ஐதராக்சிலமோனியம் சல்பேட்டு
ஐதராக்சிலமோனியம் சல்பேட்டு (Hydroxylammonium sulfate) என்பது (NH3OH)2SO4 ஐதராக்சில்அமீனின் சல்பூரிக் அமிலத்தின் உப்பு ஆகும். இது முதன்மையாக எளிதில் கையாளக்கூடிய ஐதராக்சில்அமீனின் வடிவமாகப் பயன்படுத்தப்படுகிறது, இது தூய்மையான நிலையில் வெடிக்கும் தன்மையுடையது.
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
ஐதராக்சிலமீன் சல்பேட்டு
| |
இனங்காட்டிகள் | |
10039-54-0 | |
ChEMBL | ChEMBL3183215 |
ChemSpider | 23229 |
EC number | 233-118-8 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 24846 |
வே.ந.வி.ப எண் | NC5425000 |
| |
UNII | 49KP498D4O |
UN number | 2865 |
பண்புகள் | |
H8N2O6S | |
வாய்ப்பாட்டு எடை | 164.14 கி/மோல் |
தோற்றம் | வெண்ணிற படிகத்திலிருந்து நுண்ணிய விளைபொருள், சிறிதளவு நீர் உறிஞ்சும் தன்மை உடையது |
அடர்த்தி | 1.88 கி/செமீ3 |
உருகுநிலை | 120 °C (248 °F; 393 K) சிதைவுறுகிறது |
58.7 கி/100 மிலி (20°செல்சியசு) | |
தீங்குகள் | |
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | External MSDS |
GHS pictograms | |
GHS signal word | எச்சரிக்கை |
H290, H302, H312, H315, H317, H319, H351, H373, H400, H412 | |
P201, P202, P234, P260, P261, P264, P270, P272, P273, P280, P281, P301+312, P302+352, P305+351+338 | |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | ஐதராக்சிலமோனியம் நைட்ரேட்டு ஐதராக்சிலமோனியம் குளோரைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | அம்மோனியம் சல்பேட்டு ஐதரசீனியம் சல்பேட்டு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தொகுப்பு
தொகுஐதராக்சிலமோனியம் சல்பேட்டானது சல்பூரிக் அமிலத்துடன் ஐதராக்சிலமீனின் அமில-கார வினை மூலம் பெறப்படுகிறது:
- 2NH2OH (aq) + H2SO4 (aq) → (NH3OH)2 SO4 (aq)
பயன்பாடுகள்
தொகுஆல்டிஹைடுகள் மற்றும் கீட்டோன்களை ஆக்சைம்களாக மாற்றுதல் கார்பாக்சிலிக் அமிலங்கள் மற்றும் அவற்றின் வழிப்பொருட்களை (எ.கா. எசுத்தர்கள்) ஐதராக்சமிக் அமிலங்களாக, ஐசோசயனேட்டுகளை N-ஐதராக்சியூரியாக்களாக மற்றும் நைட்ரைல்களை அமிடோஆக்சைம்களாக மாற்ற உதவும் கரிம தொகுப்புகளில் ஐதராக்சில்அம்மோனியம் சல்பேட்டு பயன்படுத்தப்படுகிறது. ஐதராக்சிலமோனியம் சல்பேட்டு ஒலீயம் அல்லது குளோரோசல்பூரிக் அமிலத்திலிருந்து ஐதராக்சிலமீன்-ஓ-சல்போனிக் அமிலத்தை உருவாக்க பயன்படுகிறது.
ஐதராக்சிலமோனியம் சல்பேட்டு தோல் அழற்சி எதிர்ப்புக் காரணிகள், மருந்துகள், இரப்பர், ஜவுளி, நெகிழி மற்றும் சவர்க்காரம் ஆகியவற்றின் உற்பத்தியில் பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு தீவிரமான தோட்டிச் சேர்மமாகும். இது தீவிர பலபடியாக்கல் வினைகளில் தடுப்பியாகவும், இயற்கை ரப்பரில் ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகிறது. (NH 3 OH) 2 SO 4 என்பது சில பூச்சிக்கொல்லிகள், களைக்கொல்லிகள் மற்றும் வளர்ச்சி கட்டுப்பாட்டாளர்களுக்கான தொடக்கப் பொருளாகும். இது வண்ண உருவாக்குநர்களுக்கான நிலைப்படுத்தியாகவும், புகைப்படக் குழம்புகளில் சேர்க்கைப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது . இது கிருமி நாசினிகள், மயக்க மருந்துகள், மயக்க மருந்துகள், உயர் இரத்த சர்க்கரைக்கான மருந்துகள், காயம் தொற்று தடுப்பான்கள், மலேரியா எதிர்ப்பு மருந்துகள், நீரிழிவு மருந்துகள் மற்றும் பிற தயாரிப்புகளுக்கான மூலப்பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. ஐதராக்சிலமீன் சல்பேட்டை ஒடுக்க வினைக்குட்படுத்தி உலோக அணைவுச் சேர்மங்களை உருவாக்கும் திறன் காரணமாக, இச்சேர்மம் ஒரு உலோக மேற்பரப்பு சிகிச்சைக் காரணியாகப் பயன்படுத்தப்படுகிறது.
