ஐஎன்ஜி வைசியா வங்கி
ஐஎன்ஜி வைசியா வங்கி இந்தியாவின் பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு செயற்பட்டுவந்த தனியார் வங்கியாகும். வணிக சேவைகள், தனிநபர் வங்கி உள்ளிட்ட சேவைகளை வழங்கிவந்தது, 1930 முதல் இந்தியாவில் செயல்பட்டுவந்த வைசியா வங்கியினை டச்சு நிறுவனமான ஐஎன்ஜி குழுமம் 2002 ஆம் ஆண்டு வாங்கியதன் மூலம் ஐஎன்ஜி வைசியா வங்கி என்று பெயர் மாற்றப்பட்டது. ஒரு இந்திய வங்கியுடன், ஒரு வெளிநாட்டு வங்கி இணைந்தது இதுவே முதல் முறையாகும்.[3] நவம்பர் 20, 2014, இல் ஐ.என்.ஜி வைசியா வங்கியை கோடக் மகிந்தரா வங்கியுடன் இணைக்க முடிவெடுத்தனர். இதனால் கோடாக் மகேந்திரா வங்கி இந்தியாவின் நான்காவது பெரிய தனியார்துறை வங்கியாக மாறியது.[4] 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இந்திய ரிசர்வ் வங்கி இந்த இணைப்புக்கு ஒப்புதல் வழங்கியது.[5]
வகை | பொதுப் பங்கு நிறுவனம் முபச: 531807 |
---|---|
நிறுவுகை | 2002 (தொடக்கம் 1930 வைசியா வங்கி என) |
தலைமையகம் | பெங்களூர், இந்தியா |
முதன்மை நபர்கள் | .சைலேந்திர பண்டாரி (முதன்மை செயல் அதிகாரி, நிர்வாக இயக்குநர்) உதய் சரீன் (துணை முதன்மை செயல் அதிகாரி) அருண் தியாகராஜன் (தலைவர்) |
தொழில்துறை | வங்கித்தொழில் நிதிச் சேவைகள் காப்பீடு |
வருமானம் | ₹ 5588 கோடிகள் [1] |
மொத்தச் சொத்துகள் | ₹ 54836 கோடிகள் [1] |
பணியாளர் | 10,000க்கும் அதிகமானவர்கள்[2]
மொத்த கிளைகள் : 527[2] தானியங்கி பணவழங்கிகள் : 405 விரிவாக்க மையங்கள்: 10 |
இணையத்தளம் | ING Vysya Bank |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2014-05-14. பார்க்கப்பட்ட நாள் 2015-09-02.
- ↑ 2.0 2.1 ING Vysya - ING Vysya Bank - Personal Banking பரணிடப்பட்டது 2013-08-06 at the வந்தவழி இயந்திரம். ING Vysya Bank. Retrieved on 6 December 2013.
- ↑ http://www.livemint.com/2011/11/04000353/Shailendra-Bhandari--People-d.html
- ↑ "ING Vysya Bank to merge with Kotak Mahindra Bank". thehindu.com. பார்க்கப்பட்ட நாள் 21 November 2014.
- ↑ "Kotak Mahindra, ING Vysya extend gains after RBI approves amalgamation". Business Standard. 6 April 2015. http://www.business-standard.com/article/news-cm/kotak-mahindra-ing-vysya-extend-gains-after-rbi-approves-amalgamation-115040600648_1.html. பார்த்த நாள்: 12 April 2015.