கடவுளின் மகன் (திரைப்படம்)
கடவுளின் மகன் (Son of God) என்பது இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை, போதனை, துன்பங்கள், சாவு, உயிர்த்தெழுதல் போன்ற கூறுகளை உள்ளடக்கி, ஐக்கிய அமெரிக்க நாடுகளில் 2014இல் வெளியான ஒரு திரைப்படம் ஆகும். இது “விவிலியம்” என்ற பெயரில் ஒளிபரப்பான 10 பகுதிகள் அடங்கிய தொலைக்காட்சி குறுந்தொடரை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.
Son of God கடவுளின் மகன் | |
---|---|
விளம்பரப் படம் | |
இயக்கம் | கிறிஸ்தோபர் ஸ்பென்சர் |
தயாரிப்பு | ரோமா டவுனி மாற்கு பர்னெட் |
மூலக்கதை | ”விவிலியம்” என்ற தலைப்பில் ஒளிபரப்பான தொலைக்காட்சி சிறு தொடர் |
திரைக்கதை | ரிச்சர்டு பெட்செர் கிறிஸ்தோபர் ஸ்பென்சர் காலின் ஸ்வாஷ் நிக் யங் |
கதைசொல்லி | கீத் டேவிட் |
இசை | ஹான்ஸ் சிம்மெர் லோர்ன் பால்ஃப் லீசா கெரார்டு |
நடிப்பு | தியகோ மோர்காதோ ரோமா டவுனி டார்வின் ஷா |
ஒளிப்பதிவு | ராப் கோல்டி |
படத்தொகுப்பு | ராபர்ட் ஹால் |
கலையகம் | லைட்வொர்க்கர்ஸ் மீடியா |
விநியோகம் | 20ஆம் நூற்றாண்டு பாக்ஸ் |
வெளியீடு | பெப்ரவரி 28, 2014 |
ஓட்டம் | 138 நிமிடங்கள் |
நாடு | ஐக்கிய அமெரிக்க நாடுகள் |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $22 மில்லியன் |
மொத்த வருவாய் | $9,400,000[1] |
அத்தொடரை உருவாக்கியவர்கள் மாற்கு பர்னெட் (Mark Burnett) மற்றும் ரோமா டவுனி (Roma Downey) ஆவர். “கடவுளின் மகன்” திரைப்படத்தில் முந்திய தொலைக்காட்சித் தொடரிலிருந்து எடுக்கப்பட்ட பகுதிகளும், அப்போது ஒளிபரப்பாமல் விடப்பட்ட பகுதிகளும் அடங்கும்.[2]
படத்தின் கருப்பொருள்
தொகுகடவுளின் மகன் திரைப்படத்தில் இயேசு கிறிஸ்துவின் பிறப்பிலிருந்து, அவர் சிலுவையில் இறந்து கல்லறையில் அடக்கப்பட்ட பின் மீண்டும் உயிர்பெற்றெழுந்து விண்ணேற்றம் அடைந்தது வரையிலான நிகழ்வுகள் எடுத்துக் கூறப்படுகின்றன.[2]
நடிகர்கள்
தொகு- இயேசு கிறிஸ்து வேடத்தில் வருபவர் தியகோ மோர்காதோ (Diogo Morgado)
- திருத்தூதர் சீமோன் பேதுரு வேடத்தில் டார்வின் ஷா (Darwin Shaw)
- இயேசுவின் தாய் மரியா வேடத்தில் (Roma Downey)
- பொந்தியு பிலாத்து வேடத்தில் கிரெக் ஹிக்ஸ் (Greg Hicks)
- திருத்தூதர் யோவான் வேடத்தில் செபாஸ்தியான் க்னாப் (Sebastian Knapp)
- மகதலா மரியா வேடத்தில் ஆம்பர் ரோஸ் ரேவா (Amber Rose Revah)
- கயிபா வேடத்தில் ஏட்ரியன் ஷில்லர் (Adrian Schiller)
- அந்தோனியுசு வேடத்தில் ஆண்ட்ரூ ப்ரூக் (Andrew Brooke)
