ஓலே கிறித்தென்சென் உரோமர் (Ole Christensen Rømer) (டேனிய பலுக்கல்: [ˈo(ː)lə ˈʁœːˀmɐ]; 25 செப்டம்பர் 1644 – 19 செப்டம்பர் 1710) ஒரு டேனீசிய வானியலாளர் ஆவார். இவர் 1676 இல் ஒளியின் வேகத்தை முதலில் அளந்து மதிப்பிட்டார்.

ஓலே உரோமர்
Ole Rømer
ஓலே உரோமர், ஜேகப் கொனிங்கின் ஓவியம், 1700
பிறப்புஓலே கிறித்தென்சென் உரோமர்
(1644-09-25)25 செப்டம்பர் 1644
ஆர்த்தசு, டென்மார்க்–நார்வே
இறப்பு19 செப்டம்பர் 1710(1710-09-19) (அகவை 65)
கோப்பனேகன், டென்மார்க்–நார்வே
தேசியம்டேனீசியர்
துறைவானியல்
கல்வி கற்ற இடங்கள்கோப்பனேகன் பல்கலைக்கழகம்
அறியப்படுவதுஒளி வேகம்
கையொப்பம்

இவர் புத்தியல்கால வெப்பமானியைக் கண்டறிந்தார். இது நீரின் இரு நிலையான வெப்பநிலைகளான உறைநிலைக்கும் கொதிநிலைக்கும் இடையிலான வெப்பநிலைகளை அளந்தது.

வாழ்க்கை

தொகு
 
Rundetårn, அல்லது வட்டக் கோபுரம், கோப்பனேகன். இதன் உச்சியில் பல்கலைக்கழக வான்காணகம் 17 ஆம் நூற்றாண்டில் இருந்து 19 ஆம் நூற்றாண்டு வரை இருந்தது. பின்னர்தான் அது புதிய இடத்துக்கு மாற்றப்பட்டது. நடப்பில் உள்ள வான்காணகம் 20 ஆம் நூற்றாண்டில் பயில்நிலை வானியலாளர்களுக்காக்க் கட்டப்பட்டது.
இவர் 1644 செப்டம்பர் 25 இல் ஆர்த்தசுவில் பிறந்தார். இவரது தந்தையார் கிரித்தென் பெடெர்சென்  (இறப்பு: 1663) ஆவார். இவரது தாயார் அன்னா ஒலுப்சுதத்தே சுட்டார்ம் (அண். 1610-1690) ஆவார். இவர் செல்வ வளமான குடும்பத்தில் பிறந்தவர் ஆவார்.[1] 1642 ஆம் ஆண்டுக்குப் பிறகு, இவர் தன்பெயரை உரோமர் எனப் பயன்படுத்தலானார். இதன் பொருள் இவர் டேனீசியத் தீவின் உரோமோவில் இருந்து வந்தவர் என்பதாகும். கிறிசுதென் பெடெர்சென் எனும் பெயரில் பலர் இருந்ததால் அவர்களில் இருந்து வேறுபடுத்தவே இப்பெயர் மாற்றத்தைப் பயன்படுத்த நேர்ந்துள்ளது.[2] ஆர்த்தசுவில் இருந்த பழைய கதீட்ரல் பள்லியில் கல்வி முடித்த ஆண்டான 1662 ஆம் ஆண்டுக்கு முன் இவரைப் பற்ரிய பதிவேதும் கிடைக்கவில்லை[3][4] இவர் கோப்பனேகனுக்குச் சென்று அங்கு கோப்பனேகன் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். இவரது பல்கலைக்கழக வழிகாட்டி இராசுமசு பர்த்தோலின் ஆவார். பர்த்தோலின் வீட்டில் இவர், 1668 இல்  உடன்தங்கியிருந்தபோது, அவர் ஐசுலாந்து படிகம் என்ற கால்சைட்டின் ஒளிக்கதிரின் இரட்டை ஒளிவிலகல் பற்ரிய ஆய்வை வெளியிட்டுள்ளார். அப்போது பர்த்தோலின் டைக்கோ பிராகுயி அவர்களின் நோக்கீடுகளை வெளியிடும் பணியில் ஈடுபட்டிருந்த்தால், உரோமர் அவற்றில் இருந்து கணிதவியலும் வானியலும் கற்க அனைத்து வாய்ப்புகளையும் பெற்றிருந்தார்.[5]

பிரெஞ்சு அரசு உரோமரைப் பணியில் அமர்த்தியது. பதினான்காம் உலூயிசு இவரைத் தவுபினுக்குப் பயிற்றுநராக அமர்த்தினார். அப்போது இவர் வார்சேல்சின் அரிய ஊற்றுகளை வடிவமைத்து அதன் கட்டுமானத்திலும் ஈடுபட்டார்.

