ஒட்டுண்ணி நோய்கள்

மனித உடலிற்கு, ஒட்டுண்ணிகளால் ஏற்படும் நோய்கள்

ஒட்டுண்ணி நோய்கள் (Parasitic diseases) என்பது ஒட்டுண்ணிகளால் ஏற்படும் நோய்களைக் குறிக்கின்றன. விலங்குகளில் முதுகெலும்பில்லாதவைகளே, ஒட்டுண்ணி வாழ்க்கையை அதிகம் மேற்கொண்டுள்ளன. அவற்றுள்ளும் சில புழுக்களைத் தவிர, மற்ற ஒட்டுண்ணிகள், சிறிய உயிர்களாக உள்ளன.

கல்லீரலில் இருக்கும் மலேரியா உயிரி நேரடியாக நோய் உண்டாக்கும் இயல்புடையது
Giardia lamblia (மறைமுகமாக நோய் உண்டாக்கும் இயல்புடையது)

புரோட்டோசோவா போன்ற, ஓரணு உயிரிகள் ஆகும். சில புழுக்கள் மட்டுமே, பலவணுப் உயிரிகளாக உள்ளன. ஓரணு உயிரணுக்களான புரோட்டோசோவாவில் வளர் நிலைகளில் போலிக்காலாலோ, கசையாலோ இயங்கி, முதிர்நிலையில் இயக்கமில்லாதவையும், விதைத் தூள் போன்ற ஸ்போர்களால், இனம் பெருக்குபவையுமான ஸ்போரோசோவா வகுப்பில், சுதந்திரமாக வாழும் இனங்களும், ஒட்டுண்ணிகளும் பல உள்ளன. ஸ்போரோசோவா உயிரினங்களில், அனைத்தும் ஒட்டுண்ணிகளேவே இருக்கின்றன. இவை மனிதனுடைய உணவுப் பாதையிலும், வேறு முதுகெலும்பிகளின் உணவுப் பாதையிலும் வசிக்கின்றன. இந்த ஒட்டுண்ணிகளால், மனிதர்களுக்கும், அவர்தம் வளர்க்கும் விலங்குகளுக்கும், பயிர்களுக்கும் பல நோய்கள் உண்டாக்கி, பல கெடுதல்களும், அழிவுகளும் உண்டாகின்றன. கொசு, மணல் ஈ, பேன் முதலியவற்றின் கடியாலும், மனிதனுக்குப் பரவுகின்றன. சில ஒட்டுண்ணிகள் நேரடியாக நோயை உண்டாக்கும் திறன் பெற்றவை. பல ஒட்டுண்ணிகள் தங்களது நஞ்சுச் சுரப்புகள் மூலம் நோயை மறைமுகமாக உருவாக்கும் இயல்பைப் பெற்றிருக்கின்றன.[1]எடுத்துக்காட்டாக, என்ற உயிரி மனிதக் குடலில் இனப்பெருக்கும் செய்யும் பொழுது, காய்ச்சல் உண்டாக்கும். [2]

தாவரங்களான' புகையிலை, உருளைக்கிழங்கு, தக்காளி, மொச்சை, பட்டாணி, மிளகாய், கரும்பு, சோளம் ஆகியவற்றிற்கு வரும் வரிநோய்கள், வைரஸ்களால் உண்டாகின்றன. இந்நோய்களால் இலைகளில் அங்கங்கே பச்சையாக இல்லாமல் போவதால், ஒளிச்சேர்க்கை தடைப்படுகிறது. இலைப்பகுதிகளும், காம்பும் மடிந்து விடுகின்றன. இலைச்சுருள், முடிச்சுருள், கதிர்நோய் (Spike disease) ஆகியவையும் வைரஸ் நோய்களே. இவற்றால் செடிகளுக்கு மிகுந்த கேடு விளையும். சந்தனமரத்திற்கு வரும், கதிர்நோய் பல மரங்களைக் கொன்று விடுகிறது.

