ககதவால வம்சம்

ககதவால வம்சம் ( Gahadavala dynasty ), கன்னோசியின் ககதவாலர்கள், என்றும் அறியப்படும் இவர்கள் 11 மற்றும் 12 ஆம் நூற்றாண்டுகளில் இன்றைய இந்திய மாநிலங்களான உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் பகுதிகளை ஆண்ட ராஜபுத்திர வம்சமாகும். இவர்களின் தலைநகரம் சிந்து-கங்கைச் சமவெளியில் வாரணாசியில் அமைந்திருந்தது. மேலும் சிறிது காலத்திற்கு, இவர்கள் கன்யாகுப்ஜத்தை (நவீன கன்னோசி) கட்டுப்படுத்தினர்.

ககதவால வம்சம்
1089 கி.பி–1197 கி.பி
காலசூரி-பாணி நாணயம். of ககதவாலர்கள்
காலசூரி-பாணி நாணயம்.
கோவிந்தசந்திரனின் காலத்திய ஆட்சிப் பகுதி .[1]
கோவிந்தசந்திரனின் காலத்திய ஆட்சிப் பகுதி .[1]
தலைநகரம்வாரணாசி , கன்னோசி
அரசாங்கம்முடியாட்சி
வரலாறு 
• தொடக்கம்
1089 கி.பி
• முடிவு
1197 கி.பி
முந்தையது
பின்னையது
கூர்ஜர பிரகார வம்சம்
Kalachuris of Tripuri
Ghurid dynasty
Delhi Sultanate
தற்போதைய பகுதிகள்இந்தியா
மார்தாண்டம் (சூரியக் கடவுள் அல்லது சூரியனின் ஒரு அம்சம்), ககதவால வம்சம், ராஜஸ்தான், கி.பி 12 ஆம் நூற்றாண்டு.

வம்சத்தின் முதல் மன்னரான சந்திரதேவன், கி.பி 1090 -க்கு முன்னர், காலச்சூரி அதிகாரத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு ஒரு இறையாண்மை கொண்ட அரசை நிறுவினார். இவரது பேரன் கோவிந்தச்சந்திரனின் கீழ் இராச்சியம் அதன் உச்சத்தை அடைந்தது. அவர் சில கலாச்சூரி பிரதேசங்களை இணைத்து, கசனவித்துகளின் தாக்குதல்களைத் தடுத்து, பாலர்களுடன் போரிட்டார். கி.பி.1194 -இல், கோவிந்தச்சந்திரனின் பேரன் செயச்சந்திரன் கோரிகளால் தோற்கடிக்கப்பட்டார். இது வம்சத்தின் ஏகாதிபத்திய அதிகாரத்தை முடிவுக்குக் கொண்டுவந்தது. 12 ஆம் நூற்றாண்டில் ஜெயச்சந்திரனின் வாரிசுகள் தில்லி சுல்தானகத்தால் தோற்கடிக்கப்பட்டபோது இராச்சியம் இல்லாமல் போனது.

சான்றுகள் தொகு

Further reading தொகு

  • Deepak Yadav (2011). "Aspects of rural settlement under the Gahadavala dynasty: c. 11th century CE to 13th century CE (An inscriptional analysis)". Proceedings of the Indian History Congress 72 (1): 360–367. 
  • Saurabh Kumar (2015). "Rural Society and Rural Economy in the Ganga Valley during the Gahadavalas". Social Scientist 43 (5/6): 29–45. 
  1. Joseph E. Schwartzberg (1978). A Historical Atlas of South Asia. Oxford University Press, Digital South Asia Library. பக். 147, Map "c". https://dsal.uchicago.edu/reference/schwartzberg/pager.html?object=185. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ககதவால_வம்சம்&oldid=3598444" இலிருந்து மீள்விக்கப்பட்டது