தகைமைகள்

தொகு

இவர் டென்மார்க்கில் காலந்தோறும் பல தகைமைகளால் பாராட்டப்பட்டுள்ளார். இவரது உருவம் நாணயத்தாள்களில் வெளியிடப்பட்டது.[6] ஓலே உரோமர் மலை இவரது நினைவாகப் பெயரிடப்பட்டது Ole Rømer's Hill [da].[7] ஆர்த்தசு, கோப்பனேகன் தெருக்களுக்கும் இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளன (Ole Rømers Gade and Rømersgade [da] ).[8][9] ஆர்த்தசு பல்கலைக்கழகத்தின் வான்காணகமும் இவரது நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது The Ole Rømer Observatory (Ole Rømer Observatoriet [da]). தேர்ந்தெடுத்த விண்மீன்களின் அகவையும் வெப்பநிலையும் இயற்பியல், வேதியியல் பண்புகளையும் மதிப்பிட ஏவப்பட்ட டேனீசியச் செயற்கைக்கோள் ஒன்றும் இவரது பெயரிடப்பட்டுள்ளது The Rømer Satellite [da]. இந்த செயற்கைக்கோள் திட்டம் 2002 இல் நிறுத்தப்பட்டது. பின்னரும் அது மேற்கொள்ளப்படவில்லை.[10][11]

நிலாவின் உரோமர் குழிப்பள்ளம் இவரது நினைவாகப் பெயர் இடப்பட்டுள்ளது.[12]

பொது மேற்கோள்கள்

தொகு
  • MacKay, R. Jock; Oldford, R. Wayne (2000). "Scientific Method, Statistical Method and the Speed of Light". Statistical Science 15 (3): 254–278. doi:10.1214/ss/1009212817. http://www.researchgate.net/publication/38326843_Scientific_Method_Statistical_Method_and_the_Speed_of_Light.  (Mostly about A.A. Michelson, but considers forerunners including Rømer.)
  • Axel V. Nielsen (1944). Ole Romer, en Skildring af hans Liv og Gerning (in Danish). Nordisk Forlag.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)

மேற்கோள்கள்

தொகு
  1. Niels Dalgaard (1996). Dage med Madsen, eller, Livet i Århus: om sammenhænge i Svend Åge Madsens forfatterskab (in Danish). Museum Tusculanum Press. pp. 169–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-87-7289-409-6. ... skipper og handelsmand i Århus, gift med Anne Olufsdatter Storm (død 1690) og far til astronomen Ole Rømer (1644-1710).{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  2. Friedrichsen, Per; Tortzen, Chr. Gorm (2001). Ole Rømer – Korrespondance og afhandlinger samt et udvalg af dokumenter (in Danish). Copenhagen: C. A. Reitzels Forlag. p. 16. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 87-7876-258-8.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  3. Bogvennen (in Danish). Vol. 1–9. Fischers forlag. 1971. pp. 66–. Denne antagelse tiltrænger en nærmere redegørelse: Ole Rømer udgik som student fra Aarhus Katedralskole i 1662. Ole Rømer Skolens rektor på den tid var Niels Nielsen Krog, om hvem samtidige kilder oplyser, at »hans studium ...{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  4. Olaf Lind; Poul Ib Henriksen (2003). Arkitektur Fortaellinger/Building of Aarhus University (in Danish). Aarhus Universitetsforlag. pp. 21–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-87-7288-972-6. Ole Rømer tog i øvrigt studentereksamen fra Latinskolen i Ãrhus (Katedralskolen) i 1662.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)[தொடர்பிழந்த இணைப்பு]
  5. Friedrichsen; Tortzen (2001), pp. 19–20.
  6. Grethe Jensen; Benito Scocozza (1996). Politikens bog om danskerne og verden: hvem, hvad, hvornår i 50 år (in Danish). Politikens forlag. pp. 253–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-87-567-5697-6.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  7. Mads Lidegaard (1 January 1998). Danske høje fra sagn og tro (in Danish). Busck. pp. 86–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-87-17-06754-7. Ole Rømers Høj (oprindelig Kongehøj) er den største høj i hele området, 6 m høj med stejle sider og en hel flad top. Den menes bygget i jernalderens sidste århundreder eller vikingetiden og ligger lige øst for Vridsløsemagle syd for ...{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  8. "Untitled Document". Archived from the original on 2007-07-31. பார்க்கப்பட்ட நாள் 2017-05-22.
  9. Bent Zinglersen (1972). Københavnske gadenavne og deres historie (in Danish). Politiken. pp. 185–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-87-567-1651-2.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  10. "The Roemer satellite". Astro.phys.au.dk. 2001-02-14. Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-10-05.
  11. "Satellit fra Århus i rummet i 2003 - Aarhus" (in da). Jyllands-posten.dk. http://jyllands-posten.dk/aarhus/ECE4453229/satellit-fra-arhus-i-rummet-i-2003/. பார்த்த நாள்: 2015-10-05. 
  12. Peter Zamarovský (18 November 2013). Why is it dark at night?: Story of dark night sky paradox. AuthorHouse. pp. 157–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4918-7881-1. ... the homeless and prostitutes. In 1705 he became mayor of Copenhagen and a year later, Chairman of the Danish State Council. He died shortly before his sixtieth birthday. The Römer Crater is located in the north-east section of the Moon.

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Ole Rømer
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓலே_உரோமர்&oldid=3645629" இலிருந்து மீள்விக்கப்பட்டது