ஐசுவர்யா ரசினிகாந்த்

பின்னணிப் பாடகி

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷ் (பிறப்பு 1 சனவரி 1982) ஓர் இந்தியத் திரைப்பட இயக்குநர், பின்னணிப் பாடகி மற்றும் நடனக்கலைஞரும் ஆவார். இவர் நன்கறியப்பட்ட இந்தியத் திரைப்பட நடிகர் ரஜினிகாந்த்தின் மூத்த மகளும், நடிகர் தனுசின் மனைவியும் ஆவார். தனது கணவர் தனுஷ் நடித்த 3 (2012) திரைப்படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமானார்.

ஐசுவர்யா ரஜினிகாந்த் தனுஷ்
பிறப்பு1 சனவரி 1982 (1982-01-01) (அகவை 42)
சென்னை, தமிழ்நாடு,
 இந்தியா
பணிஇயக்குநர், நடனமாடுபவர், பின்னணிப் பாடகி
செயற்பாட்டுக்
காலம்
2003– தற்போது வரை
பெற்றோர்ரஜினிகாந்த்
லதா ரஜினிகாந்த்
வாழ்க்கைத்
துணை
தனுஷ் (2004 – 2022 வரை)[1]
பிள்ளைகள்2
உறவினர்கள்சௌந்தர்யா ரஜினிகாந்த் (சகோதரி)

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

சொந்த வாழ்க்கை

தொகு

ஐசுவர்யா, நடிகர் ரஜினிகாந்த் - லதா இணையருக்கு முதலாவது மகளாகப் பிறந்தார்.[2][3] இவரது இளைய சகோதரி சௌந்தர்யாவும் தமிழ்த் திரைப்படங்களில் பங்காற்றி வருகிறார்.[4] இவர், நடிகர் தனுசை திருமணம் செய்து கொண்டார்,[5] இவர்களுக்கு யாத்ரா (பிறப்பு 2006), லிங்கா (பிறப்பு 2010) என்ற இரு ஆண் குழந்தைகள் உள்ளனர்.[3][6]

திரை வாழ்க்கை

தொகு

விஜய் தொலைக்காட்சியின் நடனப் போட்டி நிகழ்ச்சியான ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியின் மூன்றாவது பகுதியில் ஜீவா, சங்கீதா, ஆகியோருடன் இணைந்து நடுவராகப் பங்கேற்றார்.[7] 2003 ஆம் ஆண்டில் வெளியான விசில் திரைப்படத்தில் சிலம்பரசனுடன் இணைந்து பாடிய பாடலின் மூலமாக பின்னணிப் பாடகியாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து 2010 ஆவது ஆண்டில் வெளியான ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியதுடன் அப்படத்தில் இடம்பெற்ற உன்மேல ஆசைதான் பாடலையும் பாடியிருந்தார்.

திரைப்பட விபரம்

தொகு

இயக்குனராக

தொகு
ஆண்டு திரைப்படம் மொழி குறிப்புகள்
2012 3 (திரைப்படம்) தமிழ் பரிந்துரை, சிறந்த அறிமுக இயக்குனருக்கான தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது
2015 வை ராஜா வை தமிழ்
2024 லால் சலாம் தமிழ்

பின்னணிப் பாடகியாக

தொகு
ஆண்டு பாடல் திரைப்படம் குறிப்புகள்
2003 நட்பே நட்பே விசில்
2010 உன் மேல ஆசை தான் ஆயிரத்தில் ஒருவன் பரிந்துரை, —சிறந்த பின்னணிப் பாடகிக்கான பிலிம்பேர் விருது - தமிழ் (ஆண்ட்ரியா ஜெராமையா உடன்)

பின்னணிக் குரல் தருபவராக

தொகு
ஆண்டு நடிகை திரைப்படம் குறிப்புகள்
2010 ரீமா சென் ஆயிரத்தில் ஒருவன்

பெற்ற விருதுகள்

தொகு

இவர், தமிழக அரசின் கலைமாமணி விருதை நடனத்திற்காக பெற்றுள்ளார்.[சான்று தேவை]

மேற்கோள்கள்

தொகு
  1. @dhanushkraja (17 சனவரி 2022). "Official announcement from Twitter profile of Dhanush" (Tweet).
  2. "70 persons get Kalaimamani awards". The Hindu. 2009-02-25 இம் மூலத்தில் இருந்து 2011-01-30 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110130005942/http://www.hindu.com/2009/02/25/stories/2009022554160400.htm. பார்த்த நாள்: 2009-04-19. 
  3. 3.0 3.1 "Rajinikanth turns grandpa". The Hindu. 2006-10-12 இம் மூலத்தில் இருந்து 2007-02-17 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070217100314/http://www.hindu.com/2006/10/12/stories/2006101205680200.htm. பார்த்த நாள்: 2009-04-19. 
  4. Muthalaly, Susan (2005-07-01). "Silken choices to colour your hair". The Hindu இம் மூலத்தில் இருந்து 2005-07-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20050718073906/http://www.hindu.com/2005/07/01/stories/2005070103600200.htm. பார்த்த நாள்: 2009-04-19. 
  5. "It is an all women drive". The Hindu. 2008-08-05 இம் மூலத்தில் இருந்து 2008-08-08 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080808042532/http://www.hindu.com/2008/08/05/stories/2008080550630300.htm. பார்த்த நாள்: 2009-04-19. 
  6. வார்ப்புரு:Twitter status
  7. "Serials". The Hindu. 2008-09-26 இம் மூலத்தில் இருந்து 2008-09-27 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080927045600/http://www.hindu.com/cp/2008/09/26/stories/2008092650311400.htm. பார்த்த நாள்: 2009-04-19. 

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐசுவர்யா_ரசினிகாந்த்&oldid=3955611" இலிருந்து மீள்விக்கப்பட்டது