ஓப்ரா வின்ஃப்ரே

ஓப்ரா கைல் வின்ஃப்ரே (பிறப்பு சனவரி 29, 1954) ஓர் அமெரிக்க அரட்டைக் காட்சி தொகுப்பாளர், தயாரிப்பாளர் மற்றும் வள்ளல். இவர் தன்பெயரைக் கொண்டு நடத்தும் ஓப்ரா வின்ஃப்ரே ஷோ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி இத்தைகைய வகை நிகழ்ச்சிகளின் வரலாற்றிலேயே மிகவும் உயர்ந்த மதிப்பீடுகளைப் பெற்று பல விருதுகளை வென்றுள்ளது.[3] இவர் இருபதாம் நூற்றாண்டின் மிகுந்த செல்வமுடைய ஆபிரிக்க அமெரிக்கர்,[4][5] அமெரிக்க வரலாற்றிலேயே மிகப்பெரும் கருப்பின வள்ளல்,[6][7] மற்றும் ஒருநேரத்தில் உலகின் ஒரே கருப்பு பில்லியனராக இருந்தவர் என்ற சிறப்புகளை உடையவர்.[8][9][10][11][12] இவர் மேலும் இருபதாம் நூற்றாண்டு உலகின் செல்வாக்கு மிகுந்த பெண்களில் ஒருவர்.[13][14][15]

ஓப்ரா வின்ஃப்ரே
Oprah Winfrey (2004).jpg
2004ஆம் ஆண்டு அவரது 50வது பிறந்தநாள் விழாவின்போது.
பிறப்புஓர்ப்பா கைல் வின்ஃப்ரே
சனவரி 29, 1954 (1954-01-29) (அகவை 68)
கோசுயசுகோ, மிசிசிப்பி, அமெரிக்க ஐக்கிய நாடு
இருப்பிடம்சிகாகோ, இல்லினாய்ஸ், அமெரிக்க ஐக்கிய நாடு
பணிஅரட்டைக் காட்சி தொகுப்பாளர், ஊடக உரிமையாளர், நடிகை
செயற்பாட்டுக்
காலம்
1983–நடப்பு
ஊதியம்$385 மில்லியன் (2008)[1]
சொத்து மதிப்பு< $2.4 பில்லியன் வார்ப்புரு:இழப்பு
(மார்ச் 2010)[2]
துணைவர்ஸ்டெட்மேன் கிரகாம்
கையொப்பம்
வலைத்தளம்
www.Oprah.com

இளமை வாழ்க்கைதொகு

வின்ஃப்ரே மிசிசிப்பியின் ஊரகப்பகுதியில் பதின்ம வயது தனியாக வாழ்ந்த அன்னைக்குப் பிறந்தவர். பின்னர் விசுகொன்சின் மாநில மில்வாக்கியின் உள்நகரப்பகுதியில் வளர்ந்தார். இளமையில் பல இன்னல்களை எதிர்கொண்டார்; ஒன்பது வயதில் பாலின வன்முறை, பதினான்கு வயதில் முதல் தாய்மை, குழந்தையின் குறைவயது மரணம் எனப்பல.[16] தனது தந்தை என அறியப்பட்டவருடன் ஓர் முடிதிருத்துபவருடன் டென்னசியில் வாழத்துவங்கிய வின்ப்ரே தனது பள்ளிப்படிப்பின் போதே பத்தொன்பது வயதில் ஓர் வானொலிநிலையத்தில் உள்ளூர் செய்திகளைத் தொகுத்து வழங்கத் தொடங்கினார்.[17] அவரது உணர்ச்சிமய பேச்சுத்திறமை அவரை பகல்வேளை அரட்டை நிகழ்ச்சி பகுதிக்கு மாற்றம் வாங்கித்தந்தது. மூன்றாம்தர சிகாகோ அரட்டை நிகழ்ச்சியை முதல்நிலைக்கு [9] கொண்டுவந்த பின்னர் தமது தயாரிப்பு நிறுவனத்தை நிறுவி தயாரித்த நிகழ்ச்சிகளை உலகெங்கும் விற்கத் துவங்கினார்.

காட்சியின் சிறப்புகள்தொகு

தமது அரட்டை நிகழ்ச்சிகளில் ஊடகத்தொடர்பில் தனிப்பட்ட வாக்குமூலங்களை வெளிப்படுத்தும் வகையினை உருவாக்கியவராக அறியப்படுகிறார்.[18][18][19][20][21] ஓர் யேல் ஆய்வின்படி இவரது நிகழ்ச்சிகள் மூலம் இருபதாம் நூற்றாண்டின் தயக்கங்கள் தூக்கியெறியப்பட்டு ஓரினச்சேர்க்கையாளர்கள்,ஈரினச்சேர்க்கையாளர்கள்,திருநங்கைகள் முன்னணி சமூகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளனர்.[22][23] 1990களின் மத்தியில் அவரது நிகழ்ச்சியில் இலக்கியம், தன்னிலை மேம்பாடு மற்றும் ஆன்மீகம் இடம்பெற துவங்கியது.பொதுவாக ஒப்புதல் பண்பாட்டை வளர்த்தவர்,[21] சர்ச்சைக்குரிய தன்னிலை மேம்பாடு பழக்கங்களை வளர்த்தவரென்றும் குறை கூறப்பட்டாலும் தனது இன்னல்களை எதிர்கொண்டு மற்றவர்களுக்கு உதவி புரிபவராக போற்றப்படுகிறார்.[24]</ref>

