கதீஜா மும்தாஜ்

மலையாள எழுத்தாளர்

கதீஜா மும்தாஜ் (Khadija Mumtaz) (பிறப்பு 1955), இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த மலையாள எழுத்தாளர் ஆவார். அவர் தொழில் ரீதியாக ஒரு மருத்துவராவார். இவர், 2010 ஆம் ஆண்டில் கேரள சாகித்ய அகாதமி விருதை வென்ற, இவரது இரண்டாவது புதினமான பார்சாவுக்காக கேரள இலக்கிய வட்டாரங்களில் மிகவும் பிரபலமானவராக அறியப்படுகிறார்.

ஆரம்ப மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

கதீஜா மும்தாஜ், திருச்சூர் மாவட்டத்தில், உள்ள, கட்டூர் என்னும் ஊரில் பிறந்தார். இவர், தனது மருத்துவ படிப்பிற்கு முந்தைய இளங்கலை பட்டப் படிப்பை இரிஞ்ஞலகுடாவிலுள்ள, புனித ஜோசப் கல்லூரியில் படித்தார். பின்னர், கோழிக்கோடு மருத்துவக் கல்லூரியில், (எம்.பி.பி.எஸ்.) மருத்துவர் பட்டம் பெற்றார். மேலும், இவர் மகளிர் மருத்துவத்தில் தேர்ச்சி பெற்றவர் மற்றும் பதிவுசெய்யப்பட்ட மருத்துவ பயிற்சியாளராக உள்ளார். கோழிக்கோடு மருத்துவக் கல்லூரியில் மகளிர் மருத்துவம் மற்றும் மகப்பேறியல் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். தனது சேவையின் காரணமாக, கோழிக்கோடு மருத்துவக் கல்லூரியில் இருந்து மாற்றப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து 2013 ஜூன் மாதம் அரசுப் பணியில் இருந்து தன்னார்வ ஓய்வு பெற விண்ணப்பித்தார். [1] அவர் தற்போது கேரள சாகித்ய அகாதமியின் துணைத் தலைவராக உள்ளார். மேலும் கல்வி ஆலோசனைக்குழு உறுப்பினர்களில் ஒருவராகவும், கேரளாவின் திருரூரில் உள்ள துஞ்சத்தேஜுதாச்சன் மலையாள பல்கலைக்கழகத்திலும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கோழிக்கோடு மொடக்கல்லூர், மலபார் மருத்துவக் கல்லூரியில் ஓ & ஜி, வருகை பேராசிரியராகவும் உள்ளார்.

