ஒருமைப் பண்புக் குழு
ஒருமைப் பண்பு வகைமை என்பது ஓர் உயிரியின் ஒற்றைப் பெற்றோரில் இருந்து மரபுப் பெறாகப் பெற்ற மரபன்களின் குழுவாகும்.[1][2] ஒருமைப் பண்புக் குழு (haplogroup) அல்லது (ஓரகம் (haploid) கிரேக்க மொழி: ἁπλούς இன் haploûs, ஒருமடி, ஒற்றை, எளிய ஆங்கில மொழி: Group (disambiguation) குழு) என்பது பொது மூதாதையை ஓர் ஒற்றை கருவன் பல்லுருவாக்கச் சடுதிமாற்றத்தால் பகிரும் நிகர்த்த ஒருமைப் பண்பு வகைமைகளின் குழுவாகும்.[3][4] மேலும் குறிப்பாக, ஒருமைப் பண்புக் குழு என்பது, ஒருங்கே மரபுவழி கையளிக்கப்பட்ட நெருக்கமாகப் பிணைந்த, பல்வேறு குறுமவகங்களில் அமைந்த மாற்றுருக்களின் அல்லது மரபன் தனிமங்களின் (Allelles) சேர்மானமாகும். ஒருமைப் பண்புக் குழுவில் ஒத்த ஒருமைப் பண்பு வகைமைகள் அமைவதால், ஒருமைப் பண்பு வகைமையில் இருந்தே ஒருமைப் பண்புக் குழுவைக் கண்டறியலாம். ஒருமைப் பண்புக் குழுக்கள் பல்லாயிரம் ஆண்டுகள் வேறுபாடுள்ள ஒற்றைக் கால்வழியை சேர்ந்தவை, .[5] ஒருவர் ஓர் ஒருமைப் பண்புக் குழுவில் உறுப்பினராக அமைதல் அவரிடம் உள்ள மரபுப் பொருளின் மிகச் சிறிய விகிதத்தாலேயே முடிவு செய்யப்படுகிறது.
ஒவ்வொரு ஒருமைப் பண்புக் குழுவும் முந்தைய ஒற்றை ஒருமைப் பண்புக் குழுவின் (இணைகுழுவின்) எச்சங்களில் இருந்தே தோன்றுகிறது . எனவே சார்புள்ல ஒருமைப் பண்புக் குழுக்களின் தொகுப்பைத் துல்லியமாக கிளைபிரிவு படிநிலைவரிசையில் அமைக்கலாம். இதில் ஒவ்வொரு கண (set) ஒருமைப் பண்புக் குழுவும் மேலும் அகன்ற அண்மைக் கணத்தின் துணைக் கணமாகும் (இது மாந்தரினம் போன்ற இரட்டைப் பெற்றோர் கிளைபிரிவு அமைப்புக்கு எதிரானதாகும்).
ஒருமைப் பண்புக் குழுக்கள் எப்போதும் ஆங்கில நெடுங்கணக்கின் முதல் பெரிய எழுத்தால் குறிக்கப்படுகிறது, அதன் மேலும் துல்லியமான சீராக்கங்கள் கூடுதல் எண்ணாலும் சிறிய எழுத்தாலும் குறிக்கப்படும். எடுத்துகாட்டாக, A → A1 → A1a எனக் குறிக்கப்படும்.
மாந்தரின மரபியலில், ஒருமைப் பண்புக் குழுக்கள் மிக வழக்கமாக மாந்தரின ஒய் குறுமவக மரபன் ஒருமைப் பண்புக் குழுக்களாலும் மாந்தரின ஊன்குருத்து மரபன் ஒருமைப் பண்புக் குழுக்களாலும் அல்லது இவை இரண்டாலும் மக்கள்தொகை மரபியல் வரையறை செய்யப்படுகிறது.ஒய் மரபன் தந்தைக் கால்வழியாக தந்தையில் இருந்து மகனுக்கும் ஊன்குருத்து மரபன் தாய்க் கால்வழியாக இருபாலினக் குழவிகளுக்கும் மரபியலாகப் பெறப்படுகிறது. இவை இரண்டும் ஒவ்வொரு தலைமுறையிலும் தற்செயலான சடுதிமாற்றத்தால் மாறுமேயன்றி, தம்மிடையே ஊடுகலத்தலால் மாறுவதில்லை.
