ஒய். எசு. விஜயம்மா

இந்திய அரசியல்வாதி

யதுகுறி சண்டிந்தி விஜயலட்சுமி (பிறந்தது 19 ஏப்ரல் 1956), என்பவர் ஒய். எசு. விஜயம்மா என அறியப்படும் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் ஆந்திரப் பிரதேசம் புலிவெந்துலா சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார். இவர் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆவார். இவரது கணவர் ஒய். எஸ். ஆர். எனப் பிரபலமாக அறியப்படும் ஆந்திராவின் 14ஆவது முதல்வரான எ. சா. ராஜசேகர் ரெட்டி ஆவார்.[1] இவரது மகன் ஜெகன் மோகன் ரெட்டி, ஆந்திராவின் 17வது மற்றும் தற்போதைய முதல்வர் ஆவார்.

ஒய். எசு விஜயலட்சுமி
படிமம்:YS-Vijayamma.jpg
தலைவர் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி
பதவியில் உள்ளார்
பதவியில்
2011
முன்னையவர்புதிய பதவி
Member of the [[ஆந்திரப் பிரதேச சட்டமன்றம் சட்டமன்றம்]]
புலிவெந்துலா
பதவியில்
13 மே 2011 – 23 மே 2014
முன்னையவர்எ. சா. ராஜசேகர்
பின்னவர்ஜெகன் மோகன் ரெட்டி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு19 ஏப்ரல் 1956 (1956-04-19) (அகவை 68)
கடப்பா, ஆந்திரப் பிரதேசம், இந்தியா
அரசியல் கட்சியுவஜனா சிரமிக ரித்து காங்கிரசு கட்சி (2011–2022; 2024-)
பிற அரசியல்
தொடர்புகள்
இந்திய தேசிய காங்கிரசு (முன்னர் 2011)
துணைவர்
எ. சா. ராஜசேகர் (தி. 1971⁠–⁠2009)
பிள்ளைகள்ஜெகன் மோகன் ரெட்டி (மகன்)
ஒய். எஸ்.சர்மிளா (மகள்)
வாழிடம்(s)அமராவதி, ஆந்திரப் பிரதேசம், இந்தியா

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

ஆந்திரப் பிரதேசத்தில் தாடிபத்திரி வட்டத்தில் சிமலவாகுலா பள்ளி கிராமத்தில் போச்சம்ரெட்டி ராமாஞ்சுலா ரெட்டி மற்றும் துளசம்மாவுக்கு மகளாகப் பிறந்தார். இவர் எ. சா. ராஜசேகர் ரெட்டியை மருத்துவராகப் பணியாற்றும் போது மணந்தார். இந்த தம்பதிக்கு ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் சர்மிளா என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

தொழில்

தொகு

இவர் தனது கணவரின் மரணத்தால் அரசியலில் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்புவதற்காகத் திசம்பர் 2009இல் புலிவெந்துலா தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் ஆந்திர சட்டசபைக்குப் போட்டியின்றி காங்கிரசு வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] 2014ல் விசாகப்பட்டினம் தொகுதிக்கான நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.

காங்கிரசு மேல்மட்டத் தலைவர்களால் ஒய். எஸ். ஆர். குடும்பத்திற்கு ஏற்பட்ட அவமானம், குடும்ப உறுப்பினர் ஒய். எஸ். விவேகானந்த ரெட்டியை, அரசியல் ரீதியாக ஒய். எஸ். ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிராகத் தூண்டியது. விஜயம்மா காங்கிரசு கட்சியினை விட்டு விலகி சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நவம்பர் 29, 2010 விலகினார். இவரது மகனும் நாடாளுமன்ற பதிவிலிருந்து விலகினார்.[3]

8 மே 2011 அன்று நடைபெற்ற இடைத்தேர்தலில் விஜயம்மா மற்றும் அவரது மகன் ஒய்எஸ் ஜெகன் மோகன் ரெட்டி முறையே சட்டசபை மற்றும் மக்களவைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் இருவரும் மார்ச் 12, 2011 அன்று ஜெகன் மோகன் ரெட்டியால் நிறுவப்பட்ட ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியின் சார்பாக இடைத்தேர்தலில் போட்டியிட்டனர்.[4]

கடப்பா நாடாளுமன்றத் தொகுதி மற்றும் புலிவெந்துலா சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் விஜயம்மா ஆகியோர் தாங்கள் பதவி விலகிய தொகுதிகளைத் தக்கவைத்தனர். மேலும் இவர்கள் அதிக வாக்குகள் பெற்று பெரும்பான்மையுடன் சாதனை படைத்தனர். ஜெகன்மோகன் ரெட்டி கடப்பா தொகுதியில் 543,053 வாக்குகள் பெற்று பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றார். விஜயம்மா 85,191 வாக்குகள் வித்தியாசத்தில் புலிவெந்துலா தொகுதியில் வெற்றி பெற்றார்.[5]

பின்னர், இவரது மகள் ஒய். எஸ். சர்மிளா ரெட்டி, சேர்ந்து தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார். விஜயம்மா ஜூன் 2012 இடைத்தேர்தலில் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியை முன்னோடி இல்லாத நிலையில் வெற்றிக்காக வழிநடத்திச் சென்றார். இவரது கட்சி 18 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் 15 இடங்களில் வெற்றி பெற்றது.[6]

அரசியல் கிளர்ச்சி

தொகு

கல்லூரி மாணவர்களின் கட்டணத்தை திருப்பிச் செலுத்துதலுக்கான நிதியை வெளியிட அரசு தயக்கம் காட்டுவது மின்சாரக் கட்டணம் உயர்வு உள்ளிட்ட அரசின் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, விஜயம்மா உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.[7] விவசாயிகள் மற்றும் பெண்கள் சார்பாகப் போராடிப் பல போராட்டங்களில் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தார். சமிக்யாந்திரா போராட்டம் உட்ப்பட பல பிரச்சனைகளில் நியாயம் கேட்டு ஆந்திராவை ஒருங்கிணைக்க இந்திய அரசினை வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்துள்ளார்.[8]

மேற்கோள்கள்

தொகு
  1. "About YS Vijayamma, the woman behind Yuvajana Sramika Rythu Congress Party". Yuvajana Sramika Rythu Congress Party. 2019-05-20.
  2. YSR widow elected unopposed
  3. Jaganmohan Reddy resigns from Congress
  4. Jagan formally launches YSR Congress
  5. Record-breaking win for Jagan in Kadapa election
  6. 2012 Andhra Pradesh by-election
  7. "Vijayamma calls off 2-day Fees Deeksha". www.ysrcongress.com (in ஆங்கிலம்). Archived from the original on 2014-09-07. பார்க்கப்பட்ட நாள் 2017-11-22.
  8. "Vijayamma participates in Jantar Mantar dharna". Archived from the original on 2014-09-08. பார்க்கப்பட்ட நாள் 2021-09-15.

 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒய்._எசு._விஜயம்மா&oldid=3867343" இலிருந்து மீள்விக்கப்பட்டது