கப்பழம் ராமன் பிள்ளை
கப்பழம் ராமன் பிள்ளை (Kappazhom Raman Pillai) இவர் திருவிதாங்கூர் அரசாங்கத்தின் திவான் பேசுகராக பணியாற்றிய ஒரு நாயர் சமூகத்தைச் சேர்ந்தவராவார். மேலும் இவரது நேர்மை, மனசாட்சி, செயல்திறன், மகாராஜாவுக்கு உறுதியான விசுவாசம் ஆகியவற்றால் அறியப்பட்டார். திவான் பேசுகார் என்ற முறையில், ஆட்சி, நீதித்துறை, காவல்துறை கண்காணிப்பு ஆகியவற்றின் அதிகாரங்களை இவர் தன்னிடம் வைத்திருந்தார்.
தனிப்பட்ட வாழ்க்கை
தொகு1868 இல் பிறந்த இவர் ஆலப்புழாவின் புலமண்தோப்பிலிருந்து திருவனந்தபுரத்திற்கு குடிபெயர்ந்தார். இவர் கோவிலில் இலட்சுமி அம்மா.கூப்பக்கார போற்றியின் மகள் கௌரி அம்மாவை மணந்தார். இவர்களுக்கு இலட்சுமி அம்மா, நாராயணி அம்மா, மாதவி அம்மா, கார்த்தியாயிணி அம்மா, ஜானகி அம்மா என்ற ஐந்து மகள்கள் இருந்தனர். இவரது மருமகன்கள் - பி.சிவசங்கர பிள்ளை என்பவர் முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதியாகவும், நீலகண்டபிள்ளை முன்னாள் நிதி செயலாளரும் கணக்கு அதிகாரியுமாகவும், கேசவ பிள்ளை முன்னாள் உதவி பேசுகராகவும், நாராயண பிள்ளை பொறியாளராகவும் மற்றும் கட்டிடக் கலைஞராகவும் திருவிதாங்கூர் வரலாற்றிலும் தங்கள் அடையாளத்தை பதித்துள்ளனர்.
இவற் 1924 செப்டம்பர் 10 ஆம் தேதி தனது ஐம்பத்தாறு வயதில் திருவனந்தபுரத்தின் தம்பனூரில் உள்ள புலிக்கல் வீடு என்ற இடத்தில் இறந்தார்.
மறைந்த கர்னல் நீலகண்டன் ஜெயச்சந்திரன் நாயர் (அசோகச் சக்கர விருது, கீர்த்தி சக்கரம் விருது பெற்றவர்), காவல் துறை துணைத் தலைவர் ஆர். சிரீலேகா, கேரளாவின் தற்போதைய மாநில முதன்மைக் கணக்காளர் மகலட்சுமி மேனன், கேரள மாநில மின்சார வாரியத்தின் தலைவர் எம்.சிவசங்கர் ஆகியோர் இவரது புகழ்பெற்ற சந்ததியினர் ஆவர்.
ஆர்வங்கள்
தொகுஇவர் ஒரு ஆர்வமுள்ள வாசகராகவும், கலைகளின் இணைப்பாளராகவும் இருந்தார். பிரபல மலையாள புதின ஆசிரியர் ச. வே. இராமன் பிள்ளையின் நெருங்கிய நண்பராக இருந்தார். திருவனந்தபுரம் மகாராஜா கல்லூரியில் ச. வே. இராமன் பிள்ளையின் சந்திரமுகி விலாசம் அரங்கேற்றப்பட்டபோது இவர் அதில் ஒரு கணியன் வேடத்தில் நடித்தார். 'அங்கதன்' என்றப் புனைப்பெயரைப் பயன்படுத்தி மலையாள மனோரமாவில் ஏழு கட்டுரைகளை வெளியிட்டார். [1]
தொழில்
தொகுஇவர் ஆசிரியராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் இவர் பதிவு இயக்குநர், திவான் பேசுகார் போன்ற முக்கியமான பதவிகளுக்கு உயர்த்தப்பட்டார். அரண்மனை மேலாளரும், மூலம் திருநாள் ராம வர்மாவின் வலது கை எனப்படுபவருமான சங்கரன் தம்பியுடன் நல்ல உறவைப் பேணியதாக சுதேசாபிமானி ராமகிருட்டிண பிள்ளை இவரை விமர்சித்தார்.
நினைவு
தொகு2012 நவம்பர் 25 அன்று இளவரசி அசுவதி திருநாள் கௌரி லட்சுமி பாய் கப்பழம் ராமன் பிள்ளையின் 144ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் விழாவை ஆரம்பித்து வைத்தார்.
குறிப்புகள்
தொகு- ↑ C V Raman Pillai — P K Parameswaran Nair