ஐசோ அமைல் ஆல்ககால்

ஐசோ அமைல் ஆல்கஹால் ( வேறு பெயர் : ஐசோ பென்டைல் ஆல்கஹால் ) , வாழைப்பழ எண்ணெய் உற்பத்தியின் போது பயன

ஐசோ அமைல் ஆல்ககால் (Isoamyl alcohol) என்பது C5H12O என்ற வாய்ப்பாட்டைக் கொண்ட கரிம வேதியியல் சேர்மம் ஆகும். ஐசோபென்டைல் ஆல்ககால் என்ற பெயராலும் இதை அழைக்கிறார்கள். இதனுடைய அமைப்பு வாய்ப்பாடு (CH3)2CHCH2CH2OH ஆகும். தெளிவான நிறமற்ற ஆல்ககாலான இச்சேர்மம் அமைல் ஆல்ககாலின் பல்வேறு மாற்றியங்களில் ஒன்றாகும். ஐசோ அமைல் அசிட்டேட்டு எனப்படும் வாழைப்பழ எண்ணெய் உற்பத்தியில் இது முக்கியமான பகுதிப்பொருளாக உள்ளது. இயற்கையில் கிடைக்கும் எசுத்தரான ஐசோ அமைல் அசிட்டேட்டை சுவைமண வேதிப்பொருளாக தொழிற்சாலைகளில் தயாரிக்கிறார்கள். பாக்டீரியாக்களை ஆய்ந்தறியும் இண்டோல் சோதனையில் பயன்படும் கோவேக் வினைப்பொருளின் ஒரு பகுதிப்பொருளாகவும் ஐசோ அமைல் ஆல்ககால் காணப்படுகிறது.

ஐசோ அமைல் ஆல்ககால்[1]
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
3-மெத்தில்பியூட்டேன்-1-ஆல்
வேறு பெயர்கள்
3-மெத்தில்-1-பியூட்டேனால்
ஐசோபென்டைல் ஆல்ககால்
ஐசோபென்டனால்
ஐசோபியூட்டைல்கார்பினால்
இனங்காட்டிகள்
123-51-3 Y
ChEBI CHEBI:15837 Y
ChEMBL ChEMBL372396 Y
ChemSpider 29000 Y
DrugBank DB02296 Y
InChI
  • InChI=1S/C5H12O/c1-5(2)3-4-6/h5-6H,3-4H2,1-2H3 Y
    Key: PHTQWCKDNZKARW-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C5H12O/c1-5(2)3-4-6/h5-6H,3-4H2,1-2H3
    Key: PHTQWCKDNZKARW-UHFFFAOYAW
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C07328 Y
பப்கெம் 31260
  • OCCC(C)C
பண்புகள்
C5H12O
வாய்ப்பாட்டு எடை 88.148 கி/மோல்
தோற்றம் தெளிவான நிறமற்ற நீர்மம்
மணம் ஏற்புடையதல்ல[2]
அடர்த்தி 0.8104 கி/செ.மீ3 20 °செல்சியசில்
உருகுநிலை −117[3][2] °C (−179 °F; 156 K)
கொதிநிலை 131.1 °C (268.0 °F; 404.2 K)
சிறிதளவு கரையும், 28 கி/லி
கரைதிறன் அசிட்டோன், டை எத்தில் ஈதர், எத்தனால் ஆகியவற்றில் நன்கு கரையும்
ஆவியமுக்கம் 28 மி.மீபாதரசம் (20°செல்சியசு)[2]
-68.96•10−6 செ.மீ3/மோல்
பிசுக்குமை 3.692 மெகா பாசுக்கல்
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
-356.4 மோலுக்கு கிலோயூல்−1 (நீர்மம்)
-300.7 மோலுக்கு கிலோயூல் −1 (வாயு)
வெப்பக் கொண்மை, C 2.382 யூ•கி−1•K−1
தீங்குகள்
தீப்பற்றும் வெப்பநிலை 43 °C (109 °F; 316 K)
Autoignition
temperature
350 °C (662 °F; 623 K)
வெடிபொருள் வரம்புகள் 1.2 – 9%
Lethal dose or concentration (LD, LC):
3438 மி.கி/கி.கி (முயல், வாய்வழி)
1300 மி.கி/கி.கி (எலி,வாய்வழி)[4]
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்:
அனுமதிக்கத்தக்க வரம்பு
TWA 100 மில்லியனுக்குப் பகுதிகள் (360 மி.கி/மீ3)[2]
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
TWA 100 மில்லியனுக்குப் பகுதிகள் (360 மி.கி/மீ3) ST 125 மில்லியனுக்குப் பகுதிகள் (450 மி.கி/மீ3)[2]
உடனடி அபாயம்
500 மில்லியனுக்குப் பகுதிகள்[2]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

