கடூர் சாகிப் மக்களவைத் தொகுதி

மக்களவைத் தொகுதி (பஞ்சாப்)

கடூர் சாகிப் மக்களவைத் தொகுதி (Khadoor Sahib Lok Sabha constituency) என்பது வட இந்தியாவில் உள்ள பஞ்சாப் மாநிலத்தின் 13 மக்களவைத் (பாராளுமன்ற) தொகுதிகளில் ஒன்றாகும். 2008 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தொகுதிகள் தொகுதி மறுவரையறை செய்தபிறகு இந்தத் தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டது.[1]

கடூர் சாகிப்
PB-3
மக்களவைத் தொகுதி
Map
Interactive Map Outlining Khadoor Sahib Lok Sabha constituency
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்பஞ்சாப்
சட்டமன்றத் தொகுதிகள்ஜன்டியாலா
தரண் தரண்
கெம் கரன்
பட்டி
கடூர் சாகிப்
பாபா பகலா
கபூர்தலா
சுல்தான்பூர் லோதி
சிரா
நிறுவப்பட்டது2008
ஒதுக்கீடுஇல்லை
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
கட்சிசுயேச்சை
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

சட்டமன்றத் தொகுதிகள்

தொகு

இந்த தொகுதியில் ஒன்பது சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது.[2] தொகுதி மறுவரையறைக்கு முன்பு, இந்தத் தொகுதிக்குள் அடங்கியுள்ள சட்டமன்றத் தொகுதிகளான கபூர்தலா மற்றும் சுல்தான்பூர் லோதி சட்டமன்றத் தொகுதிகள் ஜலந்தர் மக்களவைத் தொகுதியிலும், ஜிரா சட்டமன்றத் தொகுதி ஃபிரோஸ்பூர் மக்களவைத் தொகுதியிலும், ஜந்தியாலா, பட்டி, காதூர் சாகிப், தர்ன் தரன் சட்டமன்றத் தொகுதிகள் தர்ன் தரன் மக்களவைத் தொகுதியிலும் இருந்தன. 2008 தொகுதி மறுவரையறைக்குப் பிறகு கெம் கரண் சட்டமன்றத் தொகுதி புதியாக உருவாக்கப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு உறுப்பினர்[3] கட்சி
1952-2008 : காலகட்டத்தில் இந்தத் தொகுதி இருக்கவில்லை
2009 ரத்தன் சிங் அஜ்னலா சிரோமணி அகாலி தளம்
2014 ரஞ்சித் சிங் பிரம்மபுரா சிரோமணி அகாலி தளம்
2019 ஜஸ்பீர் சிங் கில் இந்திய தேசிய காங்கிரசு
2024 அம்ரித்பால் சிங் சுயேச்சை

மேற்கோள்கள்

தொகு
  1. Singh, Prabhjot (16 February 2008). "3 Parliament, 16 assembly seats get new names". The Tribune. http://www.tribuneindia.com/2008/20080216/main8.htm. பார்த்த நாள்: 2009-04-19. 
  2. "List of Parliamentary & Assembly Constituencies". Chief Electoral Officer, Punjab website.
  3. "Khadoor Sahib Parliamentary Constituency, Winning MP and Party Name". www.elections.in.