கத்கோடம் (Kathgodam) இந்தியாவின் உத்தராகண்டம் மாநிலத்தின் நைனித்தால் மாவட்டத்திலுள்ள ஹல்துவானி நகரத்தின் புறநகர்ப் பகுதியாகும். இது ஹல்துவானி-காட்டுகோதாம் பகுதியின் இரட்டை நகரமாகும். குமாவுன் இமயமலையில் இருந்து பெறப்பட்ட வனப் பொருட்களுக்கான முக்கியமான சேகரிப்பு மையங்களில் இதுவும் ஒன்றாகும்.

கத்கோடம்
நகரம்
கத்கோடம் தொடர் வண்டி நிலையம்
கத்கோடம் தொடர் வண்டி நிலையம்
கத்கோடம் is located in உத்தராகண்டம்
கத்கோடம்
கத்கோடம்
உத்தராகண்டம் மாநிலத்தில் கத்கோடத்தின் அமைவிடம்
கத்கோடம் is located in இந்தியா
கத்கோடம்
கத்கோடம்
கத்கோடம் (இந்தியா)
ஆள்கூறுகள்: 29°16′05″N 79°32′42″E / 29.268°N 79.545°E / 29.268; 79.545
நாடு இந்தியா
மாநிலம்உத்தராகண்டம்
மாவட்டம்நைனித்தால்
ஏற்றம்554 m (1,818 ft)
மக்கள்தொகை
 • மொத்தம்1,29,140
கத்கோடம் தொடர் வண்டி நிலையம்

வரலாறு தொகு

கத்கோடம் என்றால் "மரக்கிடங்கு" எனப் பொருள்படும். 1901ஆம் ஆண்டில் மக்கள்தொகை 375 என்ற எண்னிக்கையில் இது ஒரு சிறிய கிராமமாக இருந்தது. இருப்பினும் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இரயில் பாதை விரிவாக்கப்பட்ட பின்னர், 1884ஆம் ஆண்டில் ஹல்த்வானியை அடைந்த பின்னர் அதன் முக்கியத்துவம் வேகமாக வளர்ந்தது. [1] நில ஆவணங்களின்படி இதற்கு முன்னர் 'சௌகான் பட்டா' என்று அழைக்கப்பட்டது. ஜியோலிகோட்டிலுள்ள, பீர் பட்டியில் 'மரக்கிடங்கின் அரசன்' எனப்பட்ட தன்சிங் சிங் பிஸ்த்தின் வருகையும், அவரது முக்கிய மரக் கிடங்கை சௌகான் பட்டாவில் அமைந்ததும், [2] இதை 'கத்கோடம்' என்று அழைக்கக் காரணமானது. [3] இதேபோல், பிரித்தானிய நிறுவனம் 1924 வரை இங்கு பீர் என்ற மதுபான ஆலையைத் தொடர்ந்த ஒரு பகுதி என்பதால் 'பீர் பட்டி' என்று அழைக்கப்படுகிறது. இதை ஆங்கிலேயர்கலிடமிருந்து தன்சிங் பிஸ்த் வாங்கினார்.

 
1909 , பிரித்தானிய இந்தியாவின் இரயில் வழித்தட வரைபடத்தில் கத்கோடம்.

இன்று, இந்த நகரம் அதன் இந்திய இரயில்வே பாதையில் ஒரு சந்திப்பு நிலையத்தைக் கொண்டுள்ளது. இங்கிருந்து இமயமலை மலைகளின் குமாவுன் பகுதிக்குச் செல்லலாம். கத்கோடத்திலிருந்து, மலைச் சாலைகள் நைனிடால், பீம்தால், சத்தால், முக்தேசுவர், ராணிகேத், பின்சார், கௌசனி , நௌகுச்சியாதல், அல்மோரா போன்ற சுற்றுலாத் தலங்களுக்குச் செல்கின்றன.

நிலவியல் தொகு

கத்கோடம் 29.27 ° வடக்கிலும் 79.53 ° கிழக்கிலும் அமைந்துள்ளது. [4] இதன் சராசரி உயரம் 554 மீட்டர் (1,483 அடி). இது கௌலா ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.

குமாவுன் இமயமலையின் அடிவாரமான பாபர் பிராந்தியத்தில் அமைந்துள்ள மிக அழகிய இடங்களில் கத்கோடமும் ஒன்றாகும்.

புள்ளிவிவரங்கள் தொகு

2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் தற்காலிக தரவுகளின்படி, ஹல்த்வானி-கத்கோடம் நகர்ப்புற ஒருங்கிணைப்பு 252,060 மக்கள்தொகையைக் கொண்டிருந்தது. இதில் 121,363 ஆண்களும், 110,697 பெண்களும் இருந்தனர். இதன் கல்வியறிவு விகிதம் 85.17 சதவீதமாக இருந்தது. [5]

கத்கோடகத்தின் மதங்கள்
மதம் சதவீதம்
இந்து
70%
முஸ்லிம்
27%
சைனம்
0.7%
பிறர்†
2.3%
மதப் பரவல்
Includes சீக்கியர்கள் (0.2%), பௌத்தம் (<0.2%).

மேற்கோள்கள் தொகு

  1. Kathgodam தி இம்பீரியல் கெசட்டியர் ஆப் இந்தியா, 1909, v. 15, p. 164.
  2. "Full text of "Rediscovering india abode of gods vol 37"
  3. "Dan Singh Bist Professor Rawat"
  4. Falling Rain Genomics, Inc - Kathgodam
  5. "Urban Agglomerations/Cities having population 1 lakh and above" (PDF). Provisional Population Totals, Census of India 2011. பார்க்கப்பட்ட நாள் 2012-07-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கத்கோடம்&oldid=3138617" இலிருந்து மீள்விக்கப்பட்டது