இலக்கிய வாழ்க்கை

தொகு

மும்தாஜ், தனது இலக்கிய வாழ்க்கையை ஆத்மதீர்த்தங்களில் முங்கினிவர்ணுவுடன் என்னும் புதினத்தில் தொடங்கினார். இது முதலில் சந்திரிகா வார இதழில் ஒரு தொடர்கதையாகவும் பின்னர் 2004 இல் தற்போதைய புத்தகங்களின் வடிவமாகவும் வெளியிடப்பட்டது. மும்தாஜ் தனது பார்சா (2007) புதினத்தின் மூலம் புகழ் பெற்றார். இது ஒரு சிறந்த விமர்சனத்தையும், மற்றும் பிரபலமான வெற்றியையும் தேடித் தந்தது. முஸ்லீம் பெண்கள் வாழ வேண்டிய கட்டாயங்கள் குறித்து பலவந்தமான ஆனால் நகைச்சுவையான விளக்கக்காட்சிக்கு விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்ற இந்த புத்தகம் மலையாள இலக்கியத்தில் ஒரு மைல்கல்லாகப் பாராட்டப்பட்டது. [2] இது 2010 ஆம் ஆண்டிற்கான மதிப்புமிக்க கேரள சாகித்ய அகாதமி விருதை வென்றது. [3] மும்தாஜின் அடுத்த புதினமான, அதுரம் 28 ஜனவரி 2011 அன்று கொச்சியில் நடந்த 12 வது சர்வதேச புத்தக விழாவில் வெளியிடப்பட்டது. [4] இப்புதினம், விமர்சகர்களிடமிருந்து கடுமையான விமர்சனங்களைப் பெற்றது. புகழ்பெற்ற எழுத்தாளர் உ.ஏ. காதர் கூற்றுப்படி, இந்த புதினம், அவரது புகழ்பெற்ற பார்சாவிற்குப் பிறகு, மருத்துவரான மும்தாஜுடன் நெருக்கமான ஒரு பிணைப்பை, ஒரு மருத்துவ பயிற்சியாளராக தனது சொந்த அனுபவத்தை உணர்ச்சிவயமாகக் கையாண்டதால், பலவிதமான வாசிப்பு மற்றும் விளக்கங்களைத் வாசகர்களிடம் தூண்டுவது உறுதி என்றும், "கதாபாத்திரங்களின் உள் மோதல்களின் மூலம் உருவாகும் தனித்துவமான பாணியிலான கதை அமைப்பு உள்ளதால், இந்த படைப்பு முழுவதும் வாசகர்களின் கவனத்தை ஈர்க்கும் என்பது உறுதி," என்று அவர் கூறினார். [5]

மும்தாஜ், 2012 ஆம் ஆண்டில், மகளிர் மருத்துவம் குறித்த கட்டுரைகளின் தொகுப்பை மாத்ரகம் என்ற தலைப்பில் வெளியிட்டார். டாக்டர் தைவமல்லா என்ற தலைப்பில், மருத்துவராக இருந்த அவரது நினைவுக் குறிப்புகளின் தொகுப்பையும் இவர் வெளியிட்டுள்ளார். மேலும், இவர் பல்வேறு பத்திரிகைகளில் கட்டுரைகளை எழுதும் குறிப்பிடத்தக்க கட்டுரையாளர் ஆவார்.

விருதுகள்

தொகு
  • 2008: பார்சாவுக்கான கே.வி.சுரேந்திரநாத் இலக்கிய விருது [6]
  • 2010: பார்சாவிற்கு கேரள சாகித்ய அகாதமி விருது
  • 2010: செருக்காடு விருது - பார்சா புதினம்
  • 2018: நீதிஎழுத்துக்கள் - திருச்சூர் சாகித்ய வேதி விருது

குறிப்புகள்

தொகு
  1. Kurian, Jose (6 June 2013). "Dr. Mumtaz calls it quit over transfer order" இம் மூலத்தில் இருந்து 7 ஜூன் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130607130756/http://deccanchronicle.com/130606/news-current-affairs/article/dr-mumtaz-calls-it-quits-over-transfer-order. 
  2. "Writer felicitated". The Hindu. 21 January 2011. Retrieved 7 April 2012.
  3. "Sahitya Akademi fellowships, awards presented" பரணிடப்பட்டது 16 பெப்பிரவரி 2011 at the வந்தவழி இயந்திரம். The Hindu. 13 February 2011. Retrieved 11 December 2012.
  4. "Reading habit poor in State" பரணிடப்பட்டது 2 பெப்பிரவரி 2011 at the வந்தவழி இயந்திரம். The Hindu. 29 January 2011. Retrieved 7 April 2008.
  5. "Khadija Mumthas' works lauded" பரணிடப்பட்டது 24 மார்ச்சு 2011 at the வந்தவழி இயந்திரம். The Hindu. 16 March 2011. Retrieved 3 July 2013.
  6. "Surendranath awards" பரணிடப்பட்டது 14 செப்டெம்பர் 2008 at the வந்தவழி இயந்திரம். The Hindu. 11 September 2008. Retrieved 3 July 2013.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கதீஜா_மும்தாஜ்&oldid=3935054" இலிருந்து மீள்விக்கப்பட்டது