ஒக்கோத்துக் கடல்

(ஒக்காட்ஸ் கடல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஒக்கோத்துக் கடல் (Sea of Okhotsk (உருசியம்: Охо́тское мо́ре, ஒ.பெ Okhótskoye móre, பஒஅ[ɐˈxot͡skəjə ˈmorʲe]; யப்பானிய: オホーツク海) அமைதிப் பெருங்கடலின் மேற்குப் பகுதியிலுள்ள கரையோரக் கடல் ஆகும்.[1] இது கிழக்கில் கம்சாத்கா தீவகத்தையும் தென்கிழக்கில் கூரில் தீவுகளையும், தெற்கில் ஹொக்கைடோ தீவையும், மேற்கில் சக்கலின் தீவையும், வடக்கிலும் மேற்கிலும் நீண்ட கிழக்கத்திய சைபீரியக் கடற்கரையையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது. இதன் வடகிழக்கில் செலிகோவ் வளைகுடா உள்ளது. தூரக் கிழக்கில் உருவான முதல் உருசியக் குடியேற்றமான ஒக்கோத்ஸ்க் ஒட்டி இக்கடல் பெயரிடப்பட்டுள்ளது.

ஒக்கோத்துக் கடல்
ஒக்கோத்துக் கடலின் நிலப்படம்
அமைவிடம்அமைதிப் பெருங்கடல்
ஆள்கூறுகள்55°N 150°E / 55°N 150°E / 55; 150
வகைகடல்
வடிநில நாடுகள்யப்பான், உருசியா
மேற்பரப்பளவு1,583,000 km2 (611,200 sq mi)
சராசரி ஆழம்859 m (2,818 அடி)
அதிகபட்ச ஆழம்3,372 m (11,063 அடி)

புவியியல்

தொகு
 
சப்பானின் ஹொக்கைடோவில் ஒக்கோத்துக் கடலோரமாக அமைந்துள்ள சிறேதொகோ தேசிய வனம்.

ஒக்கோத்துக் கடலின் பரப்பளவு 611,000 ச.மை. (1,583,000 கிமீ2). சராசரி ஆழம் 2,818 அடி (859 மீட்டர்கள்). மிகப் பெரும ஆழம் 11,063 அடி (3,372 மீட்டர்கள்). இது மேற்கில் சக்கலின் வளைகுடா, தார்தரி வளைகுடா மூலமாகவும் தெற்கில் லா பெரூசு நீரிணை மூலமாகவும் சப்பான் கடலுடனும் இணைந்துள்ளது.

ஒக்கோத்துக் கடலில் பெரும் பனிப்பாறைகள் காரணமாக குளிர்காலத்தில் பயணிப்பது மிகவும் கடினம் அல்லது இயலாதது.

சப்பானின் ஒக்கைடோவைத் தவிர இக்கடலின் அனைத்துப் பகுதிகளிலும் உருசிய நிலப்பரப்பே உள்ளது. எனவே இது பொதுவாக உருசியாவின் பகுதியாகக் கருதப்படுகின்றது.

தீவுகள்

தொகு

ஒக்கோத்துக் கடலின் சில தீவுகள் மிகப் பெரியன. சப்பானின் இரண்டாவது பெரிய தீவான ஒக்கைடோவும் உருசியாவின் சக்கலின் தீவும் இதில் அடங்கும். ஐயனித் தீவு தவிர மற்ற தீவுகள் அனைத்துமே கடலோரத் தீவுகளாகும்; ஐயனித் தீவு மட்டுமே கடலின் நடுவே உள்ள தீவாகும். பெரும்பாலான தீவுகளில் மக்கள் குடியேற்றங்கள் இல்லை. எனவே இவை சீல்கள், கடற்சிங்கங்கள், கடற்பறவைகளின் பாலினப் பெருக்கத்திற்கு சிறந்த இடங்களாக உள்ளன.

மேற்கோள்கள்

தொகு
  1. Kon-Kee Liu; Larry Atkinson (June 2009). Carbon and Nutrient Fluxes in Continental Margins: A Global Synthesis. Springer. pp. 331–333. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-540-92734-1. பார்க்கப்பட்ட நாள் 29 November 2010.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒக்கோத்துக்_கடல்&oldid=3738268" இலிருந்து மீள்விக்கப்பட்டது