ஒரு நொடியில்

2016 திரைப்படம்

ஒரு நொடியில் (Oru Nodiyil) என்பது 2016 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் திகில் நகைச்சுவை திரைப்படம் ஆகும். சவுத்ரி இயக்கிய இப்படத்தில் புதுமுகம் மதன், சிருஷ்டி டங்கே, தபஸ்ரீ ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். இப்படம் ஒரே நேரத்தில் தமிழிலும், தெலுங்கிலும் பார்வதிபுரம் என்ப பெயரில் படமாக்கப்பட்டது.[1]

ஒரு நொடியில்
இயக்கம்எம். ஏ. சௌத்ரி
தயாரிப்புகே. கோட்டீஸ்ர ராவ்
நல்லு வெங்கட சுரேஷ்
கதைகீதாசலம் (தெலுங்கு உரையாடல்)
திரைக்கதைஎம். ஏ. சௌத்ரி
இசைஷயக் பர்வீஸ்
நடிப்பு
ஒளிப்பதிவுமஹி ஷர்லா
படத்தொகுப்புசத்யா
எல்டாண்டி ராஜு
சாய் சீனிவாஸ்
கலையகம்நட்சத்திரா எண்டர்டெயின்மெண்ட்ஸ்
அக்கார் புரோடக்சன்ஸ்
வெளியீடு22 ஏப்ரல் 2016 (2016-04-22) (தமிழ்)
10 சூன் 2016 (2016-06-10) (தெலுங்கு)
ஓட்டம்140 நிமிடங்கள் (Tamil)
92 minutes (Telugu)
நாடுஇந்தியா
மொழிதமிழ்
தெலுங்கு

நடிகர்கள் தொகு

தயாரிப்பு தொகு

ஐநூறு ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு கிராமத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்து, கிராமத்திற்குள் நுழையும் எவரையும் கொல்லும் ஒரு ஆவி பற்றிய படம் இது.[2] மதன், சிருஷ்டி டங்கே, தபஸ்ரீ, குஷி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளர்.[3] முன்னணி நடிகர்களில் டாங்கே தவிர அனைவரும் புதியவர்கள்.[4] கிராமத்தில் நிலவும் மர்மத்தை கண்டுபிடிக்க முயற்சிக்கும் ஒரு தொலைக்காட்சி நிருபராக மதன் நடித்துள்ளார்.[5] கவர்ச்சி வேடத்திற்கு டாங்கே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[1] இந்த படத்தில் முப்பரிமாண கிராபிக்ஸ் பெரிதும் பயன்படுத்துகிறது மேலும் இது இன்றைய காலத்தில் எடுக்கபட்ட ஒரு காதல் பரபரப்பூட்டும் படம் ஆகும். இந்த படம் குஜராத்தில் இருந்த இதேபோன்ற பண்டைய மர்ம நிகழ்வு பற்றியது.[6] படம் மிகவும் தாமதத்திற்குப் பிறகு வெளியிடப்பட்டது.

இசை தொகு

படத்தின் பாடல்களுக்கு ஷயக் பர்வீஸ் இசையமைத்துள்ளார்.[1][5][7]

தமிழ் பதிப்பு பாடல்கள்
# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "ஒருமுறை ஒருமுறை"  காயத்திரி சிறீ கிருஷ்ணா 4:38
2. "வணிதா நவ கவிதா"  காயத்திரி சிறீ கிருஷ்ணா 4:40
3. "சிலிகான் வேலி பிகரே"  சாகிதி 4:36
4. "சக்தி சுவரூபினி"  லலிதா சாகர் 3:21
5. "மல்லுவேட்டி கட்டிகிட்டு"  காயத்திரி 4:10
6. "சில்ப சௌந்தர்யம் நானடா"  காயத்திரி 5:01
மொத்த நீளம்:
26:26

அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் ஜெயசூரியா. 

தெலுங்கு பதிப்பு பாடங்கள்[8]
# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "மகசிறீகலா நெல்லரேடு"  சுனிதா  
2. "சிம்லா ஆப்பில் நீ பேரே"  சக்தி  
3. "ஒக்கராசி ஒக்கராசி பாமா"  அனுமா, பரிங்கா  
4. "வணிதா நவ கவிதா"  சறீ கிருஷ்ணா, மாளவிகா  
5. "மொலதாடு கட்டகனே"  கீதா மாதுரி, லலிதா சாகர்  
6. "சக்தி சுவரூபிணி"  லலிதா சாகர்  
மொத்த நீளம்:
26:27

குறிப்புகள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒரு_நொடியில்&oldid=3793324" இருந்து மீள்விக்கப்பட்டது