ஐரோலி பாலம்
ஐரோலி பாலம் (Airoli Bridge) என்பது இந்தியாவின் மும்பை பெருநகர பகுதியில் அமைந்துள்ள ஒரு பாலம் ஆகும். இப்பாலம் மும்பை மற்றும் நவி மும்பை பகுதிகளை நேரடிச் சாலை மூலம் இணைப்பதற்காக கட்டப்பட்ட பாலமாகும்[1]. இப்பாலத் திட்டம் ஆப்கான் உள்கட்டமைப்பு நிறுவனத்தைச் சார்ந்த சுபோத் வி கமாட் என்பவரால் கட்டப்பட்டது. 1.03 கிலோமீட்டர் நீளமுள்ள இப்பாலம் ஐரோலி மற்றும் தானே-பெலாபூர் பகுதிகளின் வளர்ச்சிக்கு வித்திட்டது. மும்பை மாநில சாலை மேம்பாட்டு நிறுவனம் இப்பாலத்தைப் பயன்படுத்த பாதை வரியை வசூலித்தது.[2]
ஐரோலி பாலம் Airoli Bridge ऐरोली पूल | |
---|---|
ஐரோலி பாலம் வானில் இருந்து தோற்றம் | |
ஆள்கூற்று | 19°09′03″N 72°58′50″E / 19.1507°N 72.9805°E |
வாகன வகை/வழிகள் | சாலைப் போக்குவரத்து |
கடப்பது | தானே நுழைவிடம் |
இடம் | மூலுண்டு, மும்பை மற்றும் ஐரோலி, நவி மும்பை |
அதிகாரபூர்வ பெயர் | ஐரோலி பாலம் |
பராமரிப்பு | மகாராட்டிர மாநில சாலை மேம்பாட்டு நிறுவனம் |
Characteristics | |
வடிவமைப்பு | பலகம் மற்றும் உத்தரப் பாலம் |
மொத்த நீளம் | 3,850 meters (12,630 ft) |
அதிகூடிய தாவகலம் | 1,030 meters (3,379 ft) |
தாவகல எண்ணிக்கை | 50 மீட்டரில் 19 நீட்டங்கள். இரன்டு முனை நீட்டங்கள் ஒவ்வொன்றும் 40 மீட்டர். இரண்டு நீட்டன்கள் கலப்பயண நீட்டங்கள் |
History | |
Constructed by | ஆப்கான் உள்கட்டமைப்பு நிறுவனம் மற்றும் திட்ட இயக்குநர் சுபோத் வி கமாட் |
கட்டத் தொடங்கிய நாள் | சனவரி 1994 |
கட்டி முடித்த நாள் | சனவரி 1999 |
Statistics | |
சுங்கம் | கார்களுக்கு ₹35. இரு சக்கர வாகனங்களுக்கு இலவசம். |
ஒரு இணைப்புச் சாலை மூலமாக தானே பெலாபூர் சாலை மற்றும் கிழக்கத்திய விரைவு நெடுஞ்சாலை ஆகியனவற்றை இப்பாலம் இணைக்கிறது. இந்தப் பாலம், தானே-பெலாபூர் சாலையை ஐரோலியில் ஒரு சந்திப்பால் இணைக்கிறது. மற்றும் கிழக்கு விரைவு நெடுஞ்சாலையை குறுக்கிலும், கோரேகாவ்-முலுண்டு இணைப்புச் சாலையை மும்பையிலும் சந்திக்கிறது. வசி நகரியக் குடியிருப்பையும் மாங்குர்து பகுதியையும் இணைக்கும் வசி பாலத்திற்கு அடுத்தாதாக, ஐரோலி பாலம் மும்பையையும் நவி மும்பையையும் இணைக்கின்ற இரண்டாவது பாலமாகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-09-30. பார்க்கப்பட்ட நாள் 2016-01-20.
- ↑ Shaikh, Ateeq (24 September 2014). "Mumbai: Pay nearly 17% more for toll from October 1". Daily News and Analysis (Mumbai). http://www.dnaindia.com/mumbai/report-mumbai-pay-nearly-17-more-for-toll-from-october-1-2021106. பார்த்த நாள்: May 15, 2015.