கன்னன்குளம்
கன்னன்குளம் என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் இராதாபுரம் வட்டத்தில் வள்ளியூர் ஊராட்சி ஒன்றியத்தில் லெவிஞ்சிபுரம் ஊராட்சிக்கு[4] உட்பட்ட கிராமமாகும். இது திருநெல்வேலி-கன்னியாகுமரி மாவட்ட எல்லையில் அமைந்துள்ளது.
கன்னன்குளம் அஞ்சல் நிலையம், அரசு ஆரம்ப சுகாதாரநிலையம் ஆகியவையும் இங்கு அமைந்துள்ளன.
கன்னன்குளம் | |
— கிராமம் — | |
ஆள்கூறு | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருநெல்வேலி |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | கா. ப. கார்த்திகேயன், இ. ஆ. ப [3] |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
அமைவிடம்
தொகுஇது கன்னியாகுமரி-தூத்துக்குடி நெடுஞ்சாலையில் கன்னியாகுமரியிலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இது கூடன்குளம் அணுமின்நிலையத்தின் மிக அருகாமையில் இந்து மகா சமுத்திரத்தின் கடற்கரை ஓரம் அமைந்துள்ளது.
தொழில்கள்
தொகுபெரும்பாலான மக்கள் விவசாய முக்கிய தொழிலாக கொண்டுள்ளனர். முக்கிய பயிர்களாக பிச்சி, மல்லி பூக்கள் பயிர்களாக பயிரிடப்படுகின்றன. தென்னை, வாழை, கீரை, நெல், கிழங்குகள் போன்றவையும் பயிரிடப்படுகின்றனர்.
விளையாட்டு
தொகுதமிழ்நாடு கபடி அணியில் இடம்பெற்றுள்ள விஜின் என்பவர் இவ்வூரை சார்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது[சான்று தேவை].
பள்ளிகள்
தொகுஇந்து மேல்நிலைப்பள்ளி
தொகுஇது 1964-ம் ஆண்டு பிச்சை நாடார் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது[சான்று தேவை].
வழிபாட்டு தலங்கள்
தொகுஇந்து சமயம்
தொகு- முத்தாரம்மன் கோவில்
- இசக்கியம்மன் கோவில்
- சுடலைமாடன் கோவில்
- பெருமாள் சுவாமி கோவில்
- மன்னராஜா சுவாமி கோவில்
கிறிஸ்தவ சமயம்
தொகு- சி.எஸ்.ஐ தேவாலயம்
- உபகார மாதா கத்தோலிக்க ஆலயம்
நீர்நிலைகள்
தொகு- தெப்பக்குளம்
- கொல்லன் சாத்தநேரிகுளம்
மேற்கோள்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2015-04-02.