ஐசோ அமைல் ஆல்ககால் முகவராக குளோரோஃபார்மில் நுரைநீக்கும் முகவராகவும் பயன்படுத்தப்படுகிறது [5].

நீர்ம-நீர்ம பிரித்தெடுத்தல் வகை தொழில்நுட்பமான பீனால்-குளோரோஃபார்ம் தொழில்நுட்பத்தில் அமைல் ஆல்ககால் பயன்படுத்தப்படுகிறது. குளோரோபார்முடன் இவ்வடிநீரை சேர்ப்பதால் ரிபோநியூக்ளியேசின் செயல்பாடு தடுக்கப்படுகிறது. மேலும் பாலி-அடினினின் நீண்ட செயல்பாட்டில் ரிபோநியூக்ளியேசின் கரைதிறனும் பாதுகாக்கப்படுகிறது [6].

உணவு பண்டங்களுக்கு மணமூட்டும் கருப்புக் காளானான டியூபர்மெலானோசிபோரத்தின் பகுதிப்பொருள்களில் ஒன்றாகவும் அமைல் ஆல்ககால் உள்ளது. தாக்குவதற்காக கூட்டிலுள்ள பிற உறுப்பினர்களை ஈர்க்க குளவிகள் பயன்படுத்தும் பெரோமோன்களில் ஒரு வேதிப்பொருளாக காணப்படுவதாக அமைல் ஆல்ககால் அறியப்பட்டுள்ளது [7].

மேற்கோள்கள்

தொகு
  1. Lide, David R., ed. (1998). Handbook of Chemistry and Physics (87 ed.). Boca Raton, Florida: CRC Press. pp. 3–374, 5–42, 6–188, 8–102, 15–22. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-0487-3.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0348". National Institute for Occupational Safety and Health (NIOSH).
  3. Straka, M.; van Genderen, A.; Růžička, K.; Růžička, V. Heat Capacities in the Solid and in the Liquid Phase of Isomeric Pentanols. J. Chem. Eng. Data 2007, 52, 794-802.
  4. "Isoamyl alcohol". Immediately Dangerous to Life and Health. National Institute for Occupational Safety and Health (NIOSH).
  5. Zumbo, P. "Phenol-chloroform Extraction" (PDF). WEILL CORNELL MEDICAL COLLEGE P. ZUMBO LABORATORY OF CHRISTOPHER E. MASON, PH.D. பார்க்கப்பட்ட நாள் 19 June 2014.
  6. Green, Michael; Sambrook, Joseph. "Purification of Nucleic Acids: Extraction with Phenol-Chloroform". Molecular Cloning: A Laboratory Manual. Cold Spring Harbor Laboratory Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1936113422.
  7. Wilson, Calum & Davies, Noel & Corkrey, Ross & J. Wilson, Annabel & M. Mathews, Alison & C. Westmore, Guy. (2017). Receiver Operating Characteristic curve analysis determines association of individual potato foliage volatiles with onion thrips preference, cultivar and plant age. PLOS ONE. 12. e0181831. 10.1371/journal.pone.0181831.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐசோ_அமைல்_ஆல்ககால்&oldid=2549744" இலிருந்து மீள்விக்கப்பட்டது