ஒருமைப் பண்புக் குழு உருவாக்கம்
தொகுஊன்குருத்துகள் மாந்தரில் உள்ளதுபோன்ற முழுக்கருவன் உயிர்க்கலத்தின் கலக்கணிகத்தில் அமையும் சிற்றுறுப்புகள் ஆகும். இவற்றின் முதன்மைப் பணி உயிர்க்கலங்களுக்கு ஆற்றலைத் தருவதாகும். இவை முன்பு விடுபட்டு இயங்கிய குச்சுயிரிகளின், குறுக்கமுற்ற இணைவாழ்வுக் கால்வழிகளாகும் எனக் கருதப்படுகிறது. இப்படிக் கருதுவதற்கான காரணம் இவற்றில் முழுமை வாய்ந்த ஊன்குருத்து மரபன் நிலவுவதும் இதன் கட்டமைப்பு முழுக்கருவன் உயிரியை விட குச்சுயிரியை ஒத்துள்ளதும் ஆகும் பெரும்பாலான மாந்தரின மரபன்கள் உயிர்க்கலத்தின் கலக்கருவில் உள்ள குறுமவகங்களிலேயே அமைந்தாலும் ஊன்குருத்து மரபன் மட்டும் கலக்கணிகத்தில் அமைதல் இதற்கு விதிவிலக்காகும்.
ஒருவர் கலக்கணிகத்தையும் கலக்கணிக சிற்றுறுப்புகளையும் தன் தாய்வழி அண்டத்தில் (முட்டையில்) இருந்தே மரபுப் பேறாகப் பெறுகிறார்; விந்து குறுமவக மரபன்களை மட்டுமே மரபுவழியாகக் கடத்துகிறது. அனைத்து ஊன்குருத்துகளும் முட்டைக் கலத்தால் செரிக்கப்படும். எனவே ஊன்குருத்து மூலக்கூற்றில் ஏற்படும் சடுதிமாற்றங்கள், அவை நேரடியாக தாய்க்கால்வழியாக மட்டுமே கடக்கும். சடுதிமாற்றங்கள் மரபன் வரிசைமுறையில் உள்ள பிழைகளைப் படியெடுக்கும் நிகழ்வாகும். இவ்வகைத் தனிப்பிழைகள் ஒற்றைக் கருவன் பல்லுருவாக்கங்கள் எனப்படுகின்றன.
மாந்தரின ஒய் குறுமவகம் ஆண்சார்ந்த பாலினக் குறுமவகமாகும். அனைத்து மாந்தரின ஒய் குருமவகங்களும் புற உருவநிலையாக ஆண் தன்மை பெற்றனவே. கலக்கருவில் ஒய், எக்சு குறுமவகங்கள் இணையாக ஒருங்கே அமைந்திருந்தாலும் ஒய் குறுமவகம், எக்சு குறுமவகத்தின் ஒய் முனையில் மட்டுமே மீளிணைய வாய்ப்புள்ளது; எஞ்சிய 95% அளவு ஒய் குறுமவகங்கள் மீளிணைவில் பங்கெடுப்பதில்லை. எனவே ஒய் குறுமவகமும் அதில் ஏற்படும் சடுதிமாற்றங்களும் தந்தையிடம் இருந்து மகனுக்கு ஆண்கால்வழியாகக் கடத்தப்படுகின்றன. இது ஒய் குறுமவகமும் ஊன்குருத்து குறுமவகமும் தமக்கே உரிய தனிப்பான்மைகளைப் பெற்றுள்ளன.