சிதைவு
தொகு120 °செல்சியசில், ஐதராக்சிலமோனியம் சல்பேட்டு கந்தக டிரையாக்சைடு, நைட்ரஸ் ஆக்சைடு, நீர் மற்றும் அம்மோனியாவாக சிதைவடையத் தொடங்குகிறது:
- 2(NH3OH)2SO4 → 2SO3 + N2O + 2NH3 + 5H2O
இந்த வினையானது 138° செல்சியசு வெப்பநிலைக்கு மேலே வெப்பம் விடு வினையாகவும் மற்றும் 177° செல்சியசு வெப்பநிலைக்கு மேலே மிகு வெப்ப விடு வினையாகவும் உள்ளது.[1] உலோகங்கள் (குறிப்பாக தாமிரம், அதன் உலோகக்கலவைகள் மற்றும் உப்புக்கள்) ஐதராராக்சிலமோனியம் சல்பேட்டின் சிதைவை ஊக்குவிக்கின்றன. இந்த சேர்மத்தின் நிலையற்ற தன்மை முக்கியமாக ஐதராக்சிலலமோனியம் அயனியின் பலவீனமான நைட்ரஜன் ஆக்ஸிஜன் ஒற்றை பிணைப்பால் ஏற்படுகிறது.
நச்சியல்
தொகுதோலோடு ஏற்படும் தொடர்பின் காரணமாக எரிச்சலூட்டும் தன்மையையும், அரிக்கும் தன்மையினையும் கொண்டது. மெத்தெமோகுளோபினிமீயாவை ஏற்படுத்தக்கூடும். உட்கொள்வது அல்லது சுவாசத்தின் மூலமாக உள்ளிழுப்பது உடல் நலக்குறைவிலிருந்து இறப்பு வரை ஏற்படுத்தக்கூடும். நீர் வாழ் உயிரினங்களுக்கு மிகுந்த நச்சுத்தன்மை வாய்ந்தது. போதுமான காற்றோட்டமான சூழ்நிலையில் பயன்படுத்தப்பட வேண்டும். இச்சேர்மம் உலோகங்களை அரிக்கும் தன்மையுடையது. வலிமையான ஆக்சிசனேற்றிகளின் அருகாமையில் இச்சேர்மம் சேகரித்து வைக்கப்படக்கூடாது. இச்சேர்மம் மனிதர்களில் புற்றுநோயை ஏற்படுத்தும் காரணியாக மதிப்பிடப்படவில்லை.
பாதுகாப்பு நடவடிக்கைகள்
தொகுசுவாசிக்க நேர்ந்தால் பாதிக்கப்பட்ட நபர் நன்கு சுவாசிக்குமளவிற்கு காற்றோட்டமான இடத்திற்கு கொண்டு வரவேண்டும். சுவாசம் இல்லையென்றால் செயற்கை சுவாசம் அளிக்கப்பட வேண்டும். சுவாசம் சிரமமானதாக இருந்தால் ஆக்சிசன் கொடுக்க வேண்டும். மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும். வாய்வழியாக உட்கொண்டால், அதிக அளவிான நீரைக் குடிக்கச் செய்ய வேண்டும். வாந்தி எடுப்பதற்குத் தூண்டக் கூடாது. மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும். தோலில் பட்டால் 15 நிமிடம் ஓடும் நீரில் கழுவ வேண்டும். ஆடைகளைக் கழற்ற வேண்டும். மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும். கண்களில் பட்டால் மென்மையாகவும், அதிகமான நீரைப் பயன்படுத்தியும் கழுவ வேண்டும். மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.[2]