கனடாவின் வரலாறு
கனடா 1867 ஆண்டே அரசியல் சட்டமைப்பு கொண்ட ஒரு நவீன கூட்டாட்சி நாடாக உருவானது. ஆனால் அதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இருந்தே பழங்குடிமக்கள் கனடா நிலப்பரப்பில் வசித்து வருகின்றனர். இன்று கனடா 320 இலட்சம் பல்லின மக்களைக் கொண்ட வளர்ச்சியடைந்த இரண்டாவது பெரிய நிலப்பரப்பு கொண்ட நாடு ஆகும்.
பழங்குடிகள்
தொகுகனடிய பழங்குடிமக்கள் அரசியல் நோக்கில் அரசியல் அமைப்புச் சட்டத்தில் பின்வரும் மூன்று வகைகளாக இனங்காணப்படுகின்றனர்: 'இன்டியன்ஸ்', இனுவிட் (Inuit), மெயிற்ரீஸ் (Metis). மூன்று பெரும்வகைகளாக அரசியல் சட்ட அடையாளங்களை கொண்டிருந்தாலும், இனம், மொழி, பண்பாடு, வாழ்வியல், புவியில் நோக்கில் பலவகைப்படுவார்கள்.
'இண்டியன்ஸ்' என்ற சொல் இழிவானதாக கனடிய பழங்குடிகள் கருதியதால், அவர்கள் தங்களை முதற் குடிகள் (First Nations) என்று அழைத்தார்கள். இவர்கள் கனடிய செவ்விந்தியர்கள் என்றும் குறிப்பிடப்படுவதுண்டு. இம்மக்களின் வாழ்வியல் அவர்கள் வாழ்ந்த நிலப்பகுதிகளைப்பொருத்து வேறுபடுகின்றது. வாழ்ந்த நிலப்பகுதிகளைக்கொண்டு முதற் குடிகளை ஆறாக பிரிக்கலாம். அவை பின்வருமாறு:
- சமவெளி மக்கள் - (Plains)
- இறொக்குவா குடிகள் - Iroquoian Nations
- வட வேட்டுவர் - Northern Hunters
- வட மேற்கு மக்கள் - Northwest Cost
- அல்கோன்கிய குடிகள் - Algonkian Nations
- பீடபூமி மக்கள் (Plateau)
பழங்குடிகள் கனடாவின் மிக குளிரான மேற்பகுதிகளில் வாழ்ந்தவர்களே இனுவிட் ஆவார்கள். இவர்களை அழைக்க எஸ்கிமோ என்ற (தற்போது இழிவாகக் கருத்தப்படும்) சொல்லும் பயன்படுத்தப்பட்டு வந்தது. கனடா என்றவுடன் விலங்குத் தோல் உடுப்புடன் பனிக் கட்டியால் கட்டப்பட்ட, மொழுகப்பட்ட இருப்பிடங்களுக்கு பக்கத்தில் நிற்கும் இனுவிட் மக்களைச் சுட்டுவது ஒரு ஊடக மரபு.
ஐரோப்பியர் வரவு
தொகுபிரெஞ்சு மக்கள் 1605 ஆம் ஆண்டளவில் ரோயல் துறைமுகம் என்ற பகுதியிலும், அதனைத் தொடர்ந்து 1608 ஆம் ஆண்டு கியூபெக்கிலும் முதன்முதலில் குடியமர்ந்தனர். ஆங்கில குடியேற்றங்கள் நியூ பவுண்ட்லாந்தில் 1610ம் ஆண்டு குடியமர்ந்தனர். ஐரோப்பியரின் வருகை புது நோய்களை வட அமெரிக்காவுக்கு கொண்டுவந்தது. அப்புதிய நோய்களுக்கு உடலில் எதிர்ப்புத்திறனற்ற முதற்குடிமக்கள் பெரும்பான்மையானோர் அந்த நோய்களுக்கு இரையானார்கள்.
கனேடிய கூட்டரசு உருவாக்கம்
தொகுபிரிட்டனின் குடியிருப்புகளாக இருந்த ஒன்ராறியோ, கியூபெக், நியூ பிரன்ஸ்விக், நோவோ ஸ்கோஷியா British North American Act மூலம் கனேடிய கூட்டரசாக உருவானது. கனடாவின் பிற மாகாணங்கள் பின்னர் கூட்டரசில் சேர்ந்தன. New Foundland 1949 ஆண்டு கனடாவுடன் கடைசியாக இணைந்த மாகாணம் ஆகும்.
பல்நாட்டவர் வருகை
தொகுபிரெஞ்சு, ஆங்கிலேயக் குடிவரவாளர்களாலும் முதற்குடிமக்களாலும் கனடா உருவாக்கப்பட்டது. கூட்டமைப்பின்போது ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தங்களின்படி கனடாவை இணைக்கும் ஒரு தொடருந்துப் பாதை கட்டவேண்டிய தேவை இருந்தது. இதற்காக 1870களில் சீனர்கள் தொடருந்து பாதை கட்டமைபில் வேலை செய்வதற்காக வரவழைக்கப்பட்டனர். 1885ம் ஆண்டு தொடருந்துப் பாதை கட்டிமுடிந்த பின்பு சீனர்கள் வரவு கட்டுப்படுத்தப்பட்டது. குறிப்பாக "Chinese Exclusion Act" 1923ம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.
கறுப்பின மக்கள் வெவ்வேறு காலப்பகுதியில் கனடாவில் குடியேறினார்கள். தொடக்கத்திலேயே அவர்கள் அடிமைகளாக பிரெஞ்சு மக்களுடன் கனடாவுக்கு வந்தனர். எனினும் 1793 ஆண்டில் மேல் கனடாவில் அடிமைகளுக்கு விடுதலை கிடைத்தது. அதனைத் தொடர்ந்து அமெரிக்காவில் இருந்து பல கறுப்பின மக்கள் கனடாவுக்கு விடுதலை தேடி வந்தனர். இவர்கள் வந்த பாதை நிலத்தடி இருப்புப்பாதை (Underground railroad) என அழைக்கப்பட்டது.
1920 ஆண்டளவில் கனடா இன அடிப்படையிலான குடிவரவுக் கொள்கைகளைப் பின்பற்றத் தொடங்கியது. இதன் காரணமாக ஐரோப்பியர் தவிர்ந்த ஏனைய இன மக்கள் கனடாவுக்குள் வருவது கடினமாக்கப்பட்டது. இக்கொள்கை 1967ம் ஆண்டு நீக்கப்பட்டது. எனினும், இதற்கமையவே இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் பல்வேறு ஐரோப்பிய குடிவரவாளர்களை உள்வாங்கியது. வியட்நாம் போரின்போது அமெரிக்க draft dogers பலரையும் உள்வாங்கியது.
உலகில் கனடா முதன்முதலாக பல்லினப்பண்பாடு கொள்கையை அதிகாரப்பூர்வ கொள்கையாக 1971ம் ஆண்டு ஏற்றுக்கொண்டது. அதனைத் தொடர்ந்து பன்னாட்டு மக்களும் கனடாவுக்கு குடிவருவது அதிகரித்தது. 1980களிலும் 1990களிலும் தமிழர்கள், பிற தெற்காசிய மக்கள், ஆப்பிரிக்கர்கள் புதிய குடிவரவாளர்களில் கணிசமான தொகையினராக இருந்தார்கள்.