ஓசுமியம்(V) குளோரைடு

வேதிச் சேர்மம்

ஓசுமியம்(V) குளோரைடு (Osmium(V) chloride) என்பது OsCl5 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியல் சேர்மமாகும். ஓசுமியம் தனிமமும் குளோரினும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.

ஓசுமியம்(V) குளோரைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
ஐங்குளோரோ ஓசுமியம், ஓசுமியம் பெண்டாகுளோரைடு
இனங்காட்டிகள்
71328-74-0
ChemSpider 4423016
InChI
  • InChI=1S/5ClH.Os/h5*1H;/q;;;;;+5/p-5
    Key: UVOYHLXSTOWTCX-UHFFFAOYSA-I
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 5257384
SMILES
  • Cl[Os](Cl)(Cl)(Cl)Cl
பண்புகள்
Cl5Os
வாய்ப்பாட்டு எடை 367.48 g·mol−1
தோற்றம் கருப்பு திண்மம்
அடர்த்தி 4.09
உருகுநிலை 160 °C (320 °F; 433 K)
கரையும்
கட்டமைப்பு
புறவெளித் தொகுதி P21/c[1]
Lattice constant a = 9.17 Å, b = 11.5 Å, c = 11.97 Å
படிகக்கூடு மாறிலி
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

தயாரிப்பு தொகு

ஓசுமியம் அறுபுளோரைடை அதிகப்படியான போரான் முக்குளோரைடுடன் சேர்த்து வினைபுரியச் செய்வதன் முலம் ஓசுமியம்(V) குளோரைடை சிறிய அளவில் தயாரிக்கலாம்.:[2]

2OsF6 + 4BCl3 → 2OsCl5 + 4BF3 + Cl2

ஓசுமியம் நான்காக்சைடைடுடன் கந்தக டைகுளோரைடு சேர்த்து வினைபுரியச் செய்வதன் முலமும் இதைப் பெறலாம்:[3]

2OsO4 + 8SCl2 + 5Cl2 → 2OsCl5 + 8SOCl2

இயற்பியல் பண்புகள் தொகு

ஓசுமியம்(V) குளோரைடு, இரேனியம்(V) குளோரைடுடன் ஒத்த உருவங்கொண்ட கருப்பு நிற இருபடி திண்மப்பொருளை உருவாக்குகிறது. முனைவற்ற கரைப்பான்களில் மிகக் குறைவாகவே கரைகிறது.[3] பாசுபோரைல்குளோரைடில் கரைந்து செம்பழுப்பு நிற கரைசலாக உருவாகி OsCl5·POCl3 என்ற படிகமாகிறது.[4]

மேற்கோள்கள் தொகு

  1. "Crystallography Open Database" (in ஆங்கிலம்). qiserver.ugr.es. பார்க்கப்பட்ட நாள் 31 March 2023.
  2. Macintyre, Jane E. (23 July 1992) (in en). Dictionary of Inorganic Compounds. CRC Press. பக். 2985. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-412-30120-9. https://books.google.com/books?id=9eJvoNCSCRMC&dq=Osmium+pentachloride&pg=PA2985. பார்த்த நாள்: 31 March 2023. 
  3. 3.0 3.1 Burns, Robert C.; O'Donnell, Thomas A. (1 November 1979). "Preparation and characterization of osmium pentachloride, a new binary chloride of osmium" (in en). Inorganic Chemistry 18 (11): 3081–3086. doi:10.1021/ic50201a027. பன்னாட்டுத் தர தொடர் எண்:0020-1669. https://pubs.acs.org/doi/abs/10.1021/ic50201a027. பார்த்த நாள்: 31 March 2023. 
  4. Dehnicke, Kurt; Lößberg, Rainer (1980-12-01). "Eine neue Synthese und das IR-Spektrum von Osmiumpentachlorid / A New Synthesis and the IR Spectrum of Osmiumpentachloride". Zeitschrift für Naturforschung B (Walter de Gruyter GmbH) 35 (12): 1525–1528. doi:10.1515/znb-1980-1207. பன்னாட்டுத் தர தொடர் எண்:1865-7117. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓசுமியம்(V)_குளோரைடு&oldid=3788975" இலிருந்து மீள்விக்கப்பட்டது