ஐசுலாந்திய ஏர்லைன்சு பறப்பு எண் 001

விமான விபத்துகளுல் ஒன்று

ஐசுலாந்திய ஏர்லைன்சு எல்எல் 001 (Icelandic Airlines Flight 001), ஓர் ஒப்பந்த வான்பறப்பு, நவம்பர் 15, 1978 அன்று இலங்கையின் கொழும்பு வானூர்தி நிலையத்தில் இறங்க ஓடுபாதையை எட்டும்போது தரையில் மோதி விபத்திற்குள்ளானது. விபத்திற்குள்ளான டக்ளஸ் டிசி-8 வானூர்தியில் இருந்த 13 ஐசுலாந்திய பணியாளர்களில், 8 பேரும் மாற்றுப் பணியாளர்கள் 5 பேரும் 262 பயணிகளில் தெற்கு போர்னியோவைச் சேர்ந்த 170 (பெரும்பாலும் இந்தோனேசிய) முஸ்லிம் புனிதப்பயணிகளும் உயிரிழந்தனர். இலங்கை அதிகாரிகள் விடுத்த அலுவல்முறை அறிக்கையில் விபத்திற்கான காரணமாக வானூர்தி ஓட்டுநர்கள் இறங்குவதற்கான செய்முறைகளை சரியாகக் கடைபிடிக்காதது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் ஐக்கிய அமெரிக்க மற்றும் ஐசுலாந்திய அலுவலர்கள் கோளாறான வானூர்தி நிலையக் கருவிகளும் வான் போக்குவரத்து கட்டுப்பாடு பிழையுமே விபத்திற்கான காரணமாக குறிப்பிடுகின்றனர். ஐசுலாந்திய வான்வழிப் போக்குவரத்தில் இதுவே மிக மோசமான விபத்தாகும்.

ஐசுலாந்திய ஏர்லைன்சு பறப்பு எண் 001
விபத்திற்குள்ளான டிசி-8 போன்ற வானூர்தி.
விபத்து சுருக்கம்
நாள்நவம்பர் 15, 1978
சுருக்கம்கட்டுப்பாட்டில் இருந்த வானூர்தி தரைப்பரப்பில் மோதல்
இடம்கட்டுநாயக்கே, இலங்கை
பயணிகள்249
ஊழியர்13
காயமுற்றோர்32
உயிரிழப்புகள்183
தப்பியவர்கள்79
வானூர்தி வகைடக்ளஸ் டிசி-8
இயக்கம்ஐசுலாந்திய வான்சேவை நிறுவனம் (கருடா இந்தோனேசியா)
வானூர்தி பதிவுTF-FLA
பறப்பு புறப்பாடுஜித்தா பன்னாட்டு வானூர்தி நிலையம், ஜித்தா, சவூதி அரேபியா
சேருமிடம்பண்டாரநாயக்க பன்னாட்டு வானூர்தி நிலையம், கொழும்பு, இலங்கை

சவூதி அரேபியாவின் ஜித்தாவிலிருந்து இந்தோனேசியாவின் சுராபயாவிற்கு இந்தப் பறப்பு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. எரிபொருள் நிரப்பவும் மாற்றுப் பணியாளர்கள் பொறுப்பேற்கவும் கொழும்பு-பண்டாரநாயக்க பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் தரை இறங்கியது. இறங்குகின்ற வேளையில் அப்பகுதியில் இடிமின்னற்புயல், காற்று நறுக்கம் இருந்ததும் சிக்கலாக இருந்தன.

வானூர்தி தொகு

விபத்திற்குள்ளான வானூர்தி டக்ளஸ் டிசி-8 வானூர்தியாகும்; ஹஜ் இயக்கத்திற்காக இது ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. வானூர்தியின் உரிமப் பதிவெண் TF-FLA, மற்றும் அதன் பெயர் லீஃபர் எரிக்சன் ("Leifur Eiríksson") ஆகும்.

மேற்சான்றுகளும் வெளி இணைப்புகளும் தொகு