கனிம அசுகார்பேட்டுகள்
கனிம அசுகார்பேட்டுகள் (Mineral ascorbates) என்பவை அசுகார்பிக் அமிலத்தின் (வைட்டமின் சி) உப்புகளின் குழுவாகும். இவை அசுகார்பேட்டுடன் (அசுகார்பிக் அமிலத்தின் அயனி) பிணைக்கப்பட்ட கனிம நேர்மின் அயனியை கொண்டிருக்கும்.[1]
தயாரிப்பு
தொகுஅசுகார்பிக் அமிலத்தை கனிம கார்பனேட்டுகளுடன் சேர்த்து நீரிய கரைசல்களில் வினைபுரியச் செய்தால் கார்பன் டை ஆக்சைடை வெளியேற்றி, வினைவிளை பொருளை உலர்த்த வேண்டும். பின்னர் உலர்ந்த பொருளை விரும்பிய துகள் அளவுக்கு அரைப்பதன் மூலம் கனிம அசுகார்பேட்டுகள் தயாரிக்கப்படுகின்றன.
கால்சியம் கார்பனேட்டு, பொட்டாசியம் கார்பனேட்டு, சோடியம் பைகார்பனேட்டு, மக்னீசியம் கார்பனேட்டு அல்லது பல கனிம வடிவங்களில் ஒன்றை கனிம கார்பனேட்டுகளாக தேர்வு செய்து கொள்ளலாம்.
பயன்கள்
தொகுகனிம அசுகார்பேட்டுகள் உணவுப் நிரப்பிகளாகவும், உணவு சேர் பொருள்களாகவும், மருந்துகளாகவும் பயன்படுத்தப்படுகின்றன. கனிம அசுகார்பேட்டு மருந்திற்கு உதாரணமாக சோடியம் அசுகார்பேட்டு ஊசியை குறிப்பிடலாம்.
பலவீனமான அமிலத்தன்மை கொண்ட அசுகார்பிக் அமிலத்தை விட அசுகார்பேட்டு உப்புகள் மனித உடலால் நன்கு ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.
அசுகார்பேட்டுகள் உணவுப் பொருள்களை பாதுகாப்பதற்காகப் பயன்படுத்தப்படும் அதிக வினைத்திறன் கொண்ட எதிர் ஆக்சிகரணிகள் ஆகும்.[2]
கனிம அசுகார்பேட்டுகளுக்கு எடுத்துக்காட்டுகளாவன:
- சோடியம் அசுகார்பேட்டு (ஐ301)
- கால்சியம் அசுகார்பேட்டு (ஐ302)
- பொட்டாசியம் அசுகார்பேட்டு (ஐ303)
- மக்னீசியம் அசுகார்பேட்டு
மேற்கோள்கள்
தொகு- ↑ "The Many Faces of Vitamin C by Thomas Levy". Archived from the original on 2015-01-09. பார்க்கப்பட்ட நாள் 2012-02-12.
- ↑ UK Food Standards Agency: "Current EU approved additives and their E Numbers". பார்க்கப்பட்ட நாள் 2011-10-27.