ஓரிக்கை காஞ்சிபுரம் மாவட்டம் , காஞ்சிபுரம் நகராட்சியின் ஒரு பகுதியாக உள்ளது. இது ஓரிக்கை ஊராட்சியாக இருந்து. பின்னர் காஞ்சிபுரம் நகராட்சியின் ஒரு பகுதியாக மாற்றப்பட்டது. இவ்விடம் பாலாறு மற்றும் வேகவதி ஆற்றின் இடையே அமையப்பெற்றுள்ளது இதன் சிறப்பாகும். ஓரிக்கையானது காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. பட்டுச் சேலைகள் நெய்வதற்கு தேவையான ஜரிகை நூல், தமிழ்நாடு அரசின் ஜரிகை நிறுவனம் 6 டிசம்பர் 1971 முதல் ஓரிக்கையில் செயல்படுகிறது.[1] சந்திரசேகர சரசுவதி சுவாமியின் மணி மண்டபம் மற்றும் கோயில்கள் ஓரிக்கையில் பாயும் பாலாற்றங்கரையில் 28 ஜனவரி 2011 அன்று நிறுவப்பட்டது. [2][3]

இவ்விடம் மக்கள் அதிகம் வாழும் குடியுருப்பு பகுதியாகவும், கல்வி நிலையங்கள் மற்றும் சிறு தொழில் நிறுவனங்களும் கொண்டுள்ளது. இவ்விடத்தின் அஞ்சல் சுட்டு எண் 631502 ஆகும்.

மேற்கோள்கள்

தொகு
  1. TAMILNADU ZARI LIMITED
  2. Sri Kanchi Periyava Manimandapam, Orikkai
  3. காஞ்சி மகாபெரியவா சந்திரசேகர சரஸ்வதி சுவாமி மணி மண்டபம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓரிக்கை&oldid=3205808" இலிருந்து மீள்விக்கப்பட்டது