கமலா புஜாரி

கமலா புஜாரி (1949/1950 – 20 சூலை 2024)[1] இந்தியாவின் ஒடிசாவில் உள்ள கோராபுட்டைச் சேர்ந்த பழங்குடிப் பெண். கமலா இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதில் பெயர் பெற்றவர். பாரம்பரிய விவசாயத்தில் ஆர்வம் கொண்ட அவர், ஜெய்ப்பூரில் உள்ள எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையில் இருந்து அடிப்படை நுட்பங்களைக் கற்றுக்கொண்டார். மேலும் இவர் இயற்கை விவசாயத் துறையில் பல பங்களிப்புகளைத் தந்துள்ளார். இந்தியாவின் நான்காவது உயரிய குடிமகன் விருதான பத்மஸ்ரீ விருதைப் பெற்றார்.[2]

கமலா புஜாரி
Kamala Pujari
2019 இல் புஜாரி
பிறப்பு1949/1950
கோராபுட் மாவட்டம், ஒடிசா, இந்தியா
இறப்பு (அகவை 74)
கட்டக், ஒடிசா
அறியப்படுவதுஇயற்கை வேளாண்மையை ஊக்குவித்தல்
விருதுகள்பத்மசிறீ (2022)

சுயசரிதை

தொகு

ஒடிசா மாநிலம், கோராபுட் மாவட்டம், போய்பரிகுடா அருகே உள்ள ஜெய்பூரில் இருந்து 15 கி.மீ தொலைவிலுள்ள பத்ராபுட் கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியினப் பெண்ணானகமலா பூஜாரி, உள்ளூர் நெல்களைப் பாதுகாத்து வருகிறார். இதுவரையிலும் நூற்றுக்கணக்கான உள்நாட்டு நெல் வகைகளை பாதுகாத்து வருகிறார். நெல்லைப் பாதுகாப்பதும் இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதும் அவளருக்கு வெறும் பொழுது போக்கு அல்ல. இதில் இறங்கிய பிறகு, அவர் மக்களைத் திரட்டி, குழுக் கூட்டங்களை ஏற்பாடு செய்து, ரசாயன உரங்களைத் தவிர்க்க மக்களுடன் தொடர்பு கொண்டு. தன்னுடன் சேர பலரைக் கூப்பிட்டு,பலரைச் சேர்த்துக் கொண்டு, இயற்கை விவசாயத்தில் வெற்றியடைந்ததார். இதனால் பத்ராபுட் கிராமம் மற்றும் அண்டை கிராமங்களில் உள்ள விவசாயிகள் ரசாயன உரங்களை கைவிட்டனர். எந்த அடிப்படைக் கல்வியும் இல்லாமல், கமலா இன்றுவரை 100 வகையான நெல் வகைகளைப் பாதுகாத்து வருகிறார். புஜாரி நெல், மஞ்சள், தில்லி, கருஞ்சீரகம், மகாகந்தா, பூலா மற்றும் காண்டியா போன்ற அழிந்து வரும் மற்றும் அரிய வகை விதைகளைச் சேகரித்துள்ளார். அவர் தனது பகுதியில் உள்ள கிராமவாசிகளை ரசாயன உரங்களைத் தவிர்த்து, சிறந்த அறுவடை மற்றும் மண் வளத்திற்காக இயற்கை விவசாயத்தை பின்பற்றும்படி வற்புறுத்தி வருகிறார். விவசாயத்தில் வரவிருக்கும் தலைமுறைகளுக்கு ஒரு எடுத்துக்காட்டாக புஜாரி விளங்குகிறார். [3] [4] [5] [6]

சாதனைகள்

தொகு

2002 ஆம் ஆண்டில், புவனேஸ்வரில் உள்ள ஒடிசா வேளாண்மை மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (OUAT) கமலாவின் நினைவாகப் பெயரிடப்பட்டது. அவர் 2002 இல் ஜோகன்னஸ்பர்க்கில் ஈக்குவேட்டர் ஆஃப் இனிஷியேட்டிவ் விருதை வென்றார். 2004 ஆம் ஆண்டு ஒடிசா அரசு இவரை சிறந்த பெண் விவசாயியாகக் கௌரவித்தது. புது தில்லியில் தேசிய விருதான "குருசி பிசாராதா சம்மான்" என்ற விருதையும் பெற்றுள்ளார். [7] [8] [9]

ஒடிசா மாநிலத் திட்டக் குழுவின் உறுப்பினர் பட்டியலில் இடம் பெற்ற முதல் பழங்குடிப் பெண் என்ற தனிச் சிறப்பையும் கமலா புஜாரி பெற்றுள்ளார். குறுகிய மற்றும் நீண்ட கால கொள்கை வழிகாட்டுதல்களை வழங்குவதைத் தவிர, மாநிலத்திற்கான ஐந்தாண்டு திட்டத்தை உருவாக்கும் ஐந்து உறுப்பினர் குழுவில் மார்ச் 2018 இல் இவரும் உறுப்பினராக் ஆக்கபட்டார். [10] [11] 2019 அன்று புதுதில்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் நடந்த விழாவில், குடியரசுத் தலைவர் ஸ்ரீ ராம்நாத் கோவிந்த், கமலா புஜாரிக்கு பத்மஸ்ரீ விருதை வழங்கினார்.

மேற்கோள்கள்

தொகு
  1. Padma Shri awardee Kamala Pujari passes away at 74
  2. "Padma Awards" (PDF). Padma Awards, Government of India. பார்க்கப்பட்ட நாள் 25 January 2019.
  3. https://thelogicalindian.com/get-inspired/kamala-pujari-padma-shri/>
  4. https://www.thehindu.com/sci-tech/agriculture/they-stoop-to-conquer/article4016949.ece/>
  5. http://www.newindianexpress.com/states/odisha/2019/mar/19/poor-reception-to-kamala-pujari-decried-1952977.html/>
  6. https://youthnow.in/biography/padmashree-kamala-pujari-wiki-profession-work-biography-facts-family-son-daughter.html/ பரணிடப்பட்டது 2020-09-24 at the வந்தவழி இயந்திரம்>
  7. https://odishasuntimes.com/odisha-agri-varsity-hostel-named-after-eminent-woman-farmer/>
  8. https://odishatv.in/odisha/body-slider/woman-farmer-kamala-pujari-fails-to-get-pucca-house-203061/>
  9. https://www.jagran.com/odisha/cuttack-d-prakash-rao-kamala-pujari-and-daitari-naik-receive-padma-shri-from-president-kovind-19049366.html/ பரணிடப்பட்டது 2020-08-05 at the வந்தவழி இயந்திரம்>
  10. https://thelogicalindian.com/get-inspired/kamala-pujari-padma-shri/>
  11. https://m.dailyhunt.in/news/india/english/orissa+post-epaper-orisapos/padma+shri+awardee+kamala+pujari+hospitalised-newsid-107227654/>

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கமலா_புஜாரி&oldid=4064464" இலிருந்து மீள்விக்கப்பட்டது