கடல் நாய்
கடல் நாய் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
துணைவரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | P. vitulina
|
இருசொற் பெயரீடு | |
Phoca vitulina லின்னேயசு, 1758 | |
போக்கா விட்டுலினாவின் (Phoca vitulina) பரவல் |
கடல் நாய் (Common Seal அல்லது Harbour Seal) என்பது உலகின் வட அரைக்கோளத்தில் ஆர்க்டிக் கடற்கரைப் பகுதிகளில் வாழும் ஒரு கடற்பாலூட்டி விலங்கு. இவை பொதுவாக அட்லாண்டிக், பசிபிக் பெருங்கடல்கள், பால்டிக் கடல், வடகடல் ஆகியவற்றின் கரைப்பகுதிகளில் காணப்படுகின்றன. இவையே பின்னிபெட் (=தப்பை போன்ற கால்களையுடைய விலங்கு) வகைகளில் மிகுந்து காணப்படும் விலங்குகள்.
சீல்கள் பழுப்பு, சாம்பல் நிறங்களில் காணப்படும். 1.85 மீட்டர் நீளமும் 130 கிலோ கிராம் எடையும் வளரக்கூடியன. இவை குறிப்பிட்ட ஒரே இடத்தில் ஓய்வெடுப்பதை வழக்கமாகக் கொண்டவை. பொதுவாக இவ்விடங்கள், இவற்றை கொன்று தின்னும் விலங்குகள் நெருங்கமுடியாததாகவும் தாங்கள் உண்பதற்கு மீன் கிடைக்கக் கூடிய இடமாகவும் இருக்கும்.
உலகில் தற்போது நான்கு முதல் ஐந்து இலட்சம் சீல்கள் இருப்பதாக கணிக்கப்படுகிறது.
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- கடல் நாய்கள் பரணிடப்பட்டது 2014-07-19 at the வந்தவழி இயந்திரம்