ஏழை பங்காளன்

கே. சங்கர் இயக்கத்தில் 1963 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
(ஏழைப் பங்காளன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஏழை பங்காளன் 1963 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், ராகினி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

ஏழை பங்காளன்
படத்தின் தலைப்பு
இயக்கம்கே. சங்கர்
தயாரிப்புராஜலக்ஸ்மி பிக்சர்ஸ்
அயலின் மகாதேவன்
கதைமா. இலட்சுமணன்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புஜெமினி கணேசன்
ராகினி
ஒளிப்பதிவுதம்பு
படத்தொகுப்புகே. நாராயணன்
வெளியீடுதிசம்பர் 20, 1963
நீளம்4159 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

திரைக்கதை

தொகு

ஒரு பணக்கார வாலிபன், 'அண்ணல் காந்தியடிகள் தனது பிரசங்கங்களிலும், கட்டுரைகளிலும் உலக மக்களுக்குப் போதித்த உண்மைகளை ஊருக்கு ஒருவராவது பின்பற்றி நடக்க ஆரம்பித்தால், இல்லாதவர்களுக்கும் இருப்பவர்களுக்கும் இடையே இருக்கும் இடைவெளி குறைந்து, நாளடைவில் வறுமை ஒழிந்து, வளமான வாழ்வை எல்லோரும் அடைய முடியும்' என நம்புகிறான்.

இதனால் தன்னிடமுள்ள செல்வத்தின் பெரும்பகுதியை ஏழைகளை முன்னேற்றப் பயன் படுத்துகிறான். இதனால் அவன் "ஏழை பங்காளன்" என ஊரார் புகழ்ந்துரைக்கிறார்கள்.

அந்தப் பணக்கார வாலிபன் என்னென்ன செய்தான் என்பதை விளக்குவதே படத்தின் கதை.

நடிகர்கள்

தொகு

ஜெமினி கணேசன்
ராகினி
புஷ்பலதா
எம். என். நம்பியார்
எஸ். ஏ. அசோகன்
கே. பாலாஜி
டி. எஸ். முத்தையா
கே. டி. சந்தானம்
நாகேஷ்
மனோரமா
மாலதி
எம். எஸ். எஸ். பாக்கியம்
லட்சுமிபிரபா
தர்மா
எஸ். வி. ராமதாஸ்
வி. மகாலிங்கம்
ஆள்வார் குப்புசாமி
கரிக்கோல் ராஜு
ஜெமினி பாலு
குமரப்பா
பிரபாகர்
வி. பி. சாமி
தண்டபாணி
லூஸ் ஆறுமுகம்
மாரி
ராஜு

தயாரிப்பு குழு

தொகு

தயாரிப்பு: வயலின் கே. வி. மகாதேவன்
இயக்குநர்: கே. சங்கர்
கதை வசனம்: மா. லட்சுமணன்
ஒளிப்பதிவு இயக்குநர்: தம்பு
படப்பிடிப்பு: கே. எஸ். பாஸ்கர் ராவ்
படத்தொகுப்பு: கே. நாராயணன்
ஒலிப்பதிவு இயக்குநர்: டி. எஸ். ரங்கசாமி
ஒலிப்பதிவு: கே. துரைசாமி
நடன அமைப்பு: எஸ். எம். ராஜ்குமார்
சண்டைப்பயிற்சி: வி. பி. சாமி
கலை: ஏ. பாலு
ப்ராஸஸிங்: கே. பரதன்
நிழற்படம்: ஆர். பி. சாரதி
ஸ்டூடியோ: மெஜஸ்டிக்

பாடல்கள்

தொகு

ஏழை பங்காளன் படத்துக்கு இசையமைத்தவர் கே. வி. மகாதேவன். பாடல்களை யாத்தவர்கள்: கண்ணதாசன், வாலி, பஞ்சு அருணாசலம் ஆகியோர். பின்னணி பாடியவர்கள்: டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா ஆகியோர்.

எண் பாடல் பாடகர்/கள் கால அளவு (நி:செக்) பாடலாசிரியர்
1 யூடியூபில் வீட்டுக்கு வந்த மச்சான் பி. சுசீலா 04:46 வாலி
2 யூடியூபில் முட்டையை விட்டு டி. எம். சௌந்தரராஜன் 03:22 கண்ணதாசன்
3 விளக்கு எரிகின்றது டி. எம். சௌந்தரராஜன் 04:54 கண்ணதாசன்
4 யூடியூபில் மனதில் என்ன மயக்கம் டி. எம். சௌந்தரராஜன்
பி. சுசீலா
04:54 பஞ்சு அருணாசலம்
5 யூடியூபில் தாயாக மாறவா டி. எம். சௌந்தரராஜன் 02:51 பஞ்சு அருணாசலம்
6 ஊரழுத வேளையிலே ... ஏழை பங்காளன் இவனே டி. எம். சௌந்தரராஜன் வாலி

மேற்கோள்கள்

தொகு
  1. "1963 – ஏழை பங்காளன்". Archived from the original on 2019-01-19. பார்க்கப்பட்ட நாள் 2016-10-09.

உசாத்துணை

தொகு

ஏழை பங்காளன் பாட்டுப் புத்தகம்

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏழை_பங்காளன்&oldid=3949317" இலிருந்து மீள்விக்கப்பட்டது