மேற்கோள்கள்தொகு

 1. "TV Guide: Oprah Earns $385 Million Per Year - omg! news on Yahoo!". 2008-08-10 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-04-11 அன்று பார்க்கப்பட்டது.
 2. "Forbes topic page on Oprah Winfrey". Forbes. 2010-03-27 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-04-05 அன்று பார்க்கப்பட்டது.
 3. King World Productions(August 4, 2004). "Oprah Winfrey signs with King World Productions for new three-year contract to continue as host and producer of "The Oprah Winfrey Show" through 2010-2011". செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: September 24, 2009.
 4. Noon, Chris (January 2, 2007). "Oprah The Educator". Forbes. ஜூன் 5, 2008 அன்று மூலம் பரணிடப்பட்டது. August 25, 2008 அன்று பார்க்கப்பட்டது.
 5. "Forbes.com". 2012-12-04 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 2012-12-04 அன்று பார்க்கப்பட்டது.
 6. Biography.com
 7. Urban Mecca(November 19, 2004). "Oprah Winfrey Debuts as First African-American On BusinessWeek's Annual Ranking of 'Americas Top Philanthropists'". செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: August 25, 2008. பரணிடப்பட்டது 2004-11-20 at the வந்தவழி இயந்திரம்
 8. Oprah Winfrey the richest black person in the world. பரணிடப்பட்டது 2008-12-02 at the வந்தவழி இயந்திரம் African Echo Vol. 43, September 11, 2006. Retrieved September 11, 2006
 9. 9.0 9.1 "#562 Oprah Winfrey". Forbes Special Report: The World's Billionaires (2006). Forbes. 2006. August 25, 2008 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter |month= ignored (|date= suggested) (உதவி)
 10. Malonson, Roy Douglas (May 10, 2006). "Condi and Oprah aren't good role models for Black motherhood". African-American News & Issues. 2006-05-20 அன்று மூலம் பரணிடப்பட்டது. August 25, 2008 அன்று பார்க்கப்பட்டது.
 11. Usborne, David (January 3, 2007). "Oprah's £20m school proves she's not all talk". London: Independent News and Media. March 4, 2007 அன்று பார்க்கப்பட்டது.
 12. Oprah brings Tolle's 'Earth' to the classroom - USATODAY.com
 13. Meldrum Henley-on-Klip, Andrew (January 3, 2007). "'Their story is my story' Oprah opens $40m school for South African girls". London: Guardian Unlimited. March 4, 2007 அன்று பார்க்கப்பட்டது.
 14. Doyle, Leonard (September 7, 2007). "Oprah throws house party to aid Obama bid". London: The Independent. February 8, 2008 அன்று பார்க்கப்பட்டது.
 15. The most influential US liberals: 1-20 - Telegraph
 16. Mowbray, Nicole (March 2, 2003). "Oprah's path to power". London: Guardian Unlimited. August 25, 2008 அன்று பார்க்கப்பட்டது.
 17. Oprah Winfrey TV Show Bio History Life Story Email Address Write Ophra
 18. 18.0 18.1 Tannen, Deborah (June 8, 1998). "Oprah Winfrey". The TIME 100. TIME. ஏப்ரல் 8, 2000 அன்று மூலம் பரணிடப்பட்டது. August 25, 2008 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter |= ignored (உதவி)
 19. "Oprah Apologizes; The Selling of Spying". Presenters: Howard Kurtz. CNN Reliable Sources. CNN. January 29, 2006. Transcript.
 20. Dr. Leonard Mustazza. "Coming After Oprah". செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: August 25, 2008. பரணிடப்பட்டது 2003-06-25 at the வந்தவழி இயந்திரம்
 21. 21.0 21.1 "Oprahization". Word Spy. August 25, 2008 அன்று பார்க்கப்பட்டது.
 22. "An interview and excerpt from Freaks Talk Back". University of Chicago Press. August 25, 2008 அன்று பார்க்கப்பட்டது.
 23. Deccanherald.com
 24. Mandela, Nelson. "Oprah Winfrey". The TIME 100. TIME. ஆகஸ்ட் 25, 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. February 1, 2008 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter |= ignored (உதவி)

வெளியிணைப்புகள்தொகு

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Oprah Winfrey
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓப்ரா_வின்ஃப்ரே&oldid=3608209" இருந்து மீள்விக்கப்பட்டது