கபூர்தலா சமஸ்தானம்


கபூர்தலா சமஸ்தானம் (Kapurthala State), 1947 இந்திய விடுதலைக்கு முன்னர் பிரித்தானிய இந்தியாவின் கீழிருந்த 562 சுதேச சமஸ்தானங்களில் ஒன்றாகும். இது இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் கபூர்தலா மாவட்டப் பகுதிகளைக் கொண்டிருந்தது. இதன் தலைநகரம் கபூர்தலா நகரம் ஆகும். 1901-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, கபூர்தலா இராச்சியம் 352 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 167 கிராமங்களும், 3,14,341 மக்கள் தொகையும் கொண்டிருந்தது. [1] இதன் ஆட்சியாளர்களுக்கு பிரித்தானிய இந்தியாவின் அரசு, 13 துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை செய்தனர் .

கபூர்தலா சமஸ்தானம்
சுதேச சமஸ்தானம் பிரித்தானிய இந்தியா

1772–1947

Flag of கபூர்தலா

கொடி

Location of கபூர்தலா
Location of கபூர்தலா
1909-இல் பஞ்சாப் மாகாண வரைபடத்தில் கபூர்தலா சமஸ்தானம்
வரலாற்றுக் காலம் பிரித்தானிய இந்தியா
 •  நிறுவப்பட்டது 1772
 •  இந்திய விடுதலை, 1948 சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தம் 1947
பரப்பு
 •  1901 352 km2 (136 sq mi)
Population
 •  1901 314,341 
மக்கள்தொகை அடர்த்தி Expression error: Unrecognized punctuation character ",". /km2  (Expression error: Unrecognized punctuation character ",". /sq mi)
தற்காலத்தில் அங்கம் கபூர்தலா மாவட்டம், பஞ்சாப், இந்தியா
Kapurthala state The Imperial Gazetteer of India, 1909, v. 14, p. 408–416.

வரலாறு

தொகு

சாட் இன அலுவாலியா வம்சத்தின் ஜஸ்சா சிங் 1772-இல் கபூர்தலா சமஸ்தானத்தை நிறுல்வினார்.[2][3] .[4].[5] சீக்கியப் பேரரசர் ரஞ்சித் சிங்கின் கீழ் சிற்றரசாக கபூர்தலா சமஸ்தானம் இருந்தது. பின்னர் மராத்தியப் பேரரசில் சிற்றரசாக இருந்த கபூர்தலா இராச்சியம், மூன்றாம் ஆங்கிலேய மராத்தியப் போருக்குப் பின்னர் 1818-ஆம் ஆண்டில், பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் கொண்டுவந்த துணைப்படைத் திட்டத்தை ஏற்ற கபூர்தலா இராச்சியத்தினர், ஆண்டுதோறும் ஆங்கிலேயர்களுக்கு திறை செலுத்தி சுதேச சமஸ்தானமாக ஆட்சி செய்தனர். இது பஞ்சாப் மாகாணத்தின் கீழ் செயல்பட்டது. கபூர்தலா இராச்சிய மன்னர்களுக்கு பிரித்தானிய இந்தியா அரசு, 13 துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை செய்தனர்.

1947-இல் இந்திய விடுதலைக்குப் பின்னர், சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி கபூர்தலா இராச்சியம் 1947-ஆம் ஆண்டின் இறுதியில் பஞ்சாப் மாநிலத்துடன் இணக்கப்பட்டது. தற்போது இந்த இராச்சியப் பகுதிகள் கபூர்தலா மாவட்டப் பகுதிகளைக் கொண்டுள்ளது.

ஆட்சியாளர்கள்

தொகு
 
கபூர்தலா சமஸ்தான இராஜா பதே சிங் அலுவாலியா
 
கபூர்தலா இராச்சியத்தின் இறுதி மன்னர் ஜெகத்ஜித் சிங்
  • பதே சிங் அலுவாலியா - (10 சூலை 1801 – 20 அக்டோபர் 1837)[6][7][8]
  • நிகால் சிங் - (20 அக்டோபர் 1837 – 13 செப்டம்பர் 1852)
  • ரண்தீர் சிங் - (13 செப்டம்பர் 1852 – 2 ஏப்ரல் 1870)
  • கரக் சிங் - (2 ஏப்ரல் 1870 – 3 செப்டம்பர் 1877)
  • ஜெகத் சிங் - (3 செப்டம்பர் 1877 – 12 டிசம்பர் 1911)
  • ஜெகத்ஜித் சிங் - (12 டிசம்பர் 1911 – 15 ஆகஸ்டு 1947)

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Kapurthala state தி இம்பீரியல் கெசட்டியர் ஆப் இந்தியா, 1909, v. 14, p. 408.
  2. Kaushik Roy (2015). Military Manpower, Armies and Warfare in South Asia. Routledge. p. 88. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781317321279.
  3. Singhia, H.S. (2009). The encyclopedia of Sikhism. New Delhi: Hemkunt Press. p. 111. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7010-301-1.
  4. Donald Anthony Low (1968). Soundings in Modern South Asian History. University of California Press. pp. 70–71. இணையக் கணினி நூலக மைய எண் 612533097.
  5. Sohan Singh Seetal (1981). The Sikh Misals and the Punjab States. Lahore Book Shop. p. 75.
  6. "History | Kapurthala Web Portal | India". Government of India. பார்க்கப்பட்ட நாள் 25 December 2020.
  7. A history of the Sikhs, from the origin of the nation to the battles of the Sutlej. Cunningham, Joseph Davey, 1812-1851., Garrett, H. L. O. ed. (Herbert Leonard Offley), 1881-1941
  8. Griffin, Lepel Henry. Ranjit Singh. Oxford : Clarendon press.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கபூர்தலா_சமஸ்தானம்&oldid=3708276" இலிருந்து மீள்விக்கப்பட்டது