பெண்களில் அமையும் பிற குறுமவகங்களான, நிகரிணைக் குறுமவகங்களும் எக்சு குறுமவகங்களும் இனப்பெருக்கத்துக்கு உதவும் சிறப்பு உயிர்க்கலப் பிரிவான குன்றல் பகுப்பின்போது மீளினைவுக்கு குறுமவகத் தாண்டல் வழியாகத் தம் மரபுப் பொருளைப் பகிர்கின்றன. எனவே இந்தக் குறுமவகங்களின் மரபுப் பொருள்கள் ஒவ்வொரு தலைமுறையிலும் கலக்கின்றன. இதனால் புதிய சடுதிமாற்றங்கள் பெற்றோரில் இருந்து வழித்தோன்றல்களுக்குத் தற்போக்கில் கடத்தப்படுகின்றன.
ஒய் குறுமவக மரபன், ஊன்குருத்து மரபன் தனிக் கூறுபாடே, இவ்விருவகை மூலக்கூறுகளின் குறிப்பிட்ட துண்டத்தில் சடுதிமாற்றங்கள் தொடர்ந்து திரள இயல்வதும் அச்சடுதிமாற்றங்கள் மரபனில் நிலைத்த ஓரிடத்தில் நிலையாகத் தங்கிநிற்பதும் ஆகும். மேலும் இந்தச் சடுதிமாற்றங்களின் வரலாற்று வரிசையை உய்த்தறியவும் முடியும். எடுத்துகாட்டாக, பல மாந்தர்களில் இருந்து பெறப்பட்ட ஒய் குறுமவகங்களின் குறிப்பிட்ட கணம் சடுதிமாற்றம் A வையும் இந்தக் குறுமவகங்களின் ஐந்து மட்டும் சடுதிமாற்றம் B யையும் பெற்றிருந்தால், அப்போது கட்டாயமாக B சடுதிமாற்றம், A சடுதிமாற்றத்துக்குப் பின்னரே ஏற்பட்டிருக்க வேண்டும்.
ஒருமைப் பண்புக் குழு மக்கள்தொகை மரபியல்
தொகுஇன்றுவரை வாழும் ஒருமைப் பண்புக் குழுவின் சடுதிமாற்ரத்துக்குச் சார்பாகவோ எதிராகவோ யற்கைத் தேர்வு ஏதும் இல்லையெனக் கொள்லப்படுகிறது[சான்று தேவை]; எனவே சடுதிமாற்ற விகிதங்களைத் தவிர, (இது குறிப்பானுக்குக் குறிப்பான் மாறுகிறது) மக்கள்தொகை மரபியலுக்கான முதன்மை உந்தல் மரபியல் பெயர்வு ஆகும். இம்மரபியல் பெயர்வு மக்கள்தொகையில் அமையும் ஒருமைப் பண்புக் குழுக்களின் விகிதசமங்களை மாற்ருகிறது மரபியல் பெயர்வு என்பது குறிப்பிட்ட மக்கள்தொகையின் உறுப்பினர்கள் தம் மரபுக் கூறுகளைத் தகுந்த பாலினமுள்ள அடுத்த தலைமுறை உறுப்பினர்களுக்கு கடத்தும் பதக்கூறுகளின் தற்போக்கு அல்லது வருநிகழ்வுபோக்குத் தன்மையானது உருவாக்கும் தற்போக்கு (வருநிகழ்வு) வேறுபாடு அல்லது அலைவு ஆகும்.
இதனால் குறிப்பிட்ட மரபியல் குறிப்பானின் நிலவுகை, தொடர்ந்து அது 100% அலவுக்கு உயரும் வரையோ அல்லது முற்றிலும் இல்லாமல் போகும்வரையிலோ அலைவுறுகிறது. உயர்வான கலப்பு நிகழும் பேரளவு மக்கள்தொகைகளில் மாற்றுமரபு அலகுகளின் மரபியல் பெயர்வின் வீதம் மிக்க் குறவாக அமைகிறது; என்றாலும், தாழ்வாக கலப்பு நிகழும் சிற்றளவு மக்கள்தொகைகளில் மரபியல் பெயர்வீதம் கூடுவதால் மாற்றங்கள் விரைந்து நிகழ்கிறது. குறிப்பிட்ட ஒருமைப் பண்பு வகைமைகளும் ஒருமைப் பண்பு வகைமைக் குழுக்களும் சார்ந்த செறிவும் புவிப்பரப்புப் பரவலும் நிறுவனர் விளைவைச் சந்திக்கின்றன அல்லது மீள்நிகழ் மக்கள்தொகை இடுக்கண்களைச் சந்திக்கின்றன. எனவே இதனால் மக்கள்தொகைகள் தனிப்படுதலும் அளவில் உயர்தலும் ஏற்படுகிறது.
