ஒக்சானா செர்காசினா

உக்ரைன் நடிகை

ஒக்சானா லியோனிடிவ்னா செர்காசினா (Oksana Leonidivna Cherkashyna[a], பிறப்பு 7 மே 1988) என்பவர் ஒரு உக்ரைனிய நாடக மற்றும் திரைப்பட நடிகை ஆவார். இவர் நாடகத்திலும், திரைப்படங்களிலும் தனது தனித்தன்மையான நடிப்பிற்காக அங்கீகரிக்கப்படுவதோடு, பல முக்கியமான விருதுகளையும் பெற்றுள்ளார்.[1]

ஒக்சானா செர்காசினா
2020 இல் ஒக்சானா செர்காசினா
தாய்மொழியில் பெயர்Оксана Черкашина
பிறப்புஒக்சானா லியோனிடிவ்னா செர்காசினா
7 மே 1988 (1988-05-07) (அகவை 36)
கார்கீவ், உக்ரைனிய சோவியத் சோசலிச குடியரசு, சோவியத் ஒன்றியம்
(தற்போதைய உக்ரைன்)
படித்த கல்வி நிறுவனங்கள்கீவ் தேசிய ஐ. கே. கார்பிங்கோ-கேரி நாடகம், திரைப்படம், தொலைக்காட்சிப் பல்கலைக்கழகம் (முதுகலை)
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2015–தற்போது
குறிப்பிடத்தக்க படைப்புகள்திரைப்படவியல்

துவக்ககால வாழ்க்கையும் கல்வியும்

தொகு

இவர் 1988 மே 7 அன்று உக்ரேனிய நகரமான கார்கிவில் பிறந்தார்.[2] இவர் கலைகளில், குறிப்பாக நாடகத்தில் ஆரம்பகாலங்களில் ஆர்வம் காட்டினார். இவர் 2005 இல் கீவ் தேசிய ஐ. கே. கார்பிங்கோ-கேரி நாடகம், திரைப்படம், தொலைக்காட்சிப் பல்கலைக்கழகத்தில் பயின்றார். 2009 இல் கல்வி நிறுவனத்தில் முதுகலை பட்டம் பெற்றார்.[1] 2014 முதல் "டிஸ்டோ நடிப்புப் பள்ளியில்" பயிற்சியாளர், இயக்குநர், பேராசிரியர் ஆகிய பொறுப்புகளை வகித்தார்.[3]

தொழில்

தொகு

ஜோனா விகோவ்ஸ்கா, ஒக்சானாவை 2016 இல் போலந்து-உக்ரேனிய திட்டமான "мапи страху/мапи ідентичності" இல் பங்கேற்க அழைத்தார்.[4] இதை ஒக்சானா தனது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாகக் கருதினார். இவர் பல ஆண்டுகள் பிரித்தானிய கவுன்சில், உக்ரைனில் உள்ள கோதே-இன்ஸ்டிட்யூட், வார்சாவாவில் உள்ள போலந்து நாடகக் கல்வி நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து பல நாடக முயற்சிகளில் பங்கேற்றார். இதில் குறிப்பிடத்தக்க நிகழ்சிகளில் "ДПЮ,"[5][6][7] "Ресторан Україна,"[8][9] "Мій дід копав, мій батько копав, а я не буду"[10][11][12] ஆகியவை அடங்கும்.

ஒக்சானா பல்கலைக்கழகத்தில் தன் பட்டத்தைப் பெற்ற பிறகு தினேபர் ஆற்றின் இடது கரையில் உள்ள கீவ் நாடக அரங்கில் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார்.[13] இவர் பலவிதமான நாடகங்களில் பலவிதமான பாத்திரங்களை ஏற்றுக்கொண்டார், விரைவில் குழுவின் நட்சத்திர நடிகையாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். 2019 ஆம் ஆண்டில் போலந்து நாடக அரங்கில் மிக முக்கியமான இரண்டு பரிசுகளுடன் அவர் கௌரவிக்கப்பட்டார் அவை; ஆல்-போலந்து சமகால கலை போட்டியின் முக்கிய நடிப்பு விருது மற்றும் கிராக்கோவில் நடந்த தெய்வீக நகைச்சுவை விழாவில் சிறந்த நடிகைக்கான இரண்டாவது பரிசு ஆகியவை ஆகும்.[1] 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டிற்கான "Левів не віддамо" நாடகத்திற்காக இவர் நாடக அரங்கிற்கு அழைக்கப்பட்டார்.[14][15]

