசெய்கிறது இது தவிர ஊராட்சி ஆழ்துளை கிணறுகள் மூலம் இவ்வூரில் குடிநீர் விநியோகிக்கிறது. இவ்வூரில் பாண்டியன் கிராம வங்கி , இந்திய ஓவர்சீஸ் வங்கி மற்றும் கூட்டுறவு வங்கி செயல்பட்டுவருகின்றது. இவ்வூரில் அரசு ஆரம்ப சுகாதாரநிலையம் ஒன்று உள்ளது நேரிடைய[4][5][6][7]

எஸ் புதூர்
எஸ் புதூர்
அமைவிடம்: எஸ் புதூர், தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 10°19′N 78°29′E / 10.32°N 78.49°E / 10.32; 78.49
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் சிவகங்கை
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

மேற்கோள்கள்

தொகு
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-04. Retrieved 2020-10-13.
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-08-21. Retrieved 2012-01-19.
  6. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. Retrieved 2012-01-19.
  7. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. Retrieved 2012-01-19.


வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்_புதூர்&oldid=3546267" இலிருந்து மீள்விக்கப்பட்டது