இன்றைய கால்வழிகளில் இருந்து நாம் பின்னோக்கிச் சென்றால் பழந்தலைமுறை மக்கள்தொகையின் முழு மரபியல் வேறுபாட்டை அறிதல் முடியாது: ஏனெனில், மரபன் பெயர்வு சில வேறுபாடுகளை இறக்கச் செய்துவிடும். செலவுநோக்கில், முழு ஒய் மரபன், ஊன்குருத்து மரபன் ஓர்வுகள் அத்தரவுகளை முழுமையாகத் தரவல்லனவாக அமைவதில்லை; என்றாலும், கடந்த பத்தாண்டுகளாக அவற்றின் செலவு அல்லது அடக்க விலை குறைந்துவிட்டது. ஒருமைப் பண்புக் குழுவின் கூட்டிணைவு நேரங்களும் ந்டப்பு புவியியல் பரவலும் கணிசமான பிழை உறுதியின்மைகளைக் கொண்டுள்ளன. இது மிகவும் கூட்டிணைவு நேரங்களுக்குப் பொருந்தும்; ஏனெனில், பெரும்பாலான மக்கள்தொகை மரபியலார் இன்னமும் சிவத்தோவ்சுகி முறையைப் பின்பற்றுகின்றனர். "சிவத்தோவ்சுகி முறை", அதன் பொய்மைத் தன்மைக்காக மரபன் கால்வழியியலாரால் தொடர்ந்து எதிர்க்கப்பட்டு வருகிறது. முழுச் சமூக உயிரியான "ஆங்கிலோபாலிபியா பேலன்சு" வகைக் குளவியில் எட்டு ஒருமைப் பண்புக் குழுக்கள், அவை உள்ள இருப்பிடத்தைப் பொறுத்து, அமைகின்றன. இது மரபியல் பெயர்வு நிகழ்ந்ததைத் தெளிவாகக் காட்டுகிறது.
மாந்தரின ஒய் குறுமவக மரபன் ஒருமைப் பண்புக் குழுக்கள்
தொகுமுதன்மைக் கட்டுரை: மாந்தரின ஒய் குறுமவக மரபன் ஒருமைப் பண்புக் குழு
மாந்தரின ஒய் குறுமவக மரபன் ஒருமைப் பண்புக் குழுக்கள் A முதல் T வரையி அமைந்த ஆன்ங்கிலப் பெரிய ழுத்துகளில் பெயரிடப்பட்டுள்ளன. அவை மேலும் எண்களையும் ஆங்கிலச் சிறிய எழுத்துகளையும் பயன்படுத்தி உட்பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன. ஒய் குருமவக ஒருமைப் பண்புக் குழுக்களின் பெயர்கள் ஒய் குறுமவகப் பேரிணையத்தால் பேணப்படுகின்றன.[6]
ஒய் குறுமவக ஆதாம் என்பது அனைத்து வாழும் மாந்தர்களின் மிக அண்மிய பொது தந்தைக் கால்வழி (ஆண் கால்வழி) மூதாதைக்கு ஆய்வாளர்கள் இட்டுள்ள பெயராகும்.
