ஐசோக்சசோல்
ஐசோக்சசோல் (Isoxazole) என்பது C3H3NO என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இதுவோர் அசோல் சேர்மம் என வகைப்படுத்தப்படுகிறது. இச்சேர்மத்தில் அசோலுடன் நைட்ரசனை அடுத்து ஓர் ஆக்சிசன் இடம் பெற்றிருக்கும். இத்தகைய வளையங்களைப் பெற்றுள்ள சேர்மங்கள் என்றும் இதை வகைப்படுத்துகிறார்கள். ஐசோக்சசோலிலிருந்து வழிப்பெறுதியாக வரவழைக்கப்பட்ட ஒற்றை இணைதிற தனியுறுப்பு ஐசோக்சசோலைல் எனக் கருதப்படுகிறது.
| |||
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
ஐயூபிஏசி பெயர்
1,2-ஆக்சசோல்
| |||
வேறு பெயர்கள்
ஐசோக்சசோல்
| |||
இனங்காட்டிகள் | |||
288-14-2 | |||
ChEBI | CHEBI:35595 | ||
ChEMBL | ChEMBL13257 | ||
ChemSpider | 8897 | ||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
பப்கெம் | 9254 | ||
| |||
பண்புகள் | |||
C3H3NO | |||
வாய்ப்பாட்டு எடை | 69.06202 கி/மோல் | ||
அடர்த்தி | 1.075 கி/மி.லி | ||
கொதிநிலை | 95 °C (203 °F; 368 K) | ||
காடித்தன்மை எண் (pKa) | -3.0 (இணை அமிலம்) [1] | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
ஐபோடெனிக் அமிலம், முசிமோல் உள்ளிட்ட சில இயற்கைப் பொருட்களில் ஐசோக்சசோல் வளையங்கள் காணப்படுகின்றன. காக்சு-2 தடுப்பியான வால்டிகாக்சிப் (பெக்சுட்ரா) உள்ளிட்ட எண்ணற்ற மருந்துகள் தயாரிப்புக்கும், ஆம்பா என்று சுருக்கியழைக்கப்படும் α-அமினோ-3-ஐதராக்சி-5-மெத்தில்-4-ஐசோக்சசோல்புரோப்பியானிக் அமிலம் என்ற நரம்புக்கடத்தி முன்னோடிக்கும் ஐசோக்சசோல் சேர்மமே அடிப்படையாகும். பியூராக்சான் என்ற வழிப்பெறுதியானது ஒரு நைட்ரிக் அமில வழங்கியாகும். ஐசோக்சசோலைல் தொகுதியானது குளோக்சாசில்லின், டைகுளோக்சாசில்லின், புளு குளோக்சாசில்லின் உள்ளிட்ட பல பீட்டா-லாக்டமேசு-தடுப்பு நுண்மக் கொல்லிகளில் காணப்படுகிறது. லெபுளுனோமைடு என்ற மருந்து ஒரு ஐசோக்சசோல் வழிப்பெறுதி மருந்தாகும்.
ஐசோக்சசோல் வளையங்களைக் கொண்டிருக்கும் வளர்வினை ஊக்கிகளுக்கு உதாரணமாக தானாசோல், ஆண்ட்ரோய்சோக்சசோல் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
இவற்றையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Zoltewicz, J. A. & Deady, L. W. Quaternization of heteroaromatic compounds. Quantitative aspects. Adv. Heterocycl. Chem. 22, 71-121 (1978).