கன்னித்தன்மை சோதனை

கன்னித்தன்மை சோதனை (Virginity test) என்பது ஒரு சிறுமியோ அல்லது பெண்ணோ அவர்கள் கன்னி என்பதை தீர்மானிக்கும் நடைமுறையும், செயல்முறையும் ஆகும்; அதாவது, அவள் ஒருபோதும் பாலுறவில் ஈடுபடவில்லை அல்லது பாதிக்கப்படவில்லை என்பதை தீர்மானிக்க இது நடத்தப்படுகிறது. கன்னிச்சவ்வானது உடலுறவின் விளைவாக மட்டுமே கிழிந்துவிடும் என்ற தவறான அனுமானத்தில் இவ்வாறு சோதனை நடத்தப்படுகிறது.[1]

சோதனை செய்யப்பட்ட சிறுமிகளுக்கும், பெண்களுக்கும் அதன் தாக்கங்கள் மற்றும் அது நெறிமுறையற்றதாகக் கருதப்படுவதால் இவ்வாறான கன்னித்தன்மை சோதனை பரவலாக சர்ச்சைக்குரியதாகக் கருதப்படுகிறது.[2] வன்கலவி அல்லது சிறுவர்களுடனான பாலியல் முறைகேடு என சந்தேகிக்கப்படும் சந்தர்ப்பங்களில், கன்னிப் பெண்ணிடம் விரிவான பரிசோதனை செய்யப்படலாம். ஆனால் கன்னிமையின் நிலை மட்டும் பெரும்பாலும் முடிவற்றதாக இருக்கும்.[3]

இவ்வகை சோதனைகள் வலி மிகுந்த, அவமானகரமான, அதிர்ச்சிகரமான நடைமுறையாகும். இது பெண்களுக்கு எதிரான வன்முறையை உருவாக்குகிறது என்பதால் இச்சோதனையை மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் மன்றம், ஐ. நா. பெண்கள் அமைப்பு, உலக சுகாதார அமைப்பு போன்றவை இச்சோதனையை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று அக்டோபர் 2018இல் கூறியது.[4]

இரண்டு விரல் சோதனை

தொகு

கன்னித்தன்மை சோதனை செயல்முறை என்பது பிராந்தியத்தைப் பொறுத்து மாறுபடும். மருத்துவர்கள் இருக்கும் பகுதிகளில், சோதனைகள் பெரும்பாலும் ஒரு மருத்துவமனையில் பரிசோதிக்கப்படும்.[5] இருப்பினும், சில நாடுகளில் மருத்துவர்கள் இல்லாத இடங்களில், சோதனையாளர்கள் பெரும்பாலும் வயதான பெண்களாக இருப்பார்கள், அல்லது யாராவது ஒரு நம்பிக்கைக்குறிய நபராக இருக்கலாம்.[6] ஆப்பிரிக்காவில் உள்ள இனக்குழுக்களிடையே இவ்வகை சோதனையானது பொதுவாக காணப்படுகிறது.[7]

கன்னித்தன்மை சோதனையின் மற்றொரு வடிவம் விரல்களால் யோனி தசைகளின் தளர்வுக்கான சோதனையை உள்ளடக்கியது ("இரண்டு விரல் சோதனை"). பெண்ணின் பெண்குறியின் அளவை பரிசோதிக்க ஒரு பெண்ணின் யோனிக்குள் ஒரு விரலைச் செருகுவதன் மூலம் ஒரு மருத்துவர் பரிசோதனையைச் செய்கிறார். அது "உடலுறவுக்கு பழக்கமாக இருக்கிறதா" என்பதைத் தீர்மானிக்க இவ்வாறு செய்யப்படுகிறது.[8] எவ்வாறாயினும், இந்த அளவுகோல்களின் பயனை மருத்துவ அதிகாரிகளும், கன்னித்தன்மை சோதனையின் எதிர்ப்பாளர்களும் கேள்விக்குள்ளாக்கின்றனர். ஏனெனில் யோனி தளர்வு அல்லது கன்னித் தன்மை இல்லாதது என்பது மற்ற காரணிகளால் கூட ஏற்படலாம். மேலும் "இரண்டு விரல் சோதனை" என்பது அகநிலை கண்காணிப்பை அடிப்படையாகக் கொண்டது.[9] [10]

வங்காளதேசம், பாக்கித்தான், இந்தியா ஆகிய நாடுகளில் வன்கலவியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முந்தைய பாலியல் செயல்பாடுகளுக்கான சோதனைகள் தடை செய்யப்படுவதற்கு முன்பு நடத்தப்பட்டன.[11] [12] [13]

மத்திய ஆப்பிரிக்காவில் இருக்கும் பாண்டு மக்களிடையே, கன்னித்தன்மை சோதனை அல்லது யோனியிதழ்களைத் தைப்பது என்பது பொதுவானதாக இருந்து வருகிறது. பாரம்பரியமாக, கெனூசி பெண்கள் ( சூடான் ) பருவமடைவதற்கு முன்பே வயது வந்த ஆண்களால் திருமணம் செய்யப்படுகிறார்கள்.[14] அவர்கள் கன்னித்தன்மையை கைமுறையாக பரிசோதிக்கிறார்கள்.

