கன்னி (About this soundஒலிப்பு ) (Virgo; ) என்பது இராசிச் சக்கரத்தின் ஆறாவது சோதிட இராசியாகும். மேற்கத்திய சோதிடத்தில் சூரியன் நிலநடுக்கோட்டை கடந்து செல்லும் காலத்தின் அச்சு சுழற்சியின் விளைவாக விண்மீன் தொகுப்புடன் இந்த இராசி வரிசைப்படுத்தப்படவில்லை. சோதிடத்தில், கன்னி ஒரு "பெண்ணியல்பான" எதிர்மறை (உள்முகச்சிந்தனை) இராசியாகக் கருதப்படுகிறது. கன்னியானது வழக்கமாக புதன் கிரகத்தால் ஆளப்படுகிறது. ஆனால் சில நவீன சோதிடர்களால் பல்வேறு பிற கிரகங்களும் கன்னியை ஆளுவதாக கூறப்பட்டுள்ளது.[1][2][3] இராசி மண்டலத்தின் ஆறாவது இராசியாக இருப்பதால், சோதிடத்தின் ஆறாவது வீட்டுடன் கன்னி தொடர்புடையதாகக் கருதப்படுகிறது.

Virgo
சோதிட குறியீடுVirgin
விண்மீன் குழாம்Virgo
பஞ்சபூதம்Earth
சோதிட குணம்Mutable
ஆட்சிMercury (ancient), Ceres (modern)
பகைJupiter (ancient), Neptune (modern)
உச்சம்Mercury
நீசம்Venus, Jupiter
AriesTaurusGeminiCancerLeoVirgoLibraScorpioSagittariusCapricornAquariusPisces

இது விண்ணின் 150 முதல் 180 பாகைகளை குறிக்கிறது (150°≤ λ <180º).[4] சூரியன் இந்த இராசியில் இருக்கும்போது பிறந்தவர்கள் கன்னி இராசியில் பிறந்தவர்கள் எனக் கருதப்பட்டனர்.

மாதம்

ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு இராசி ஆட்சி செய்வதாக கூறுவர். இதில் புரட்டாசி மாதம் கன்னிக்கு உரிய மாதமாகும். எனவே இது கிரெகோரிய நாட்காட்டியின் செப்டம்பர் மாத பிற்பாதியும், அக்டோபர் மாத முற்பாதி வரையிலும் சூரியனின் தாக்கமுள்ள இடமாக கருதப்படுகிறது

மேற்கத்திய சோதிடம்

மேற்கத்திய சோதிட நூல்கள் படி ஆகத்து 23 முதல் செப்டம்பர் 22 வரை (இரு நாட்களும் உட்பட) பிறந்தோரை கன்னி இராசியினர் என்று அழைப்பர்.[5]

கோள்

இந்த இராசிக்கான அதிபதி புதன் என்றும் உரைப்பர்.[6]

உசாத்துணை

புற இணைப்புகள்


தமிழ் மாதங்கள்
சித்திரை | வைகாசி | ஆனி | ஆடி | ஆவணி | புரட்டாசி | ஐப்பசி | கார்த்திகை | மார்கழி | தை | மாசி | பங்குனி
"https://ta.wikipedia.org/w/index.php?title=கன்னி_(சோதிடம்)&oldid=3548671" இருந்து மீள்விக்கப்பட்டது