கங்காவதி, கர்நாடகா

கங்காவதி (Gangavathi) இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் கொப்பள் மாவட்டத்தில் அமைந்த நகராட்சியுன்ட கூடிய நகரம் ஆகும். கங்காவதி வருவாய் வட்டதின் நிர்வாகத் தலைமையிடமான கங்காவதி நகரம் உள்ளது.[1] இந்நகரத்தில் அரிசி ஆலைகள் அதிகமாக உள்ளதால், இதனை கர்நாடகத்தின் அரிசிக் கிண்ண நகரம் என அழைப்பர. கடல் மட்டத்திலிருந்து 406 மீட்டர் உயரத்தில் அமைந்த கங்காவதி நகரத்தின் அருகே துங்கபத்திரை நீர்த்தேக்கம் உள்ளது.

கங்காவதி
நகரம்
அடைபெயர்(கள்): அரிசிக் கிண்ண நகரம்
கங்காவதி is located in கருநாடகம்
கங்காவதி
கங்காவதி
இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் கங்காவதி நகரத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 15°26′N 76°32′E / 15.43°N 76.53°E / 15.43; 76.53
நாடு இந்தியா
மாநிலம்கர்நாடகா
மாவட்டம்கொப்பள்
பரப்பளவு
 • மொத்தம்16.53 km2 (6.38 sq mi)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்1,05,529
 • அடர்த்தி8,641.2/km2 (22,381/sq mi)
மொழிகள்
 • அலுவலல் மொழிகன்னடம்
அஞ்சல் சுட்டு எண்
583 227
தொலைபேசி அழைப்பு08533
ஐஎசுஓ 3166 குறியீடுIN-KA
வாகனப் பதிவுKA-37
இணையதளம்www.gangavathicity.mrc.gov.in

பொருளாதாரம்

தொகு

கொப்பள் மாவட்டத்தில் நெல் வேளாண்மை அதிக அளவில் உள்ளதால், கங்காவதி நகரத்தில் அரிசி அறவை ஆலைகள் மிகுந்துள்ளது.[2] மேலும் இங்கு கரும்பு அதிகம் விளைகிறது.

மக்கள் தொகை பரம்பல்

தொகு

2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, கங்காவதி நகரத்தின் மொத்த மக்கள்தொகை 105,529 ஆகும். அதில் ஆண்கள 52,689 மற்றும் பெண்கள் 52,840 உள்ளனர். ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 13,801 ஆகவுள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 1003 பெண்கள் வீதம் உள்ளது. சராசரி எழுத்தறிவு 75.43% ஆகவுள்ளது. மக்கள்தொகையில் இந்துக்கள் 65.35%, முஸ்லீம்கள் 32.13%, சமணர்கள் 0.66%, கிறித்தவர்கள் 1.30% மற்றும் பிற சமயத்தவர்கள் 0.56% ஆகவுள்ளனர்.[3]

அருகமைந்த சுற்றுலாத் தலங்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Reports of National Panchayat Directory: Village Panchayat Names of Ganavathi, Koppal, Karnataka". Ministry of Panchayati Raj, Government of India. Archived from the original on 2013-02-13.
  2. "Gangavati City Municipal Council - ಗಂಗಾವತಿ ನಗರಸಭೆ". Archived from the original on 19 January 2012. பார்க்கப்பட்ட நாள் 9 March 2012.
  3. Gangawati City Census 2011

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கங்காவதி,_கர்நாடகா&oldid=4060393" இலிருந்து மீள்விக்கப்பட்டது