பெண்களுக்கு எதிரான வன்முறையின் உதாரணம்

தொகு

உலக சுகாதார நிறுவனத்தால் பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு கன்னித்தன்மை சோதனை ஒரு எடுத்துக்காட்டு என்று அறிவிக்கப்பட்டாலும், அது இன்னும் பல நாடுகளில் நடத்தப்படுகிறது. கன்னித்தன்மை சோதனை என்பது மருத்துவ ரீதியாக தேவையற்ற அதேசமயம் ஊடுருவும் பிறப்புறுப்புப் பரிசோதனையாகும். இது பெரும்பாலும் அவர்களின் ஒப்புதல் இல்லாமல் பெண்களுக்கு மட்டுமே பிரத்தியேகமாக செய்யப்படுகிறது. அது பாலின வேறுபாட்டையும், அதிகார சமத்துவமின்மையையும் அடிப்படையாகக் கொண்டது. மேலும், பெண்களின் முடிவெடுக்கும் திறனைக் குறைமதிப்பிற்கும் உட்படுத்துகிறது. க

ன்னித்தன்மை சோதனை நடைமுறையானது, பெண் பாலியல் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தவும், பெண்களுக்கு எதிரான வன்முறையை நியாயப்படுத்தவும் வரலாற்று ரீதியாகப் பயன்படுத்தப்படும் சமூக நெறிமுறைகளை அடிப்படையாகக் கொண்டது. உலகெங்கிலும் உள்ள சமூகங்களில், குறிப்பாக ஆணாதிக்கச் சமூகத்தில், பெண்கள் பெரும்பாலும் தங்கள் தந்தையர் அல்லது கணவனின் சொத்தாகக் கருதப்படுகிறார்கள். இதனால் அவர்களின் உடல்கள் ஆண்களின் கட்டுப்பாட்டிற்குரிய பொருள்களாகின்றன. இது சிறுமிகளும் பெண்களும் திருமணம் செய்யும் வரை கன்னிகளாக இருக்க சமமற்ற சமூக அழுத்தங்களை தூண்டுகிறது. இந்த அணுகுமுறைகள் ஆண்களுக்கு பெண் பாலியல் நடத்தைகளைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு கட்டமைப்பை உருவாக்குகின்றன. மேலும் இது பெண்களுக்கு தண்டனையாகவோ அல்லது மரணத்திற்கு கூட வழிவகுத்தது. இந்த பாரபட்சமான அணுகுமுறைகள் பெண்களுக்கு எதிரான வன்முறைக்கும் வழிவகுத்தன.[15]

மேற்கோள்கள்

தொகு
  1. "The little tissue that couldn't – dispelling myths about the Hymen's role in determining sexual history and assault". National Center for Biotechnology Information. 2019-06-03. பார்க்கப்பட்ட நாள் 2021-08-20.
  2. University of California at Santa Barbara's SexInfo – The Hymen பரணிடப்பட்டது 2012-03-11 at the வந்தவழி இயந்திரம். Retrieved 4 March 2009.
  3. Perlman, Sally E.; Nakajyma, Steven T.; Hertweck, S. Paige (2004). Clinical protocols in pediatric and adolescent gynecology. Parthenon. p. 131. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-84214-199-6.
  4. "United Nations agencies call for ban on virginity testing". World Health Organization. 17 October 2018. பார்க்கப்பட்ட நாள் 22 October 2018.
  5. "Document". www.amnesty.org.
  6. "Zulus Eagerly Defy Ban on Virginity Test". 26 September 2008. https://www.washingtonpost.com/wp-dyn/content/article/2008/09/25/AR2008092504625_pf.html. 
  7. LeClerc-Madlala, Suzanne (2001). "Virginity Testing: Managing Sexuality in a Maturing HIV/AIDS Epidemic". Medical Anthropology Quarterly 15 (4): 533–552. doi:10.1525/maq.2001.15.4.533. பப்மெட்:11794875. https://archive.org/details/sim_medical-anthropology-quarterly_2001-12_15_4/page/533. 
  8. McNeil Jr., Donald G. (13 September 2010). "Rape: Rights Group Calls Test to Determine Sexual Activity a 'Second Assault' in India". The New York Times. https://www.nytimes.com/2010/09/14/health/14glob.html?scp=1&sq=rape%20test&st=cse. 
  9. (6 September 2010). "Dignity on Trial: India’s Need Sound Standards for Conducting and Interpreting Forensic Examinations of Rape Survivors". செய்திக் குறிப்பு.
  10. "'Crude, degrading' finger-test forced on Mumbai gangrape victim by cops". First Post. 9 October 2013. http://www.firstpost.com/india/crude-degrading-finger-test-forced-on-mumbai-gangrape-victim-by-cops-1162157.html. 
  11. "Two Finger Rape Test – Now Banned in India" (in en-US). 2014-05-08. http://womenpla.net/two-finger-rape-test-now-banned-in-india/. 
  12. "It's time Pakistan banned the two-finger test for decoding consent in rape trials" (in en-US). 2017-12-18. https://www.dawn.com/news/1377364/its-time-pakistan-banned-the-two-finger-test-for-decoding-consent-in-rape-trials. 
  13. "Bangladesh High Court Bans 'two finger test' for Rape" (in en-US). 2018-04-23. https://www.dhakatribune.com/bangladesh/court/2018/04/12/high-court-bans-two-finger-tests-rape. 
  14. (Godard, 1867)
  15. Olson, Rose McKeon; García-Moreno, Claudia (2015-11-18). "Virginity testing: a systematic review". Reproductive Health 14. doi:10.1186/s12978-017-0319-0. பன்னாட்டுத் தர தொடர் எண்:1742-4755. பப்மெட்:28521813.    Material was copied from this source, which is available under a Creative Commons Attribution 3.0 Unported License.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கன்னித்தன்மை_சோதனை&oldid=3521139" இலிருந்து மீள்விக்கப்பட்டது