கண்ணீர்விடும் ஒட்டகத்தின் கதை

கண்ணீர்விடும் ஒட்டகத்தின் கதை (The Story of the Weeping Camel) என்பது 2003 ஆம் ஆண்டு வெளியான மங்கோலிய ஆவணப்படம். 2004 ஆம் ஆண்டு உலகெங்கும் வெளியானது. இப்படத்தை "பயம்பசுரென் தவா" (Byambasuren Davaa), லூயிகி 'வலோர்னி ( Luigi Falorni) சேர்ந்து எழுதி இயக்கினர். கோபி பாலைநிலத்தில் நாடோடிகளாக வாழும் மங்கோலிய மக்களில் ஒரு குடும்பம் எப்படி ஓர் இரட்டைத்திமில் ஒட்டகக் கன்றின் உயிரைக் காக்கின்றார்கள் என்பதே இப்படத்தின் கதையாகும். இப்படம் 77 ஆவது ஆஸ்கார் திரைப்பட விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டது.[1][2][3]

The Story of the Weeping Camel
கண்ணீர்விடும் ஒட்டகத்தின் கதை
இயக்கம்பயம்பசுரேன் தவா
லூயிகி ஃபலோர்னி
தயாரிப்புடோபியாஸ் சைபேர்ட்
கதைபயம்பசுரேன் தவா
லூயிகி ஃபலோர்னி
இசைமார்செல் லெனிஸ்
மார்க் ரைடின்கர்
சோய்கிவ் சாஞ்சிடோர்ச்
நடிப்புஜான்சிவ் ஆயுர்சானா
Chimed Ohin
ஒளிப்பதிவுஃபலோர்னி
படத்தொகுப்புஅஞ்சா போல்
விநியோகம்தின்க்ஃபில்ம் (ஐக்கிய அமெரிக்கா)
வெளியீடுசெப்டம்பர் 6, 2003 (டொரோண்டோ திரைப்பட விழா)
ஓட்டம்87 நிமி.
நாடுஜெர்மனி / மங்கோலியா
மொழிமங்கோலிய மொழி

கன்று ஈனும் பொழுது மிகவும் அல்லல் பட்டு ஈன்ற தாய் ஒட்டகம், தன் கன்றுக்குப் பாலூட்ட மறுக்கிறது. குட்டியும் தான் ஒதுக்கப்பட்ட துன்பத்தில், மக்கள் கறந்து கொடுத்த பாலையும் உண்ணாமல் பிடிவாதம் பிடிக்கிறது. அந்த மங்கோலியக் குடும்பம் எவ்வளவு முயன்றாலும் ஒட்டகம் தொடர்ந்து பாலூட்ட மறுக்கிறது. இது போன்று மறுக்கும் ஒட்டகங்களின் மனதை மாற்ற ஹூஸ் (Hoos) என்றழைக்கப்படும் ஒரு பௌத்த சமயச் சடங்கு உண்டு. இந்தச் சடங்கில் ஒருவர் வயலின் போன்ற கருவி கொண்டு இசைக்க வேண்டும். அதே ஊரில் அத்தகைய கலைஞர் இல்லாததால், அக்குடும்பச் சிறுவர்கள் இருவர் வெகு தொலவு சென்று பக்கத்து ஊரில் இசைக்கலைஞரை அழைத்து வருகின்றனர்.புத்த சமயச் சடங்கு ஒன்று செய்து, அந்த நரம்பிசைப் பின்னணியோடு, அக்குடும்பத்தைச் சேர்ந்த பெண்மணி, ஒட்டகத்தின் கழுத்தை மென்மையாக வருடிக்கொண்டே, மிக இனிய குரலில் இசைப்பாட்டு பாடுகிறார். ஒட்டகத்தின் கண்ணில் இருந்து நீர் வடிய வடிய, ஒட்டகம் தன் உள்ளம் மாறி பாலூட்டத் தொடங்குகிறது. இக்காட்சி உள்ளத்தை உருக்கி வியப்பூட்டும் ஒன்று.

வெளியிணைப்புகள்

தொகு

நேஷனல் ஜியோகிரா'விக் நிறுவனத்தின் தளத்தில் இத் திரைப்படம் பற்றிய செய்தி பரணிடப்பட்டது 2009-08-15 at the வந்தவழி இயந்திரம்

மேற்கோள்கள்

தொகு