ஒ. வே. உஷா

இந்திய எழுத்தாளர்

ஒ. வே. உஷா (ஒற்றபிளாக்கல் வேலுக்குட்டி உஷா)(O. V. Usha)(பிறப்பு 4 நவம்பர் 1948)[1] என்பவர் மலையாள கவிஞர் மற்றும் நாவலாசிரியர் ஆவார். இவர் "ஆழமான தார்மீக அக்கறை மற்றும் தொழில்நுட்ப சாமர்த்தியம்" கொண்ட கவிஞர் எனப் பாராட்டப்பட்டார்.[2] இவர் நான்கு கவிதைத் தொகுதிகளையும் ஒரு சில சிறுகதைகளையும் உஷா எழுதியுள்ளார். பல்வேறு பத்திரிகைகளிலும் கட்டுரைகள் எழுதியுள்ளார். கோட்டயத்தில் உள்ள மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தின் வெளியீடுகளின் இயக்குநராக உஷா பணியாற்றினார்.[3] 2000ஆம் ஆண்டு வெளியான மலையாளத் திரைப்படமான மஜாவுக்காக சிறந்த பாடலுக்கான கேரள மாநில திரைப்பட விருதை வென்றார்.

ஓ. வெ. உஷா
ஓ. வெ. உஷா 2016-ல்
ஓ. வெ. உஷா 2016-ல்
பிறப்பு4 நவம்பர் 1948 (1948-11-04) (அகவை 76)
தொழில்பாடலாசிரியர், நாவலாசிரியர்
குடும்பத்தினர்ஒ. வே. விஜயன் (சகோதரர்)

வாழ்க்கை வரலாறு

தொகு
 

உஷா கேரளாவின் பாலக்காடு அருகே உள்ள ஒரு சிறிய கிராமத்தில் தனது குடும்பத்தில் இளைய குழந்தையாகப் பிறந்தார்.[4] இவருடைய குழந்தைப் பருவம் பெரும்பாலும் இவரது சொந்த கிராமத்தில் கழிந்தது. இவரது தந்தை "மலபார் சிறப்புக் காவல்படையில்" பணிபுரிந்தார். இவரது மூத்த சகோதரர் ஓ. வெ. விஜயன் ஒரு நாவலாசிரியர் மற்றும் கேலிச்சித்திர வரைஞர் ஆவார்.[4] உஷா தனது தாயால் மலையாள இலக்கியத்தின் பால் ஈர்க்கப்பட்டார். இதனால் சிறு வயதிலேயே மலையாள இலக்கியம் மீது ஆர்வம் ஏற்பட்டது.[5] உஷா தனது 13 வயதில் கவிதைகள் எழுதத் தொடங்கினார். மலையாள வார இதழான மாத்ருபூமியின் "குழந்தைகள் பகுதியில்" அடிக்கடி பங்களிப்பவர் ஆனார்.[5] 1973ஆம் ஆண்டு வரை இவரது 25வது வயதில் இவரது கவிதைகள் வார இதழில் தொடர்ந்து வெளியிடப்பட்டன. பள்ளிப் படிப்பிற்குப் பிறகு, இவர் தில்லிக்குக் குடிபெயர்ந்தார். இவரது சகோதரர் தில்லியில் குடியேறினார். மேலும் தில்லி பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.[4]

எழுத்துப் பணி

தொகு

தனது பட்டப்படிப்பை முடித்ததும், உஷா தலையங்கப் பயிற்சியாளராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் பதிப்பகம் ஒன்றின் தலைமை ஆசிரியரானார்.[5] 1971-ல், "இன்குலாப் ஜிந்தாபாத்" என்ற தலைப்பில் வெளியான இவரது சிறுகதை ஒன்று அதே பெயரில் திரைப்படமாக எடுக்கப்பட்டது. இந்த படத்திற்கு உஷா பாடல் ஒன்றையும் எழுதினார் ('ஆருதே மனசிலே கானமாய் நான்', இசை ஜி. தேவராஜன், பாடகி பி.லீலா) நவீன மலையாளத் திரைப்படத்தின் முதல் பெண் பாடலாசிரியரானார்.[6] 1973 முதல், பத்து வருட காலத்திற்கு இவர் அதிக பங்களிப்பு செய்யவில்லை. 1982-ல், இவர் மீண்டும் எழுதத் தொடங்கினார். இதன் பின்னர் அடிக்கடி பங்களிப்பாளராக இருந்து வருகிறார். இவரது பெரும்பாலான கவிதைகள் "புத்தக வடிவில்" வெளியிடப்படவில்லை என்றாலும், இவரது ஒரே நாவலான ஷாஹித் நாமா 2001-ல் வெளியிடப்பட்டது.[5] இவர் 2008-ல் கேரள மாநில திரைப்பட விருதுகளின் நடுவர் மன்ற உறுப்பினர்களில் ஒருவராக இருந்தார். மேலும் மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தின் வெளியீடு துறையின் இயக்குநராக பணியாற்றினார்.[7][8]

வெளியீடு

தொகு
  • சிநேககீதங்கள் (கவிதை)
  • தியானம் (கவிதை)
  • அக்னிமித்திரனொரு குறிப்பு (கவிதை)
  • ஷாஹித் நாமா (நாவல், 2001)
  • நிலம் தோட்டா மண்ணு (சிறுகதை)

விருதுகள்

தொகு
  • 2000 – மஜாவுக்கான சிறந்த பாடலுக்கான கேரள மாநில திரைப்பட விருது

மேற்கோள்கள்

தொகு
  1. "Archived copy". Archived from the original on 13 November 2018. பார்க்கப்பட்ட நாள் 13 November 2018.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  2. George 1992.
  3. "State Film Awards 1969 - 2012". Department of Information and Public Relations (Kerala). Archived from the original on 7 July 2015. பார்க்கப்பட்ட நாள் 2 February 2014.
  4. 4.0 4.1 4.2 Ajith Kumar, J. (24 November 2002). "A passion for the unknown". The Hindu இம் மூலத்தில் இருந்து 19 February 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140219084833/http://www.hindu.com/thehindu/lf/2002/11/24/stories/2002112400620200.htm. 
  5. 5.0 5.1 5.2 5.3 Tharu & Lalita 1993.
  6. "Some Lady Bards". The Hindu. 3 February 2011. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/some-lady-bards/article1151085.ece. 
  7. "Film award jury formed". The Hindu. 19 May 2009. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-kerala/film-award-jury-formed/article286128.ece. 
  8. "Bibliography of new books released". The Hindu. 22 March 2010 இம் மூலத்தில் இருந்து 27 மார்ச் 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100327210357/http://www.hindu.com/2010/03/22/stories/2010032258880300.htm. 

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
ஒ. வே. உஷா
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒ._வே._உஷா&oldid=3935147" இலிருந்து மீள்விக்கப்பட்டது