பாக்டீரியா என்னும் நுண்ணுயிர்கள், சீழ் பிடித்தல், உடல் நஞ்சாதல் (Septicaemia) அகிப் படுவன் (எரிசிபலஸ்), வெள்ளை , மேகப்புண், கவாதசுரம் (நிமோனியா), கடுங்கீல்வாதம், வாந்திபேதி (காலரா), டைபாயிடு காய்ச்சல், கொள்ளை நோயாக வரும் வயிற்றுப் போக்கு, பாசிலஸ் சீதபேதி, பிளேகு , டிப்தீரியா, அடைப்பான், மெனிஞ்சைட்டிஸ், சொத்தைப்பல், தோலைப்பற்றிய பல நோய்கள், கக்குவான் முதலிய நோய்கள் உண்டாகின்றன.

வைரஸ்கள் என்னும் மிகமிக நுண்ணிய உயிர்கள், உண்டாகும் நோய்கள் பெரியம்மை, சின்னம்மை, தட்டையம்மை, பொன்னுக்குவீங்கி என்னும் புட்டாலம்மை, அக்கி, இளம்பிள்ளை வாதம், டெங்கு என்னும் முடக்கம்மை, பாப்பட்டாச்சி என்னும் மணல் ஈக் காய்ச்சல் மஞ்சள் காய்ச்சல், டைபாய்டு காய்ச்சல், இன்புளுயன்சா சளிப்பு, வெறிநாய்க்கடி நோய் போன்ற பல நோய்களை உண்டாக்குகின்றன. மாட்டுக்கு வரும் கோமாரிக்கும். ஆடு, குதிரை, பன்றி, கோழி முதலியவற்றிற்கு வரும் சில நோய்களுக்கும், வைரசால் ஏற்படுகின்றன. வைரஸ் நோய்கள் நேராகத் தொற்றிப் பரவுவதும் உண்டு.

ஆப்பிரிக்காவில் உறக்க நோயைப் பரவச் செய்வது, கடிக்கும் இயல்புடைய ஈயான, இட்செட்சி ஈ ஆகும். இது கடித்து இரத்தத்தை உறிஞ்சும். திரப்பனசோமா காம்பியென்ஸி, தி. புரூசியை என்னும் ஓரணுவுயிர்களால் இந்நோய் உண்டாகும். மனிதனுக்கும், கால்நடைகளுக்கும், காட்டு விலங்குகளுக்கும் பரவும் தன்மை உடையது ஆகும்.

தென் அமெரிக்காவில் குழந்தைகளுக்கு வரும் சாகா (Chaga's disease) என்னும் நோயும் ஒருவகைத் திரிப்பனசோமினால் உண்டாகும் நோயாகும். இது சில மூட்டுப் பூச்சிகளால் பரவும் தன்மையுடையது. மூட்டுப்பூச்சி கடிக்கும்போது, அரிப்பு எடுக்கும். அந்த இடத்தைச் சொறியும் போது, அங்கு இடப்பெற்ற மூட்டுப்பூச்சியின் மலம், குழந்தைத் தோலுக்குள் புகுந்து நோயை உண்டாக்கும்.

ஆஸ்திரேலியாவில் டிக் ஒட்டுண்ணி வகைகள் மனிதர்களை அதிக அளவு பாதிக்கின்றது. ஆஸ்திரேலியாவில் இவ்வகை உண்ணிகளில் 70 இனங்கள் காணப்படுகின்றன. லைம் நோய், Q காய்ச்சல், குயின்ஸ்லாந்து டிக் டைபஸ், ஃபிளிண்டர்ஸ் தீவு புள்ளி காய்ச்சல் மற்றும் ஆஸ்திரேலிய புள்ளி காய்ச்சல் போன்ற நோய்கள் உருவாவதற்கு இதுவே காரணமாக அமைகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. "Toxins produced by arthropod parasites: salivary gland proteins of human body lice and venom proteins of chelonine wasps". Toxicon 34 (11-12): 1421–9. 1996. doi:10.1016/s0041-0101(96)00091-8. பப்மெட்:9027999. 
  2. https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC269332/
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Parasitic diseases
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒட்டுண்ணி_நோய்கள்&oldid=3436502" இலிருந்து மீள்விக்கப்பட்டது