கன்னிச்சவ்வு

கன்னிச்சவ்வு (Hymen அல்லது Maidenhead) அல்லது யோனிச்சவ்வு என்பது புணர்புழையின் வாயிலை சுற்றியுள்ள அல்லது பகுதியும் மூடியுள்ள ஓர் சவ்வு போன்ற இழையம் ஆகும். முழுமையும் மூடாதிருப்பதால் கன்னியரும் மாதவிடாய் காலத்தில் கருப்பைக் கழிவுகளை வெளியேற்ற இயலும். இந்தச் சவ்வின் பயன் குறித்து அறியாது உள்ளது. பொதுவாக முதல் உடலுறவின்போது இது கிழிபடுவதால் இது கன்னிச்சவ்வு எனவும் கிழிபடாதவர்கள் கன்னியர்கள் எனவும் கருத்து உள்ளது. இது ஓர் தவறான கருத்து ஆகும். ஒரு பெண்ணின் கன்னிச்சவ்வு சில விளையாட்டுக்களில் ஈடுபட்டால் கூட கிழிபடலாம். மேலும் சில பெண்களுக்கு பிறவியிலேயே கன்னிச்சவ்வு இல்லாமல் இருக்கலாம்.

கன்னிச்சவ்வு
அல்லது
யோனிச்சவ்வு
ஒரு மனித பெண்ணின் வெளிப்புற பிறப்புறுப்புகள்
விளக்கங்கள்
அடையாளங்காட்டிகள்
இலத்தீன்hymen
MeSHD006924
TA98A09.1.04.008
TA23530
FMA20005
உடற்கூற்றியல்
கன்னிச்சவ்வு குறித்த ஓர் வரைபடம்

வகைகள்

தொகு
 
கன்னிச்சவ்வுகளின் வகைகள்

கன்னிச்சவ்வுகள் பலவகைப்படும். 2000இல் ஒரு பெண்ணிற்கு கன்னிச்சவ்வு உருவாவதே இல்லை:[1] இது "துளையில்லா கன்னிச்சவ்வு" எனப்படுகிறது.[2]

பிற வகைகள்:

  • பிறை-வடிவத்தில்
  • புணர்புழையைச் சுற்றிய வளையம்
  • தன்மீதே அடுக்காக
  • துளை மீது குறுக்காக ஒன்றிரண்டு பட்டைகள்
  • பல துளைகளுடன்

கன்னிச்சவ்வு கிழிபடக்கூடிய காரணங்கள்

தொகு

கன்னிச்சவ்வு விளையாடுவதாலோ பஞ்சுத்தக்கைகளைப் பயன்படுத்துவதாலோ கிழிபடலாம்.[3]

பூப்படைந்த பெண்களுக்கு கன்னிச்சவ்வு இழுபடக்கூடியத் தன்மையுடன் உள்ளது. உடலுறவைத் தவிர குதிரை சவாரி, ஈருளி வண்டியோட்டல் போன்றவை எளிதாக இச்சவ்வை பாதிக்கும்.

கன்னிச்சவ்வு உள்ள பிற விலங்குகள்

தொகு

கீழ்வரும் விலங்குகளுக்கு கன்னிச்சவ்வு உள்ளன:

இது கன்னிச்சவ்வு உள்ள விலங்குகளின் முழுமையான பட்டியல் அல்ல. மேலும் பல விலங்குகளுக்கு கன்னிச்சவ்வு உள்ளது.

வளர்ச்சி நிலைகள்

தொகு

முதிர்கரு உருவாகும்போது புணர்புழை துளை இருப்பதில்லை. அப்போது புணர்புழையை மூடுகின்ற தோலில் இருந்து இது உருவாகிறது.[4]

பிறந்த குழந்தைகளுக்கு கன்னிச்சவ்வு தடிமனாகவும் இளஞ்சிவப்பாகவும் காணப்படும். தாய்ப்பாலில் இருந்து பெறப்படும் தாயின் இயக்குநீரால் இவ்வாறுள்ளது. பூப்படையாத பெண்களுக்கு ஈத்திரோசன் இயக்குநீர் இல்லாமையால் கன்னிச்சவ்வு மெலிதாக இருக்கிறது. இது மிகவும் உணர்திறனோடு தொடுதலால் வலி ஏற்படுமளவில் மென்மையாக உள்ளது. பூப்படைந்த பின்னர் இயக்குநீர் சுரப்பதால் மீண்டும் தடித்தும் இளஞ்சிவப்பாகவும் இருக்கும்.

மேற்கோள்கள்

தொகு
  1. Kurman, Robert J., ed. (2002). Blaustein's Pathology of the Female Genital Tract (5th edition ed.). New York: Springer-Verlag. p. 160. {{cite book}}: |edition= has extra text (help)
  2. Chang, Lisbeth and Muram, David. (2002) "Pediatric & Adolescent Gynecology" in DeCherney, Alan H. and Nathan, Lauren. Current Obstetric & Gynecological Diagnosis & Treatment, 9th edition, McGraw-Hill, 598-602.
  3. Emans, S. Jean. "Physical Examination of the Child and Adolescent" (2000) in Evaluation of the Sexually Abused Child: A Medical Textbook and Photographic Atlas, Second edition, Oxford University Press. 64-5
  4. 1918 Gray's Anatomy

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கன்னிச்சவ்வு&oldid=3677549" இலிருந்து மீள்விக்கப்பட்டது