ஒனகோனா
ஒடமாதி (Odemadih) என்றும் அழைக்கப்படும் ஒனகோனா(Onakona) என்பது இந்தியாவின் சத்தீசுகரின் துர்க் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமமாகும். [1]
ஒனகோனா
ஒடமாதி | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 20°34′52″N 81°26′31″E / 20.581°N 81.442°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | சத்தீசுகர் |
மாவட்டம் | துர்க் |
வட்டம் | குருர் |
அரசு | |
• நிர்வாகம் | ஊராட்சி |
பரப்பளவு | |
• மொத்தம் | 3.3673 km2 (1.3001 sq mi) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 182 |
• அடர்த்தி | 54/km2 (140/sq mi) |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 491226 |
ஒனகோனா மகாநதி ஆற்றின் மீது கட்டப்பட்ட கேங்க்ரல் அணை நீர்த்தேக்கத்தின் கரையில் அமைந்துள்ளது. 21 ஆம் நூற்றாண்டில், தம்தரியைச் சேர்ந்த தீரத் ராஜ் புதான், மகாராட்டிராவில் உள்ள திரிம்பகேசுவர் சிவன் கோயிலைப் போல, ஒனகோனாவில் ஒரு சிவன் கோயிலைக் கட்டுவதற்கு ஆணையிட்டார். [2] கோயில் ஒருபுறம் மலையாலும், மறுபுறம் நீர்த்தேக்கத்தாலும் சூழப்பட்டுள்ளது. அருகில் ஒரு அருவி குளம் உள்ளது. இது ஒரு பிரபலமான சுற்றுலா தலமாக உள்ளது. [3]
ஒனகோனா குருர் வட்டத்தில் அமைந்துள்ளது . கர்ராஜர் ஊராட்சி நிர்வாகத்தின் கீழ் வருகிறது. [4] 2011 ஆம் ஆண்டு நிலவரப்படி, கிராமத்தில் 38 வீடுகளில் வசிக்கும் 95 ஆண்கள் மற்றும் 87 பெண்கள் உட்பட 182 பேர் வசிக்கின்றனர். 7 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மக்களின் கல்வியறிவு விகிதம் 72.53% ஆகும். [5]
சான்றுகள்
தொகு- ↑ "PCA: Primary Census Abstract C.D. Block wise, Chhattisgarh - District Durg - 2011". Office of the Registrar General & Census Commissioner, India. பார்க்கப்பட்ட நாள் 2022-12-08.
- ↑ "ओनाकोना बनेगा पर्यटन स्थल" (in Hindi). Dainik Bhaskar. https://www.bhaskar.com/news/MAT-CHH-OTH-c-206-82046-NOR.html.
- ↑ "नया साल मनाने के लिए जिले में है कई खूबसूरत स्थान" (in Hindi). Nai Dunia. https://www.naidunia.com/chhattisgarh/balod-there-are-many-beautiful-places-in-the-district-to-celebrate-the-new-year-7209589.
- ↑ "बालोद के पर्यटन व धार्मिक स्थलों पर नए वर्ष में आज जुटेंगे पर्यटक". https://www.bhaskar.com/news/CHH-OTH-MAT-latest-dallirajhara-news-031503-1701920-NOR.html.
- ↑ "PCA: Primary Census Abstract C.D. Block wise, Chhattisgarh - District Durg - 2011". Office of the Registrar General & Census Commissioner, India. பார்க்கப்பட்ட நாள் 2022-12-08."PCA: Primary Census Abstract C.D. Block wise, Chhattisgarh - District Durg - 2011". Office of the Registrar General & Census Commissioner, India. Retrieved 8 December 2022.
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் சிவன் ஆலயம், ஒனகோனா தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.