- பிலாத்துவின் மனைவி கிளாவுடியா (Claudia) வேடத்தில் லுயீஸ் தெலமேர்(Louise Delamere)
- திருத்தூதர் மத்தேயு வேடத்தில் செட் பே (Said Bey)
- திருத்தூதர் தோமா வேடத்தில் மாத்யூ க்ராவெல் (Matthew Gravelle)
- நிக்கதேம் வேடத்தில் சைமன் குன்சு (Simon Kunz)
- யூதாசு இஸ்காரியோத்து வேடத்தில் ஜோ வ்ரேடன் (Joe Wredden)
- பரபா வேடத்தில் ஃப்ரேசெர் ஆயெர்சு (en:Fraser Ayres)
- தீவிரவாதி சீமோன் வேடத்தில் பவுல் மாற்கு டேவிஸ் (Paul Marc Davis)
- புனித யோசேப்பு வேடத்தில் ஜோ கோஎன் (Joe Coen)
- இளம் பெண் மரியா (இயேசுவின் தாய்) மரியா வேடத்தில் லைலா மிம்மாக் (Leila Mimmack)
- ஏரோது அந்திப்பா வேடத்தில் ரிக் பேக்கன் (Rick Bacon)
- லாசர் வேடத்தில் ஆனாஸ் ஷெரின் (Anas Cherin)
கதை விளக்கம்
தொகு”கடவுளின் மகன்” படத்தில் ஏற்கனவே ஒளிபரப்பான தொலைக்காட்சித் தொடரிலிருந்து பல காட்சிகளும் அப்போது ஒளிபரப்பாமல் விடப்பட்ட காட்சிகளும் உள்ளடங்கும்.[2][3] இரத்தம் சிந்தல் காட்சி, வன்முறைக் காட்சிகள் உள்ளதால் 13 வயதுக்கு உட்பட்டவர்களுக்குப் பெற்றோர் வழிகாட்டல் தேவை என்று தரம் இடப்பட்ட இப்படம் 2014, பெப்ருவரி 28ஆம் நாள் வெளிவந்தது.[4][5][6].
ஏற்கனவே ஒளிபரப்பான தொலைக்காட்சித் தொடரில் சாத்தான் வரும் காட்சி இருந்தது. ஆனால் திரைப்படத்தில் அக்காட்சி காட்டப்படவில்லை. இதற்குக் காரணம் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவைப் போன்று சாத்தான் தோற்றமளிக்கிறது என்று வழக்கமாக ஒபாமாவை எதிர்த்து விமரிசிக்கும் கிளென் பெக் (Glenn Beck) என்பவர் கூறியது ஆகும்.[7][8][9]
வரவேற்பு
தொகுவசூல்
தொகுபடம் வெளியான முதல் இரவு $1.2 மில்லியன் வட அமெரிக்க திரையரங்குகளில் வசூலானது. நுழைவுச் சீட்டுகள் முன்பதிவாகவே விற்கப்பட்டிருந்தன.[10] முதல் வார இறுதியில் வட அமெரிக்காவில் மட்டும் மொத்தம் $27.5 மில்லியன் வசூலாகும் என்று கணிக்கின்றனர்.[11]
விமர்சனங்கள்
தொகுஏற்கனவே இயேசு கிறிஸ்துவில் நம்பிக்கை கொண்ட மக்கள் இப்படத்தைப் பார்ப்பதன் மூலம் தமது நம்பிக்கையில் உறுதி பெறுவார்கள் என்றும், நற்செய்தி நூல்களில் கூறப்படுகின்ற இயேசுவின் வரலாற்றை இப்படம் நன்முறையில் காட்டுகிறது என்றும் விமர்சகர் கூறுகின்றனர்.
என்றாலும், இப்படம் அவ்வளவு விறுவிறுப்பாக இல்லை என்றும், சிந்தனையைக் கிளறுகின்ற விதத்தில் புதிய அணுகுமுறையைக் கையாளவில்லை என்றும் சிலர் குறை கூறுகின்றனர். எருசலேம் நகர் காட்சிகள் பிரமாதமாக இல்லை, இயேசு தண்ணீர்மீது நடத்தல் போன்ற காட்சிகள் கவர்ச்சியாக இல்லை என்றும் சிலர் விமர்சிக்கின்றனர்.
