கம்பிரிசாட் பச்சை குழிவிரியன்
கம்பிரிசாட் பச்சை குழிவிரியன் | |
---|---|
திரிமெரெசுரசு கம்பிரிக்ட்டி ஆண் | |
திரிமெரெசுரசு கம்பிரிக்ட்டி பெண் | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | விவிபேரிடே
|
பேரினம்: | திரிமெரெசுரசு
|
இனம்: | தி. கம்பிரிக்ட்டி
|
இருசொற் பெயரீடு | |
திரிமெரெசுரசு கம்பிரிக்ட்டி டேவிட் மற்றும் பலர், 2002 | |
வேறு பெயர்கள் [2] | |
|
கம்பிரிசாட் பச்சை குழிவிரியன் (Gumprecht's green pit viper) என்று பொதுவாக அழைக்கப்படும் திரிமெரெசுரசு கம்பிரிக்ட்டி (Trimeresurus gumprechti), வைபரிடே குடும்பத்தைச் சேர்ந்த நச்சுப் பாம்பு சிற்றினமாகும். இந்தச் சிற்றினம் ஆசியாவில் மட்டுமே காணப்படுகிறது.
புவியியல் வரம்பு
தொகுகம்பிரிசாட் பச்சை குழிவிரியன் தெற்கு சீனாவில் (யுன்னான் லாவோஸ், மியான்மர், தாய்லாந்து,வியட்நாம்) காணப்படுகிறது.
வாழிடம்
தொகுகம்பிரிசாட் பச்சை குழிவிரியன் பாம்பின் விருப்பமான இயற்கை வாழ்விடம் காடுகளாகும். இது 300-1,570 மீ (′ID2] ) உயரத்தில் உள்ளக் காடுகளில் வாழ்கின்றது.
வகைப்பாட்டியல்
தொகுகம்பிரிசாட் பச்சை குழிவிரியன் 2002ஆம் ஆண்டில் ஒரு புதிய சிற்றினமாக விவரிக்கப்பட்டது
விளக்கம்
தொகுகம்பிரிசாட் பச்சை குழிவிரியன் பிரகாசமான பச்சை நிறத்தில் காணப்படும். "பெரும் மெகாங்கில் முதல் தொடர்பு: புதிய சிற்றினங்கள் கண்டுபிடிப்புகள்" என்ற உலக வனவிலங்கு நிதியத்தால் வெளியிடப்பட்ட 2008 அறிக்கையின் அட்டைப் படமாக இந்தப் பாம்பின் புகைப்படம் வெளியானது.[3] இப்பாம்பு 1.3 மீட்டர் நீளம் வரை வளரக்கூடியது.[2]
நடத்தை
தொகுகம்பிரிசாட் பச்சை குழிவிரியன் மரங்களில் வாழக்கூடிய விலங்காகும்.
இனப்பெருக்கம்
தொகுகம்பிரிசாட் பச்சை குழிவிரியன் சீவசமுளைத்தல் முறையில் இனப்பெருக்கம் செய்யக்கூடியது.
சொற்பிறப்பியல்
தொகுகம்பிரிசாட் பச்சை குழிவிரியன் சிற்றினப் பெயரான கும்ப்ரெக்டி, செருமன் ஊர்வனவியலாளர் ஆண்ட்ரியாசு கும்ப்ரெக்ட்டின் நினைவாக இடப்பட்டது.[4]
படங்கள்
தொகு-
பூ கின் உரோங் கிளா தேசிய பூங்காவில் முதிர்ச்சியடைந்த பெண் பாம்பு
-
பூ கின் உரோங் கிளா தேசிய பூங்காவில் ஆண் பாம்பு
மேற்கோள்கள்
தொகு- ↑ species:Bryan Lynn Stuart; species:Tanya Chan-ard; species:Truong Quang Nguyen (2022). "Trimeresurus gumprechti ". IUCN Red List of Threatened Species 2022: e.T192108A217767991. doi:10.2305/IUCN.UK.2022-1.RLTS.T192108A217767991.en. https://www.iucnredlist.org/species/192108/217767991. பார்த்த நாள்: 28 February 2023.
- ↑ 2.0 2.1 Trimeresurus gumprechti at the Reptarium.cz Reptile Database
- ↑ Thompson, Christian (2008). First Contact in the Greater Mekong: New Species Discoveries (PDF) (Report). WWF Greater Mekong. Archived from the original (PDF) on 30 December 2008. பார்க்கப்பட்ட நாள் 24 March 2022.
- ↑ Beolens, Bo; Watkins, Michael; Grayson, Michael (2011).
மேலும் வாசிக்க
தொகு- species:Patrick David; species:Gernot Vogel; species:Olivier Sylvain Gérard Pauwels; species:Nicolas Vidal (2002). "Description of a New Species of the Genus Trimeresurus from Thailand, Related to Trimeresurus stejnegeri Schmidt, 1925 (Serpentes, Crotalidae)". The Natural History Journal of Chulalongkorn University 2 (1): 5–19. https://li01.tci-thaijo.org/index.php/tnh/article/view/102858. (Trimeresurus gumprechti, new species).
- Gumprecht A, Tillack F, Orlov NL, Captain A, Ryabov S (2004). Asian Pitvipers. (First Edition). Berlin: GeitjeBooks. 368 pp. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-937975-00-4.
- Nguyen SV, Ho CT, Nguyen TQ (2009). Herpetofauna of Vietnam. Frankfurt am Main: Edition Chimaira / Serpents Tale. 768 pp. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3899734621.