ஒக்ஸானா 2015 ஆம் ஆண்டில் விளாடிஸ்லாவ் வ்டோவ்சென்கோவின் "வலென்டினிவ் டேன்" திரைப்படத்தின் மூலமாக திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார். அதில் இவர் முக்கியப் பாத்திரத்தை வகித்தார். இப்படத்தில் நடித்தத்காக இவருக்கு 2015 இல் கிய்வ் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான பரிசு வழங்கப்பட்டது. பின்னர் இவர் " மெரினா எர் கோர்பாக்கின் "கிளோண்டிக்" மற்றும் நடால்கா வோரோஜ்பைட்டின் "பேட் ரோட்ஸ்" (இதற்காக அவர் 2020 இல் "கினோகோல்" விருதைப் பெற்றார்) போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.[1]

2022 பெப்ரவரி 22 அன்று ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்து அதன் ஒரு பகுதியை ஆக்கிரமித்தது. அரசியல், உலகம், கலை பற்றிய இவரது கண்ணோட்டம் இதனால் மாறியது. அரசியல், ஐரோப்பிய ஒன்றியம், ஐரோப்பிய சமூகம், உலக சமூகம் ஆகியவற்றில் இவர் நம்பிக்கை இழந்தார்.[16]

2023 ஆம் ஆண்டுக்கான சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான அகாதமி விருதுக்கு உக்ரைனில் இருந்து அனுப்பப்பட்ட "கிளோண்டிக்" திரைப்படத்தில் ஒக்சானா நடித்துள்ளார். படத்தில் இவரது பாத்திரத்திற்காக, இவர் பாம் ஸ்பிரிங்ஸ் திரைப்பட விழாவில் ஃபிப்ரெஸ்கி சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றார். இவரது நடிப்பில் வரவிருக்கும் நெட்ஃபிக்ஸ் தொலைக்காட்சி தொடரான "அப்சலூட் பிகினர்ஸ்", 2023 இல் போலந்தில் திரையிடப்படும்.[2]

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

ஒக்ஸானா உக்ரேனியம், ஆங்கிலம், போலந்து, உருசியம் ஆகிய மொழிகளில் சரளமாக பேசுக்கூடியவராகவும், பிரெஞ்சு, ஜெர்மன் மொழிகளை ஓரளவு புரிந்து கொள்பவராகவும் உள்ளார்.[2]