பேரியல் ஒய் குறுமவக ஒருமைப் பண்புக் குழுக்களும் அவற்றின் புவிப்பரப்புப் பரவலும் (அண்மைய ஐரோப்பியக் குடியேற்றத்துக்கு முன்பு), கீழே காட்டப்பட்டுள்ளது:
M168 சடுதிமாற்றம் நிகழாத குழுக்கள்தொகு
M168 சடுதிமாற்றம் உள்ள குழுக்கள்தொகு(சடுதிமாற்றம் M168 தோராயமாக அமு 50,000 இல் தோன்றியது)
M89 சடுதிமாற்றம் உள்ள குழுக்கள்தொகு(சடுதிமாற்றம் M89 தோராயமாக, அமு45,000 ஆண்டுகளில் தோன்றியுள்ளது)
L15 , L16 சடுதிமாற்றங்கள் உள்ள குழுக்கள்தொகு
சடுதிமாற்றம் M9 உள்ள குழுக்கள்தொகு(சடுதிமாற்றம் M9 தோராயமாக, அமு 40,000 ஆண்டுகள் அளவில் தோன்றியுள்ளது)
சடுதிமாற்றம் M526 உள்ள குழுக்கள்தொகு
மாந்தரின ஊன்குருத்து மரபன் ஒருமைப் பண்புக் குழுக்கள்தொகுமுதன்மைக் கட்டுரை: மாந்தரின ஊன்குருத்து மரபன் ஒருமைப் பண்புக் குழு மாந்தரின ஊன்குருத்து மரபன் ஒருமைப் பண்புக் குழுக்கள் பின்வருமாறு ஆங்கிலப் பெரிய எழுத்துகளால் பெயரிடப்பட்டுள்ளன: A, B, C, CZ, D, E, F, G, H, HV, I, J, முன்-JT, JT, K, L0, L1, L2, L3, L4, L5, L6, M, N, P, Q, R, R0, S, T, U, V, W, X, Y, and Z. மிக அண்மைய ஊன்குருத்து மரபன் ஒருமைப் பண்புக் குழுக்கள் மன்னிசு வான் ஓவனால் தன் தொகுதித் தரு வலைத்தளத்தில் பேணப்படுகின்றன.[8] ஊன்குருத்து ஏவாள் என்பது ஆய்வாளர்கள் அனைத்து வாழும்மாந்தரின் மிக அண்மிய பொதுத் தாய்க்கால்வழி (பெண் கால்வழி) மூதாதைக்குத் தந்துள்ள பெயராகும். மக்கள்தொகையை வரையறுத்தல்தொகுமக்கள்தொகைகளின் மரபியலை வரையறுக்க ஒருமைப் பண்குக் குழுக்களைப் பயன்படுத்தலாம். பெரும்பாலும் இவை புவிப்பரப்பைச் சார்ந்தே அமைகின்றன. எடுத்துகாட்டாக, கீழுள்ளவை ஊன்குருத்து மரபன் ஒருமைப் பண்புக் குழுக்களின் பிரிவுகளாகும்:
ஊன்குருத்து ஒருமைப் பண்புக் குழுக்கள் L, M, N ஆகிய மூன்று முதன்மை வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. மாந்தரின L குழு முதலில் L0 முதல் L1-6 வரை பிரிய, L1-6 மட்டும் L3, M, N எனும் குழுக்களாகப் பிரிந்தது. M குழுவில் ஆப்பிரிக்காவை விட்டு முதலில் வெளியேறிய மாந்தரின நகர்வுகள் அடங்கும். இவை கிழக்காகத் தென்கடலோரமாக நகர்ந்தன. M ஒருமைப் பண்புக் குழுவின் கால்வழிவந்த மக்கள் கிழக்கு ஆப்பிரிக்கா, ஆசியா, அமெரிக்கப் பழங்குடிகள், மலனேசியா முழுவதிலும் அமைகின்றனர். ஆனால் இவை ஐரோப்பாவில் சற்றும் கூடக் காணப்படவில்லை. N குழு ஆப்பிரிக்காவை விட்டு வெளியேறிய