கமாலுதீன் அகமது
இந்திய அரசியல்வாதி
கமாலுதீன் அகமது (Kamaluddin Ahmed) (15 ஆகஸ்ட் 1930 - 1 செப்டம்பர் 2018) ஓர் இந்திய அரசியல்வாதியாவார். இவர் 2000 ஆம் ஆண்டு வரை இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் தலைவராக இருந்தார். பின்னர், இவர் கட்சியை விட்டு விலகி பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார். ஜூன் 1991 முதல் செப்டம்பர் 1994 வரை இந்திய அரசாங்கத்தில் மாநில, பொது விநியோகம் துறை அமைச்சராக இருந்தார்.
கமாலுதீன் அகமது | |
---|---|
பிறப்பு | வாரங்கல், ஐதராபாத் இராச்சியம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் | 15 ஆகத்து 1930
இறப்பு | 1 செப்டம்பர் 2018 ஐதராபாத்து, தெலங்காணா, இந்தியா | (அகவை 88)
தேசியம் | இந்தியர் |
படித்த கல்வி நிறுவனங்கள் | உசுமானியா பல்கலைக்கழகம் |
இந்திய மக்களவை உறுப்பினர் | |
பதவியில் 1989–1998 | |
தொகுதி | அனம்கொண்டா |
சவூதி அரேபியாவின் இந்தியத் தூதர் | |
பதவியில் ஜூலை 2003 – செப்டம்பர் 2004 | |
முன்னையவர் | தல்மிசு அகமது |
பின்னவர் | பாரூக் மரைக்காயர் |
1930 இல் வாரங்கலில் பிறந்த அகமது, உசுமானியா பல்கலைக்கழகத்தில் படித்தார். 1980 ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் வாரங்கல் தொகுதியிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆந்திராவின் அனம்கொண்டா மக்களவைத் தொகுதியிலிருந்து 9, 10 மற்றும் 11வது மக்களவைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 1 செப்டம்பர் 2018 அன்று இயற்கை காரணங்களால் இறந்தார். [1]
மேற்கோள்கள்
தொகு- ↑ Hashmi, Rasia (2018-09-02). "Mohammed Kamaluddin Ahmed, ex-minister & ex-ambassador, passes away" (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-03-14.