குறிப்புகள்

தொகு
  1. உக்ரைனியன்: Оксана Леонідівна Черкашина

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 "Черкашина Оксана Леонідівна | АлиБаба" (in உக்ரைனியன்). 2024-02-01. பார்க்கப்பட்ட நாள் 2024-03-08.
  2. 2.0 2.1 2.2 "Oksana Cherkashyna - Actress - e-TALENTA". www.e-talenta.eu. பார்க்கப்பட்ட நாள் 2024-03-08."Oksana Cherkashyna - Actress - e-TALENTA". www.e-talenta.eu. Retrieved 8 March 2024.
  3. "Школа актерского мастерства «Тесто»". web.archive.org. 2020-12-08. Archived from the original on 2020-12-08. பார்க்கப்பட்ட நாள் 2024-03-08.
  4. "Парад сміливців | Збруч". web.archive.org. 2020-12-07. Archived from the original on 2020-12-07. பார்க்கப்பட்ட நாள் 2024-03-08.{{cite web}}: CS1 maint: bot: original URL status unknown (link)
  5. "Спектакль «ДПЮ» помогает найти диалог между гражданскими и военными". web.archive.org. 2020-12-08. Archived from the original on 2020-12-08. பார்க்கப்பட்ட நாள் 2024-03-08.{{cite web}}: CS1 maint: bot: original URL status unknown (link)
  6. ""ДПЮ": война за пять простых уроков - портал новостей LB.ua". web.archive.org. 2020-12-06. Archived from the original on 2020-12-06. பார்க்கப்பட்ட நாள் 2024-03-08.{{cite web}}: CS1 maint: bot: original URL status unknown (link)
  7. "Голос Харькова о войне. Театр «Прекрасные цветы» впервые заговорит на сцене в спектакле «ДПЮ». Новости досуга в Украине Харькове. Весь Харьков". web.archive.org. 2020-12-08. Archived from the original on 2020-12-08. பார்க்கப்பட்ட நாள் 2024-03-08.{{cite web}}: CS1 maint: bot: original URL status unknown (link)
  8. "«Дай, сколько можешь»: харьковские актёры рассказывают о коррупции - MediaPort". web.archive.org. 2020-12-07. Archived from the original on 2020-12-07. பார்க்கப்பட்ட நாள் 2024-03-08.{{cite web}}: CS1 maint: bot: original URL status unknown (link)
  9. "«Ресторан Украина» на мариупольском Гогольфесте :: Мариуполь - Театр :: Новостной портал Мариуполя". web.archive.org. 2020-12-07. Archived from the original on 2020-12-07. பார்க்கப்பட்ட நாள் 2024-03-08.{{cite web}}: CS1 maint: bot: original URL status unknown (link)
  10. "«Мій дід копав…»: хаос пам'яті « Korydor | журнал про сучасну культуру". web.archive.org. 2020-07-04. Archived from the original on 2020-07-04. பார்க்கப்பட்ட நாள் 2024-03-08.{{cite web}}: CS1 maint: bot: original URL status unknown (link)
  11. "Кінець удавання: мапи ідентичності українського (а)театру :: Teatre :: современный театр в Украине". web.archive.org. 2020-12-02. Archived from the original on 2020-12-02. பார்க்கப்பட்ட நாள் 2024-03-08.{{cite web}}: CS1 maint: bot: original URL status unknown (link)
  12. "Перший перегляд українських театрів ДесантUA - Польське Радіо". web.archive.org. 2020-12-08. Archived from the original on 2020-12-08. பார்க்கப்பட்ட நாள் 2024-03-08.
  13. "Міністерство культури України :: Результати конкурсу на заміщення вакантної посади артиста драми в ТВЗК "Київський академічний театр драми і комедії на лівому березі Дніпра"". web.archive.org. 2021-05-20. Archived from the original on 2021-05-20. பார்க்கப்பட்ட நாள் 2024-03-08.{{cite web}}: CS1 maint: bot: original URL status unknown (link)
  14. "Lwów nie oddamy – Mirosław Wlekły". web.archive.org. 2020-12-05. Archived from the original on 2020-12-05. பார்க்கப்பட்ட நாள் 2024-03-08.{{cite web}}: CS1 maint: bot: original URL status unknown (link)
  15. "W paszczy lwów – o spektaklu Katarzyny Szyngiery "Lwów nie oddamy" z Teatru im. Wandy Siemaszkowej w Rzeszowie - DOMAGALAsieKULTURY : DOMAGALAsieKULTURY". web.archive.org. 2020-12-08. Archived from the original on 2020-12-08. பார்க்கப்பட்ட நாள் 2024-03-08.{{cite web}}: CS1 maint: bot: original URL status unknown (link)
  16. jburkepmc (2022-04-10). "Oksana Cherkashyna: "I am not the same"". Golden Globes (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-03-08.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒக்சானா_செர்காசினா&oldid=4108240" இலிருந்து மீள்விக்கப்பட்டது