சோடியம் அசுகார்பேட்டு
சோடியம் அசுகார்பேட்டு (Sodium ascorbate) என்பது C6H7NaO6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். அசுகார்பிக் அமிலத்தினுடைய பல்வேறு கனிம உப்புகளில் இதுவும் ஒன்றாகும். அசுகார்பிக் அமிலத்தினுடைய சோடியம் உப்பாகக் கருதப்படும் இது கனிம அசுகார்பேட்டு என்று அழைக்கப்படுகிறது. உயிர்ச்சத்து சி துணை உணவின் வேறு எந்த வடிவத்தையும் விட இது உலகில் அதிகமாக கிடைக்கும் என்று நிரூபிக்கப்படவில்லை.[2]
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
சோடாகார்பேட்டு; மோனோசோடியம் அசுகார்பேட்டு; ஐ301
| |
இனங்காட்டிகள் | |
134-03-2 | |
ChEBI | CHEBI:113451 |
ChEMBL | ChEMBL591665 |
EC number | 205-126-1 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
KEGG | D05853 |
பப்கெம் | 23667548 |
வே.ந.வி.ப எண் | CI7671000 |
| |
UNII | S033EH8359 |
பண்புகள் | |
C6H7NaO6 | |
வாய்ப்பாட்டு எடை | 198.11 g·mol−1 |
தோற்றம் | நுண்ணிய வெண்மை முதல் மஞ்சள் நிற படிகங்கள் |
மணம் | நெடியற்றது |
அடர்த்தி | 1.66 கி/செ.மீ3 |
உருகுநிலை | 218 °C (424 °F; 491 K) (சிதைவடையும்) |
62 கி/100 மி.லி (25 °செல்சியசு) 78 கி/100 மி.லி (75 °செல்சியசு) | |
கரைதிறன் | எத்தனாலில் சிறிதளவு கரையும் insoluble in குளோரோபாரம், டை எத்தில் ஈதர் ஆகியவற்றில் கரையாது |
தீங்குகள் | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
சோடியம் அசுகார்பேட்டு பொதுவாக 1,000 மில்லி கிராம் அசுகார்பிக் அமிலத்திற்கு 131 மில்லி கிராம் சோடியத்தை வழங்குகிறது (1,000 மில்லி கிராம் சோடியம் அசுகார்பேட்டில் 889 மில்லி கிராம் அசுகார்பிக் அமிலமும் 111 மில்லி கிராம் சோடியமும் உள்ளது).
ஓர் உணவு சேர்க்கைப் பொருளாக சோடியம் அசுகார்பேட்டின் ஐரோப்பிய ஒன்றிய எண் ஐ301 என்று அடையாளப்படுத்தப்படுகிறது. இது ஆக்சிசனேற்ற மற்றும் அமிலத்தன்மை சீராக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியம்,[3] அமெரிக்கா,[4] ஆத்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் உணவு சேர்க்கைப் பொருளாகப் பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது.[5]
சோடியம் அசுகார்பேட்டு பல்வேறு வீரியம் மிக்க உயிரணுக்களில் செல்நச்சு விளைவுகளை உருவாக்குவதாகக் கண்டறியப்பட்டுள்ளது, இதில் குறிப்பாக எளிதில் பாதிக்கப்படக்கூடிய மெலனோமா செல்கள் அடங்கும்.[6][7]
தயாரிப்பு
தொகுதண்ணீரில் அசுகார்பிக் அமிலத்தைக் கரைத்து, அதற்கு சமமான சோடியம் பைகார்பனேட்டை தண்ணீரில் சேர்ப்பதன் மூலம் சோடியம் அசுகார்பேட்டு தயாரிக்கப்படுகிறது. நுரைத்துப் பொங்குதல் நிறுத்தப்பட்ட பிறகு, விளைபொருளுடன் ஐசோபுரோப்பைல் ஆல்ககாலை சேர்ப்பதன் மூலம் சோடியம் அசுகார்பேட்டு வீழ்படிவாகப் பெறப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ (+)-Sodium L-ascorbate at Sigma-Aldrich
- ↑ Linus Pauling Institute, Oregon State University: "Bioavailability of Different Forms of Vitamin C". பார்க்கப்பட்ட நாள் 2013-09-27.
- ↑ UK Food Standards Agency: "Current EU approved additives and their E Numbers". பார்க்கப்பட்ட நாள் 2011-10-27.
- ↑ US Food and Drug Administration: "Listing of Food Additives Status Part II". Food and Drug Administration. பார்க்கப்பட்ட நாள் 2011-10-27.
- ↑ Australia New Zealand Food Standards Code"Standard 1.2.4 - Labelling of ingredients". 8 September 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-10-27.
- ↑ "Pharmacologic ascorbic acid concentrations selectively kill cancer cells: Action as a pro-drug to deliver hydrogen peroxide to tissues". Proc Natl Acad Sci U S A 102 (38): 13604–9. September 2005. doi:10.1073/pnas.0506390102. பப்மெட்:16157892. Bibcode: 2005PNAS..10213604C.
- ↑ "Sodium ascorbate (vitamin C) induces apoptosis in melanoma cells via the down-regulation of transferrin receptor dependent iron uptake". J. Cell. Physiol. 204 (1): 192–7. July 2005. doi:10.1002/jcp.20286. பப்மெட்:15672419.