கதிரி (Kadiri), தென்னிந்தியாவில் உள்ள ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் புதிதாக நிறுவப்பட்ட ஸ்ரீசத்ய சாய் மாவட்டத்தில்[2] உள்ள கதிரி மண்டலின் நிர்வாகத் தலைமையிடமும், சிறப்புநிலை நகராட்சியும் ஆகும்.[3][4] இது மாவட்டத் தலைநகரான புட்டபர்த்திக்கு கிழக்கே 44.5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. கடல்மட்டத்திலிருந்து 504 மீட்டர் (1653 அடி) உயரத்தில் உள்ள கதிரி நகரம், வடக்கிலும், கிழக்கிலும் மலைகளால் சூழப்பட்டது.

கதிரி
நகரம்
அடைபெயர்(கள்): கதிரி
கதிரி is located in ஆந்திரப் பிரதேசம்
கதிரி
கதிரி
இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில் கதிரி நகரத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 14°07′N 78°10′E / 14.12°N 78.17°E / 14.12; 78.17
நாடுஇந்தியா
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
மாவட்டம்ஸ்ரீசத்ய சாய்
பரப்பளவு
 • மொத்தம்25.88 km2 (9.99 sq mi)
 • பரப்பளவு தரவரிசை2
ஏற்றம்
504 m (1,654 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்89,429
 • அடர்த்தி3,500/km2 (9,000/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிதெலுங்கு மொழி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
515 591
வாகனப் பதிவுAP–39
இணையதளம்kadiri.cdma.ap.gov.in/en

மக்கள் தொகை பரம்பல்

தொகு

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 17 வார்டுகளும், 20,781 வீடுகளும் கொண்ட கதிரி நகரத்தின் மக்கள் தொகை 89,429 ஆகும். அதில் ஆண்கள் 44,375 மற்றும் பெண்கள் 45,054 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 1015 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 11.29% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 70.57% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 54.26%, இசுலாமியர் 44.25%, கிறித்தவர்கள் 1.00% மற்றும் பிறர் 0.49% ஆகவுள்ளனர்.[5]

போக்குவரத்து

தொகு

இரயில் நிலையம்

தொகு
 
கதிரி தொடருந்து நிலையம்

தர்மவரம்-பாகாலா இருப்புப் பாதையில் கதிரி இரயில் நிலையம் அமைந்துள்ளது. இது ஐதராபாத், திருப்பதி,விஜயவாடா, நெல்லூர், ஓங்கோல், அமராவதி, மும்பை, குண்டக்கல், சென்னை மற்றும் நாகர்கோயில் போன்ற நகரங்களுடன் இணைக்கிறது.[6]

மேற்கோள்கள்

தொகு
  1. "Basic Information of Municipality". Commissioner & Director of Municipal Administration. Archived from the original on 30 April 2015. பார்க்கப்பட்ட நாள் 23 August 2014.
  2. Khan, Patan. "New districts in andhra pradesh".
  3. "Anantapur District Mandals" (PDF). Census of India. p. 408. பார்க்கப்பட்ட நாள் 6 June 2017.
  4. "Anantapur gets two more revenue divisions". The Hindu (Anantapur). 27 June 2013. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-andhrapradesh/anantapur-gets-two-more-revenue-divisions/article4855117.ece. 
  5. Kadiri Population Census 2011
  6. Patan, Musthakheem Khan. "Kadiri Railway Station Time Table".{{cite web}}: CS1 maint: url-status (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கதிரி&oldid=4167480" இலிருந்து மீள்விக்கப்பட்டது