ஒரு சில காட்சிகள் கலையழகு நிறைந்த விதத்தில் எடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, இயேசு அன்னை மரியாவின் மடியில் வளர்த்தப்பட்ட காட்சியானது மைக்கலாஞ்சலோவின் தாயும் சேயும் என்ற புகழ்மிக்க பளிங்குச் சிலையைக் கண்முன் கொண்டுவருகிறது. இயேசு பற்றி நற்செய்தி நூல்கள் தருகின்ற தகவல்களும் இயேசு உலகுக்கு வழங்கிய செய்தியும் மிகத் தெளிவாக, அழுத்தமாக எடுத்துக் கூறப்படுகின்றன.[12][13][14][15][16][17]
ஆதாரங்கள்
தொகு- ↑ "Son of God". பாக்சு ஆபிசு மோசோ. அமேசான்.காம். பார்க்கப்பட்ட நாள் March 1, 2014.
- ↑ 2.0 2.1 2.2 Littleton, Cynthia (September 12, 2013). "‘The Bible’ Producers Resurrect Jesus for Expanded ‘Son of God’ Film". Variety. http://variety.com/2013/film/news/fox-to-distribute-son-of-god-feature-from-bible-pair-1200608999/.
- ↑ Kits, Borys (September 12, 2013). "20th Century Fox to Distribute Jesus Christ Movie 'Son of God'". The Hollywood Reporter. http://www.hollywoodreporter.com/news/20th-century-fox-distribute-jesus-628306.
- ↑ "20th Century Fox to Release Roma Downey and Mark Burnett's 'Son of God'". ComingSoon.net. October 15, 2013. Archived from the original on நவம்பர் 13, 2013. பார்க்கப்பட்ட நாள் October 15, 2013.
- ↑ "Resurgence Conference Live". November 6, 2013. Archived from the original on நவம்பர் 8, 2013. பார்க்கப்பட்ட நாள் மார்ச் 2, 2014.
{{cite web}}
: Check date values in:|access-date=
(help) - ↑ "Son of God (2014)". Internet Movie Database. அமேசான்.காம். பார்க்கப்பட்ட நாள் March 1, 2014.
{{cite web}}
: Italic or bold markup not allowed in:|publisher=
(help) - ↑ http://www.hollywoodreporter.com/news/bible-producers-cut-satan-scenes-680781
- ↑ "Anyone else think the Devil in #TheBible Sunday on HIstory Channel looks exactly like That Guy?". @glennbeck. Twitter. பார்க்கப்பட்ட நாள் February 28, 2014.
- ↑ "Why does the devil in 'The Bible' look exactly like President Obama?". Daily Mail. February 28, 2014. http://www.dailymail.co.uk/news/article-2295082/Why-does-devil-The-Bible-look-exactly-like-President-Obama.html. பார்த்த நாள்: 16 April 2013.
- ↑ McNary, Dave (February 28, 2014). "Box Office: 'Son of God' Launches Strongly at Late-Night Shows". Variety. பார்க்கப்பட்ட நாள் February 28, 2014.
- ↑ Subers, Ray (February 28, 2014). "Forecast: 'Non-Stop,' 'Son of God' to End 'LEGO's Reign This Weekend". Box Office Mojo. அமேசான்.காம். பார்க்கப்பட்ட நாள் February 28, 2014.
{{cite web}}
: Italic or bold markup not allowed in:|publisher=
(help) - ↑ "Son of God - Rotten Tomatoes". Rotten Tomatoes. Flixster. பார்க்கப்பட்ட நாள் February 28, 2014.
{{cite web}}
: Italic or bold markup not allowed in:|publisher=
(help) - ↑ "Son of God Reviews". Metacritic. CBS Interactive. பார்க்கப்பட்ட நாள் March 1, 2014.
{{cite web}}
: Italic or bold markup not allowed in:|publisher=
(help) - ↑ Minow, Nell. "Son of God - Movie Mom". Beliefnet. Archived from the original on மார்ச் 4, 2014. பார்க்கப்பட்ட நாள் February 28, 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Slotek, Jim (February 27, 2014). "'Son of God' review: A satisfying Christ story". Toronto Sun. பார்க்கப்பட்ட நாள் February 28, 2014.
- ↑ Kenigsberg, Ben (February 27, 2014). "History Channel's The Bible is cut into an equally chintzy film, Son Of God". The A.V. Club. பார்க்கப்பட்ட நாள் February 28, 2014.
- ↑ Berry, Dave (February 28, 2014). "Son of God, reviewed: Detail-skimming Biblical epic preaches to the converted". The National Post. பார்க்கப்பட்ட நாள் March 1, 2014.