அடுத்த நகர்வைக் குறிக்கிறது. இது கிழக்காக நகராமல், வடக்காக நகர்ந்துள்ளது. இந்த நகர்வுக்கு சற்றே பின்னர் பெரிய R குழு N குழுவில் இருந்து பிரிந்துள்ளது. புவிப்பரப்புப் பரவல்களைப் பொறுத்து R குழு இரு துனைக்குழுக்களாகப் பிரிகிறது. இவற்ரில் ஒன்றுதென்கிழ்க்கு ஆசியாவிலும் ஓசியானாவிலும் அமைய, மற்றொன்று அனைத்து ஐரோப்பிய மக்கள்தொகைகலையும் உள்லடக்குகிறது. N(xR) ஒருமைப் பண்புக் குழு, அதவது N குழுசார்ந்த ஆனால் அதன் R துணைக்குழுவைச் சாராத ஊன்குருத்து மரபன் குழு ஆத்திரேலியப் பழங்குடி மக்களில் பரவலாக அமைகிறது. மேலும் தாழ் நிகழ்வெண்களில் ஐரோப்பாசியாவிலும் அமெரிக்கப் பழங்குடிகளிலும் அமைகிறது. L வகைமை கிட்டத்தட்ட அனைத்து ஆப்பிரிக்கர்களையும் உள்ளடக்குகிறது. M வகைமை யில் பின்வருவன அடங்கும்: M1 எதியோப்பியர்களும் சொமாலியர்களும் இந்தியர்களும் இதில் அடங்குவர். ஆப்பிரிக்க நிலமுனைக்கும் அரேபியத் தீவகத்துக்கும் (சவுதி அரேபியா, யேமன், ஓமன்) இடையில் இவை செங்கடலுக்கும் ஏதேன் வளைகுடாவுக்கும் குறுகிய நீர்ச்சந்தியால் மட்டும் பிரிக்கப்பட்டுள்ளதால் மரபன் பெயர்வுநடந்த்தால் இந்நிலை ஏற்பட்டுள்ளது. CZ பல சைபீரியன்களி உள்ளது; கிளை C சில அமரிந்தியர்களில் உள்ளது; கிளை Z பல சாமியர்களிலும் கொரியர்களிலும் வட சீனர்களிலும்நடுவண் ஆசிய மக்களிலும் உள்ளது. D சில அமரிந்தியர்களிலும் பல சைபீரியர்களிலும் வடகிழக்கு ஆசியர்களிலும் உள்ளது. E மலாய், போர்னியா, பிலிப்பைன்சு, தைவானியப் பழங்குடிகள், பாப்புவா நியூகினியாஆகி இடங்களில் உள்ளது. G பல வடகிழக்கு சைபீரியர்களிலும் வடகிழக்கு ஆசியர்களிலும் நடுவண் ஆசியர்களிலும் உள்ளது. Q- மலனேசியா, பாலினேசியா, நியூகினியா மக்கள்தொகைகளில் உள்ளது. N வகைமை யில் பின்வருவன அடங்கும்: A சில அமெரிக்க இந்தியர்களிலும் சிலயப்பானியர்களிலும் கொரியர்களிலும் அமைகிறது. I 10% நிகழ்வெண்ணில் வடக்கு,கிழக்கு ஐரோப்பாவில் உள்ளது. S ஆத்திரேலியத் துணைக்குழுக்களில் அமைகிறது. W சில கிழக்கு ஐரோப்பியர்களிலும் தெற்காசியர்களிலும் தென்கிழக்கு ஆசியர்களிலும் அமைந்துள்ளது. X சில அமரிந்தியர்களிலும் தெற்கு சைபீரியர்களிலும் தென்மேற்கு ஆசியர்களிலும் தெற்கு ஐரோப்பியர்களிலும் காணப்படுகிறது. Y பெரும்பாலான நிவிக்குகளிலும் ஐனர்களிலும் உள்ளது; 1% அளவுக்கு தெற்கு சைபீரியர்களில் அமைகிறது. R பேரியல் குழு, N வகைமையுள் அடங்குகிறது. இது