கம்மாளம்பட்டி
கம்மாளம்பட்டி (Kammalampatty) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், அரூர் வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1] இது எல்லபுடையாம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது.
கம்மாளம்பட்டி | |
---|---|
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தருமபுரி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 636903 |
அமைவிடம்
தொகுஇந்த கிராமம் மாவட்ட தலைமையகமான தர்மபுரியில் இருந்து 44 கிலோமீட்டர் தொலைவிலும், அரூரில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவிலும், மாநில தலைநகரான சென்னையிலிருந்து 257 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.[2] மேலும் இக்கிராமம் கடல் மட்டத்திலிருந்து 347 மீடடர் (1138 அடி) உயரத்தில் உள்ளது. இக்கிராமத்தின் மொத்த புவியியல் பரப்பு 214.71 ஹெக்டேர் ஆகும்.
மக்கள் வகைப்பாடு
தொகுஇக்கிராமத்தின் மொத்த மக்கள் தொகை 1301 .இந்த கிராமத்தில் 341 வீடுகள் உள்ளன.
சிறப்பு திருவிழாக்கள்
தொகுஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை மன்னாம்பன் கோயிலில் தேர்த்திருவிழா நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் பங்குனி உத்திர திருவிழா மிகப்பிரபலமாக நடைபெறும்.
அருகில் உள்ள முக்கியமான இடங்கள்
தொகு- தீ்ரத்தமலை - 11கி.மீ (6.8 மைல்)
- வள்ளிமதுரை அணை - 5 கி.மீ
- சித்தேரிமலை - 21 கி.மீ (13 மைல்)
- திருவண்ணாமலை - 55 கி.மீ
- மனவாளன் கோவில் - 2 கி.மீ
- அனுமந்தீர்த்தம் - 15 கி.மீ
- அம்மன்கருங்கல் - 3 கி.மீ
போக்குவரத்து
தொகுகம்மாளம்பட்டியிலிருந்து 15 கி.மீ தொலைவில் மொரப்பூர் இரயில் நிலையம் உள்ளது.
சுரங்கம்
தொகுகருங்கல்
தொகுகம்மாளம்பட்டி அருகிலுள்ள அம்மன் கருங்கல் உயர்தரமாக இருப்பதால் வட அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.