கமலேஷ் குமாரி

கமலேஷ் குமாரி (Kamlesh Kumari) இந்தியாவின் மத்திய சேமக் காவல் படையின் காவலர் ஆவார். அமைதிக் காலத்தில் வழங்கப்படும் மிக உயரிய அசோகச் சக்கரம் விருதினை இறப்பிற்கு பெற்றவர் ஆவார். 13 சனவரி 2001 அன்று பயங்கரவாதிகள் 2001ல் இந்திய நாடாளுமன்றத்தின் மீதான தாக்குதலின் போது, பயங்கரவாதிகளை எதிர்த்து வீரதீரமாகப் போராடி தடுத்த போது, பயங்கரவாதிகளால் கமலேஷ் குமாரி தனது இன்னுயிரை துறந்தவர் ஆவார்.[1]

கமலேஷ் குமாரி
Allegiance இந்தியா
பணியிலிருந்த ஆண்டுகள்1994–2001
விருதுகள் அசோகச் சக்கர விருது

பணி தொகு

1994ம் ஆண்டில் கமலேஷ் குமாரி மத்திய சேமக் காவல் படையில் காவலராக பணியில் சேர்ந்து, அலகாபாத்தில் அதிரடிப் படையில் இணைந்தார். 12 சூலை 2001 அன்று மத்திய சேமக் காவல் படையின் பெண்கள் அணியில் சேர்ந்தார். 2001ல் இந்திய நாடாளுமன்றத்தின் மீதான தாக்குதலின் போது கமலேஷ் குமாரி நாடாளுமன்றக் கட்டிட வளாகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்தார்.

13 டிசம்பர் 2001 தொகு

13 டிசம்பர் 2011 அன்று 2001ல் இந்திய நாடாளுமன்றத்தின் மீதான தாக்குதலின் போது, கமலேஷ் குமாரி நாடாளுமன்றக் கட்டிட வளாகத்தின் நுழைவாயில் எண் 1ல் பாதுகாப்புப் பணியில் இருந்தார்.[1]அவ்வமயம் மகிழுந்தில் வந்த பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகளைக் கண்ட கமலேஷ் குமாரி, ஏதோ தவறு நடப்பதை இருப்பதை உணர்ந்து, வாயிற்கதவை உடனடியாக மூடினார். இதனால் பயங்கரவாதிகள் மேலும் பயணிக்க முடியாமல், பயங்கரவாதிகள் கமலேஷ் குமாரி மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். பதினொரு தோட்டாக்கள் கமலேஷ் வயிற்றில் பாய்ந்தன. காலை 11.50 மணியளவில் இந்த தாக்குதல் நடைபெற்றது. இருப்பினும் கமலேஷ் குமாரி மற்ற வாயில்களில் உள்ள பாதுகாப்பு படையினரை எச்சரிக்க வேண்டி எச்சரிக்கை மணியை ஒலிக்கச் செய்தார். குண்டடிப்பட்ட கமலேஷ் குமாரி அதே இடத்தில் இரத்த வெள்ளத்தில் இறந்தார்.

குடும்பம் தொகு

உத்தரப் பிரதேச மாநிலத்தின் சிக்கந்தர்பூர், கன்னோசியில் பிறந்த கமலேஷ் குமாரிக்கு அவதேஷ் என்ற கணவரும் ஜோதி மற்றும் சுவேதா என இரண்டு மகள்கள் உள்ளனர். கமலேஷ் குமாரி இறப்பின் போது குடும்பத்துடன் போது தில்லி விகாஸ்புரி பகுதியில் வாழ்ந்து வந்தார்.

விருதுகள் தொகு

2001ல் இந்திய நாடாளுமன்றத்தின் மீதான தாக்குதலின் போது இறந்த கமலேஷ் குமாரிக்கு, அமைதிக் காலத்தில் செய்த வீரதீர செயல்களுக்கு வழங்கப்படும் அசோகச் சக்கர விருது, கமலேஷ் குமாரியின் இறப்பிற்கு பின், 2002 குடியரசு நாளன்று இந்தியக் குடியரசுத் தலைவரால் வழங்கப்பட்டது.[2] இந்தியப் பிரதமர் அடல் பிகாரி வாச்பாய் மறைந்த கமலேஷ் குமாரிக்கு இரங்கல் தெரிவித்தார்.

2001 இந்திய நாடாளுமன்றத் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட முகமது அப்சல் குரு காவல் துறை கைது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்திய உச்ச நீதிமன்றம் அப்சல் குருவுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை உறுதி செய்தது. தில்லியில் முகாமிட்டிருந்த அப்சல் குருவின் குடும்பத்தினர் மூலம், குடியரசுத் தலைவர் அப்துல் கலாமிடம் மரண தண்டனை ரத்து செய்ய கருணை மனு அளித்தனர். அப்சல் குருவின் மரண தண்டனையை காலதாமதம் இன்றி உடனடியாக நிறைவேற்றக் கோரி, கமலேஷ் குமாரி உள்ளிட்ட 8 பேருக்கு வழங்கப்பட்ட அசோகச் சக்கர விருது உள்ளிட்ட பிற விருதுகளை 13 டிசம்பர் 2006 அன்று குடியரசுத் தலைவருக்கு திருப்பி அனுப்பினர்.[3]

பிரணப் முகர்ஜிக்கு பின்னர் குடியரசுத் தலைவராக 25 சூலை 2012 அன்று பிரதிபா பாட்டில் பொறுப்பேற்றார். 2013ம் ஆண்டின் துவக்கத்தில் அப்சல் குருவின் கருணை மனுவை ஏற்க மறுத்து விட்டார். எனவே 9 பிப்ரவரி 2013 அன்று அப்சல் குருவை தில்லி திகார் சிறைச்சாலையில் வைத்து சாகும் வரை தூக்கிலிடப்பட்டார்.

30 மார்ச் 2013 அன்று கமலேஷ் குமாரி உள்ளிட்டவர்களுக்கு வழங்கப்பட்ட விருதுகள் திரும்பப் பெற்றனர். .[4]

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 Dutta, Anshuman G (11 August 2009). "Armed only with a wireless set, Kumari rushed in to face the terrorists". Mid Day. http://www.mid-day.com/news/2009/aug/110809-Kamlesh-Kumari-CRPF-Constable-2001-Parliament-attacks-Indomitables-Ashok-Chakra-Delhi.htm. பார்த்த நாள்: 24 February 2013. 
  2. Government website, gallantryawards.gov.in. "Gallantry Awards | Ministry of Defence, Government of India Kamlesh Kumari Ashok Chakra Awardee 2002". www.gallantryawards.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2021-11-11.
  3. "Families give back bravery medals". 13 December 2006. http://news.bbc.co.uk/2/hi/south_asia/6175291.stm. 
  4. "Kin of Parliament attack martyrs take bravery medals back".

வெளி இணைப்புகள் தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=கமலேஷ்_குமாரி&oldid=3671056" இலிருந்து மீள்விக்கப்பட்டது