கணேஷ் வி தெவி

சாகித்திய அகாதமி விருது பெற்ற ஆங்கில எழுத்தாளர்

கணேஷ் நாராயண் தாஸ் (Ganesh Narayan Das, 1 ஆகஸ்ட் 1950)[1], என்பவர் பரோடாவில் உள்ள சயாஜிராவோ பல்கலைக் கழகத்தின் முன்னாள் பேராசிரியர் ஆவார். புகழ்பெற்ற இலக்கிய விமர்சகர் மற்றும் ஆர்வலராகவும் திகழ்பவர். வதோதாராவில் உள்ள ‘பாஷா ஆராய்ச்சி மற்றும் வெளியீட்டு மையத்தின்’ நிறுவனராகவும் இயக்குனராகவும் உள்ளார்.

கணேஷ் வி தெவி
பிறப்பு1950
போர்
படித்த இடங்கள்
பணிமானிடவியலர், கல்வியாளர், மொழியியலாளர்
விருதுகள்சாகித்திய அகாதமி விருது

கல்விதொகு

இவர் கோலாப்பூரில் உள்ள சிவாஜி பல்கலைக்கழகம், இங்கிலாந்திலுள்ள லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றார். பல கல்விப் பணிகளில், அவர் லீட்ஸ் பல்கலைக்கழகத்திலும், யேல் பல்கலைக்கழகத்திலும், ஜவகர்லால் நேரு அறக்கட்டளை (1994-96) மூலம் நிதி பெற்று ஆய்ந்தவர்.

ஆசிரியப்பணிதொகு

2002 ஆம் ஆண்டு முதல், குஜராத் மாவட்ட காந்திநகரில் உள்ள திருபாய் அம்பானியின் தகவல்தொடர்பு தொழில்நுட்பத்துறையில் பேராசிரியராகப் பணியாற்றினார். அங்கிருந்து விலகி, பரோடா மஹாராஜா சயாஜிராவோ பல்கலைக் கழகத்தில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பரோடாவிலிருந்து உலகின் மொழி வேறுபாட்டின் வரைபடத்தைத் தொடர, கருநாடக மாநிலத்தின் தார்வார்ட்க்குச் சென்றார்.

மொழி ஆய்வுப்பணிதொகு

வதோதராவில் அமைக்கப்பட்ட பாஷா மொழி ஆய்வகம், பழங்குடி சமூகங்களைப் பற்றிய ஆய்வை மேற்கொள்ள குஜராத்தில் மாவட்டத்தில் உள்ள ஆதிவாசி அகாடமி ஆகியவற்றை இவர் ஏற்படுத்தினார். இவை பழங்குடி சமூகங்களைப் பற்றிய ஆய்வுக்கு ஒரு தனித்துவமான கல்வி சூழலை உருவாக்குவதற்கு நிறுவப்பட்டன. 2010 இல் இந்தியாவின் மக்கள் மொழியியல் ஆய்வுக்கு வழிவகுத்தார், இவ்வமைப்பானது தற்காலத்தில் புழங்கும் 780 இந்திய மொழிகளையும் ஆய்வு செய்து ஆவணப்படுத்தியுள்ளது.

விருதுகள்தொகு

 1. அரசர் கிளாசு விருது (2003) (குஜராத்தில் ஒடுக்கப்பட்ட மொழிகளைக் காப்பதற்காக)
 2. துர்கா பகவத் நினைவு விருது (வனப்பிரசுதம் என்னும் பழங்குடி பற்றிய நூலுக்காக)
 3. சாகித்ய அகாதெமி விருது (2005) (இலக்கியப் படைப்புக்காக)
 4. சார்க் எழுத்தாளர் பரிசு (2007) (அறியப்படாத பழங்குடி மக்களைப் பற்றிய எழுத்துக்காக)[2][3]
 5. இலிங்குவாபாக்சு பரிசு (2011) (பன்முகத்தன்மையுடைய மொழியைப் பாதுகாத்தலுக்காக)[4][5]
 6. தாமரைதிரு விருது (2014) இந்திய அரசின் உயரிய விருது (பழங்குடி மக்கள் சார்பான)[6]

படைப்புகள்தொகு

 1. கூர்சிந்தனைகள் (Critical Thought) (1987)
 2. மறதிக்குப் பிறகு (After Amnesia) (1992)
 3. பல தலைவர்களுக்காக (Of Many Heroes (1997)
 4. பாரம்பரியம் மற்றும் நவீனத்துவ இந்தியா (India Between Tradition and Modernity) (co-edited, 1997)
 5. மற்றொரு நாக்கில் (In Another Tongue) (2000)
 6. இந்திய இலக்கிய விமர்சனம் : கோட்பாடும் விளக்கமும் (Indian Literary Criticism: Theory & Interpretation) (2002).
 7. புனையப்பட்ட வார்த்தைகள் - பழங்குடி இலக்கியத் தொகுதி (Painted Words: An Anthology of Tribal Literature) (editor, 2002).
 8. திருடன் எனப்படும் ஆதிவாசி (A Nomad Called Thief) (2006)
 9. முக்கிய வார்த்தைகள் : உண்மை (Keywords: Truth )(contributor, date unknown)
 10. வனவாசம் (Vaanprastha) (in Marathi, date unknown)
 11. ஆதிவாசிகளைக் குறித்து...(Adivasi Jane Che) ( Tribal People Knows, in Gujarati, date unknown).
 12. ஜி.என். வாசிப்பு (The G.N. Devy Reader) (2009)

மேற்கோள்கள்தொகு

 1. "Who's Who of Indian Writers". Sahitya Akademi. பார்த்த நாள் 27 October 2015.
 2. "Dr. G. N. Devy returns Sahitya Akademi Award". ZeeNews India. ZeeNews. 15 October 2015. http://zeenews.india.com/news/india/gujarat-cops-knock-at-writer-ganesh-devys-doors-after-he-returns-sahitya-akademi-award_1810418.html. பார்த்த நாள்: 15 October 2015. 
 3. "Ganesh Devy returns his Sahitya Akademi award". The Times of India. TNN. 11 October 2015. http://timesofindia.indiatimes.com/india/Now-Ganesh-Devy-returns-his-Sahitya-Akademi-award/articleshow/49313263.cms. 
 4. "7 Gujaratis in Padma awards list". The Times of India (2014-01-26). பார்த்த நாள் 2014-03-30.
 5. Khan, Shoeb (2014-02-07). "India's linguistic diversity in danger: Professor Ganesh Devi". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (Jaipur). http://m.timesofindia.com/city/jaipur/Indias-linguistic-diversity-in-danger-Professor-Ganesh-Devi/articleshow/30007978.cms. பார்த்த நாள்: 2014-03-30. 
 6. "Padma Awards Announced". Press Information Bureau, Ministry of Home Affairs, Government of India (25 January 2014). மூல முகவரியிலிருந்து 22 February 2014 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2014-01-26.

வெளியிணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கணேஷ்_வி_தெவி&oldid=3203962" இருந்து மீள்விக்கப்பட்டது