மேற்கு, கிழக்கு ஐரோப்பாசியா புவிப்பரப்புகளில் பரவியுள்ளது. இன்று வாழும் பெரும்பாலான ஐரோப்பிய மக்கள்தொகைகளும் நடுவண் கிழக்குப் பகுதி மக்கள்தொகைகளும் இக்கிளைப் பிரிவில் அமைகின்றனர். இக்குழுவின் சிறு விழுக்காட்டு (%) அளவு மக்கள் பிற N வகைக் குழுக்களில் காணப்படுகின்றனர். R வகையின் துணைக்குழுக்கள் கீழே தரப்படுகின்றன: B குழு, சில சீனர்களிலும் திபெத்தியர்களிலும் மங்கோலியர்களிலும் நடுவண் ஆசியர்களிலும் கொரியர்களிலும் அமரிந்தியர்களிலும் தென் சைபீரியர்களிலும் யப்பானியர்களிலும் ஆத்திரோனேசியர்களிலும் அமைகின்றனர். F குழு, முதன்மையாக, தென்கிழக்கு ஆசியாவில், குறிப்பாக வியட்நாமில் அமைகிறது; 8.3% அளவுக்குக் குரோசியாவின் உவார் தீவில் உள்ளது.[9] R0 குழு, அரேபியாவில் எத்தியோப்பியர்களிலும் சொமாலியர்களிலும் காணப்படுகிறது; கிளை HV (கிளை H; கிளை V) குழு, ஐரொப்பாவிலும் மேற்கு ஆசியாவிலும் வட ஆப்பிரிக்காவிலும் அமைகிறது; முந்து JT குழு, இலவாண்டில் தோன்றியது (நிகழ்கால இலெபனான் பகுதி). இது பெதவின் மக்கள்தொகையில் 25% அளவு நிகழ்வெண்ணில் காணப்படுகிறது; கிளை JT (கிளை J; கிளை T) குழு, வட, கிழக்கு ஐரோப்பாவிலும் சிந்துவெளியிலும் நடுத்தரைக் கடல் பகுதியிலும் உள்ளது. U குழு, மேற்கு ஐரோப்பாசியாவிலும் இந்தியத் துணைக்கண்ட்த்திலும் அல்ஜீரியாவிலும் உயர் நிகழ்வெண்ணில் உள்ளது; இது இந்திவில் இருந்து நடுத்தரைக் கடல் பகுதியூடாக எஞ்சிடும் ஐரோப்ப்பா முழுவதிலும் அமைகிறது; U5 குழு, சுகாண்டிநேவியாவிலும்பால்டிக் நாடுகளிலும் உயர் நிகழ்வெண்ணில் உள்ளது. இது குறிப்பாக, சாமி மக்களில் மிகமிக உயர்வெண்ணில் உள்ளது. ஒய் ஒருமைப் பண்புக் குழுக்களுக்கும் ஊன்குருத்து ஒருமைப் பண்புக் குழுக்களுக்கும் இடையே உள்ள மேற்படிவுதொகுஒய் ஒருமைப் பண்புக் குழுக்கள், ஊன்குருத்து ஒருமைப் பண்புக் குழுக்கள் ஆகியவற்றின் குறிப்பிட்ட நெடுக்கங்கள் ஒன்றின் மேலொன்று மேற்படிகின்றன. இது ஒய் ஒருமைப் பண்புக் குழுவும் ஊன்குருத்து ஒருமைப் பண்புக் குழுவும் கலந்த குறிப்பிட்ட சேர்மானம் கொண்ட மக்கள்தொகைகள் நிலவலை உருவாக்குகிறது. ஒய் சடுதிமாற்றங்களும் ஊன்குருத்துச் சடுதிமாற்றங்களும் ஒரே காலத்தில் நேர்வதில்லை. இருபாலினங்களுக்கு இடையில் நிகழும் பாலியல் தேர்வின் வேறுபட்ட வீதங்களும் நிறுவனர் விளைவும் மரபனியல் நகர்வும் சேர்ந்து மக்கள்தொகையின் ஒருமைப் பண்புக் குழு உள்ளியைபை மாற்றுவதால் மேற்படிவுகள் மிகமிகத் தோராயமாகவே அமையும். மிகமிகத் தோராயமான இவ்வொருமைப் பண்புக் குழுக்களின் மேற்படிவுகள் கீழே தரப்படுகின்றன:
