கண்ணன் கோபிநாதன்
கண்ணன் கோபிநாதன் (Kannan Gopinathan, பிறப்பு: திசம்பர் 12, 1985) என்பவர் ஓர் முன்னாள் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியும், கேரளாவைச் சேர்ந்த தன்னார்வலரும் ஆவார்.[1][2][3] சரத்து எண் 370 ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஜம்மு-காஷ்மீரில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அடையாளமாக இவர் தன் பதவியை ராஜினாமா செய்தார். [4][5][6]
கண்ணன் கோபிநாதன் | |
---|---|
பெங்களூரில் கண்ணன் கோபிநாதன், 2019 | |
பிறப்பு | 12 திசம்பர் 1985 கோட்டயம், கேரளம் |
தேசியம் | இந்தியா |
படித்த கல்வி நிறுவனங்கள் | பிர்லா தொழில்நுட்ப நிறுவனம், மெசுரா |
பணி | தன்னார்வலர், பொறியாளர், இந்திய ஆட்சிப் பணி அதிகாரி |
தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் குடும்பம்
தொகுஇவர் கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில், கேரள அரசின் உயர் பிரிவு எழுத்தாளர் கே. என். கோபிநாதன் நாயர் - வி.ஆர்.குமாரி இணையரின் மகனாக 12 திசம்பர் 1985ஆம் நாள் பிறந்தார். கோட்டயத்திற்குச் செல்வதற்கு முன்பு கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் தனது ஆரம்பக் கல்வியைச் படித்தார். 2001 ஆம் ஆண்டு கேரள தொழில்நுட்ப உயர்நிலைப் பள்ளி விடுப்பு சான்றிதழ் தேர்வில் மாநில அளவில் கூட்டு முதலிடம் பெற்றார். சார்க்கண்டின், மெசுரா, ராஞ்சி, பிர்லா தொழில்நுட்ப நிறுவனத்தில் மின் மற்றும் மின்னணுவியல் துறையில் பொறியியல் படித்து, தங்கப் பதக்கமும் பெற்றார்.[7] இவர் நொய்டாவில் தன்னார்வ சேவையில் ஈடுபட்ட நாட்களில், மென்பொருள் பொறியாளரான, ஹிமானி பதக் என்பவரை மணந்தார்.[8]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Ex-IAS officer Kannan Gopinathan held by Agra police on way to AMU | Agra News - Times of India". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. January 5, 2020. பார்க்கப்பட்ட நாள் January 8, 2020.
- ↑ "CAB protests: Former IAS Kannan Gopinathan, others detained in Mumbai". இந்தியா டுடே. December 13, 2019. பார்க்கப்பட்ட நாள் January 8, 2020.
- ↑ "IAS Officer, Who Quit Service Over Kashmir, Asked To Get Back To Work Immediately". Huffington Post. August 29, 2019. பார்க்கப்பட்ட நாள் January 8, 2020.
- ↑ "Former IAS officer Kannan Gopinathan who quit over Kashmir issue detained on way to AMU". இந்தியன் எக்சுபிரசு. January 4, 2020. பார்க்கப்பட்ட நாள் January 8, 2020.
- ↑ "Home Ministry Notice To IAS Officer Who Quit Over Centre's J&K Move". என்டிடிவி. November 7, 2019. பார்க்கப்பட்ட நாள் January 8, 2020.
- ↑ "'Restore rights in Kashmir': Ex-IAS officer Kannan Gopinathan who quit over Article 370 abrogation slams MHA for 'chargesheet'". Firstpost. November 6, 2019. பார்க்கப்பட்ட நாள் January 8, 2020.
- ↑ "Unknown facts about IAS officer Kannan Gopinathan". Business Insider. August 26, 2019. பார்க்கப்பட்ட நாள் May 9, 2020.
- ↑ "I must be free to speak and express my own feelings freely: Kannan Gopinathan". Mathrubhumi. August 30, 2020. Archived from the original on அக்டோபர் 9, 2020. பார்க்கப்பட்ட நாள் October 4, 2020.