ஐரோப்பிய காற்பந்துச் சங்கங்களின் ஒன்றியம்

(ஐரோப்பிய காற்பந்து சங்கங்களின் ஒன்றியம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஒன்றியம் (Union of European Football Associations, பிரெஞ்சு மொழி: Union des Associations Européennes de Football,[3] பரவலான இதன் சுருக்கம் யூஈஎஃப்ஏ ) ஐரோப்பாவில் கால் பந்தாட்டத்திற்கான நிருவாக அமைப்பாகும். 53 தேசிய கால்பந்து சங்கங்கள் இதில் அங்கம் வகிக்கின்றன. இந்த அமைப்பு ஐரோப்பாவின் தேசிய கால்பந்து சங்கங்களின் சார்பாக பன்னாட்டு விளையாட்டு அமைப்புகளில் சயல்படுகிறது. தவிர, தேசிய சங்கபோட்டிகளை நடத்துவதையும், பரிசுத்தொகைகள், ஊடக உரிமங்கள் மற்றும் பிற விதிமுறைகளைக் கட்டுப்படுத்துகிறது. யூஏஃபா ஐரோப்பிய சாம்பியன்ஷிப், யூஏஃபா தேசங்களின் லீகு, யூஏஃபா சாம்பியன்சு லீகு, யூஏஃபா யூரோப்பா லீகு, யூஏஃபா யூரோப்பா கான்ஃபரன்சு லீகு, யூஏஃபா சூப்பர் கோப்பை முதலிய போட்டிகளையும் நடத்தி வருகிறது.

ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஒன்றியம்
சுருக்கம்யூஈஎஃப்ஏ
உருவாக்கம்15 சூன் 1954; 69 ஆண்டுகள் முன்னர் (1954-06-15)
வகைவிளையாட்டு அமைப்பு
தலைமையகம்சுவிட்சர்லாந்து நியோன், சுவிட்சர்லாந்து
ஆள்கூறுகள்46°22′16″N 6°13′52″E / 46.371009°N 6.23103°E / 46.371009; 6.23103
சேவை பகுதி
ஐரோப்பா
உறுப்பினர்கள்
53 உறுப்பினர் சங்கங்கள்
ஆட்சி மொழி
ஆங்கிலம், பிரான்சியம், இடாய்ச்சு
தலைவர்
சுலோவீனியா அலெக்சாந்தெர் ச்செஃபெரின்[1]
துணைத் தலைவர்
சுவீடன் கார்ள் எரிக் நீல்சன் [1]
பொதுச் செயலாளர்
இத்தாலி தெயோதோர் தெயோதோரிதிஸ் [2]
மைய அமைப்பு
யூஈஎஃப்ஏ காங்கிரசு
தாய் அமைப்பு
ஃபிஃபா
வலைத்தளம்www.UEFA.com

யூஈஃப்ஏ 1954ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்தின் பாசல் நகரில் துவங்கியது. எப்பெ சுவார்ட்சு முதல் தலைவராகவும் ஆன்றி டிலௌனய் முதல் பொதுச் செயலாளராகவும் பணியாற்றினர். தற்போது தலைவராக முன்னாள் சுலோவேனிய காற்பந்து சங்க தலைவராக இருந்த அலெக்சாந்தெர் செஃபெரின் பணியாற்றுகிறார்.

மேலும் பார்க்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 http://www.uefa.com/uefa/aboutuefa/organisation/executivecommittee/index.html
  2. http://www.uefa.com/uefa/aboutuefa/organisation/generalsecretary/index.html
  3. "History – Overview". uefa.com. UEFA. பார்க்கப்பட்ட நாள் 15 மார்ச்சு 2010. {{cite web}}: External link in |work= (help))

வெளி இணைப்புகள் தொகு