புவியியலாக ஒய் குறுமவக, ஊன்குருத்து மரபன்களின் ஒருமைப்பண்புக் குழுக்களின் தோற்றம்தொகுபெகாடா குழுவினர் 2013 இல் முன்மொழிந்த புவியியலான ஒய் குருமவக, ஊன்குருத்து மரபன்களின் ஒருமைப்பண்புக் குழுக்களின் தோற்றம் கீழே உள்ளன.[10] ஒய் குறுமவக மரபன்தொகுமுதல் பேரழிவு நிகழ்ச்சிக் கால ஒற்றைக் கருவன் பல்லுருவாக்கங்கள் சார்ந்த ஒருமைப் பண்புக் குழுக்கள் தோராயமாக, அமு 45–50 ஆண்டுகளில் தோன்றியுள்ளன. மால்டா பண்பாட்டின்படி, இரண்டாம் பேரழிவு நிகழ்ச்சிக் கால ஒற்றைக் கருவன் பல்லுருவாக்கங்கள் சார்ந்த ஒருமைப் பண்புக் குழுக்கள் அமு32–35 ஆயிரம் ஆண்டுகள் அளவில் பிரிந்துள்ளன. சுழிப் பேரழிவு நிகழ்ச்சிக் காலம் டோபா எனும் முற்றுப் பேறழிவுக் காலம் ஆகும். இக்கட்டத்தில் CDEF* ஒருமைப் பண்புக் குழுக்கள் தோன்றி, C, DE, F. C ஆகப் பிரிந்தன. F பொதுவான மாற்றங்களைக் கொண்டில்லை. ஆனால் Dயும் E யும் பொதுக் கூறுபாடுகளைக் கொண்டுள்ளன. நடப்பு நிலவரப்படி, முதல் பேரழிவு நிகழ்ச்சிக் காலம் டோபாவுக்குப் பின்னர் ஏற்பட்டுள்ளது. ஆனால் தொன்மை வாய்ந்த பழமரபனின் காலம் சுழி பேரழிவு நிகழ்ச்சியை டோபாவுக்கு நெடுங்காலத்துக்கு முன்னே தள்ளுகிறது. மேலும் முதல் பேரழிவு நிகழ்வையும் டோபாவுக்கு அண்மையதாக்குகிறது. எனவே இவர்களின் பேரழிவு நிகழ்ச்சிகளின் காலம் நம்பவியலாத கற்பிதங்கள் ஆகும்.பெரும்பாலான இவர்களின் குறிப்புகளும் கூட ஊகங்களாகவே அமைகின்றன. ஒற்றைக் கருவன் பல்லுருவாக்கத்தால் கணிக்கும் தொல்பழ மரபனின் காலம் மிகப்பெரும் வேறுபாடு உடையதாக உள்லது. மேலும் இந்த ஒருமைப் பண்புக் குழுகளின் பிரிந்துவிலகல் ஒருங்கே நிகழ்ந்து இருந்தாலும் துல்லியமாக எப்போது இவை தோன்றினவெனக் கூறமுடியாது.[11][12]
ஊன்குருத்து மரபன் (mtDNA)தொகு
மேலும் காண்கதொகுமாந்தரின ஒய் குறுமவக மரபன் ஒருமைப் பண்புக் குழு மாந்தரின ஊன்குருத்து மரபன் ஒருமைப் பண்புக் குழு மேற்கோள்கள்தொகு
வெளி இணைப்புகள்தொகு
பொதுதொகுசெய்திகள்தொகு
அனைத்து மரபன் ஒருமைப் பண்புக் குழுக்கள்தொகுY-Chromosome - *http://www.scs.uiuc.edu/~mcdonald/WorldHaplogroupsMaps.pdf ஒய் குறுமவக மரபன் ஒருமைப் பண்புக் குழுக்கள்தொகு
ஊன்குருத்து மரபன் ஒருமைப் பண்புக் குழுக்கள்தொகு
மென்பொருள்தொகு
|