இந்தியப் பகுதிக்கான இடஞ்சுட்டி செயற்கைக்கோள் அமைப்பு-1ஏ

(ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1ஏ இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1ஏ (IRNSS-1A) என்பது இந்திய பிராந்திய ஊடுருவும் துணைக்கோள்கள் வரிசையில் முதலாவது செயற்கைக்கோள் ஆகும். இதுபோல் இவ்வரிசையில் மொத்தம் ஏழு செயற்கைக்கோள்களை புவிநிலைச் சுற்றுப்பாதையில் நிலை நிறுத்த இந்திய விண்வெளி ஆய்வு மையம் திட்டமிட்டுள்ளது.[1][2]

உருவாக்கம்

தொகு

இச்செயற்கைக்கோளை இந்திய விண்வெளி ஆய்வு மையம் 125 கோடி இந்திய ரூபாய் மதிப்பில் உருவாக்கியது. இசஞ்சுட்டும் அமைப்பில் தன்னிறைவு அடையும் பொருட்டு இச்செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டது.[3][4]

ஏவுதல்

தொகு

ஆந்திர பிரதேசம் மாநிலத்தில், சென்னைக்கு 80 கி.மீ. (50 மைல்) வடக்கே அமைந்துள்ள ஸ்ரீஹரிக்கோட்டா நகரத்தில் உள்ள ஏவுதளத்திலிருந்து 1 சூலை 2013 ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்டு வெற்றிகரமாக புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. இச்செயற்கைக்கோள் முதலில் 26 சூன் 2013 அன்று ஏவத் திட்டமிடப்பட்டு தொழில்நுட்பக் கோளாறு காரணமாய் தாமதமாகியது.

இதையும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "IRNSS-1A". பார்க்கப்பட்ட நாள் 30 மார்ச் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "IRNSS". இசுபேசு.இசுகைராக்கெட் இணையத்தளம். பார்க்கப்பட்ட நாள் 30 மார்ச் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "India's first ever dedicated navigation satellite launched". டிஎன்ஏஇந்தியா இணையத்தளம். பார்க்கப்பட்ட நாள் 30 மார்ச் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. "India's first dedicated navigation satellite placed in orbit". என்டிடிவிஏ இணையத்தளம். பார்க்கப்பட்ட நாள் 30 மார்ச் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)