கம்மின்ஸ் மகளிர் பொறியியல் கல்லூரி, புனே
மகரிஷி கார்வே ஸ்திரீ சிக்ஷன் சம்ஸ்தாவின் கம்மின்ஸ் மகளிர் பொறியியல் கல்லூரி, புனே (CCOEW, புனே) என்பது இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள ஒரு தன்னாட்சி பெற்ற பொறியியல் கல்லூரி ஆகும். [1]
குறிக்கோளுரை | शीलं परं भूषणम् |
---|---|
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை | குணமே சிறந்த ஆபரணம் |
வகை | தன்னாட்சி பெற்ற பொறியியல் கல்லூரி |
உருவாக்கம் | 1991 |
நிறுவுனர் | மகரிஷி கார்வே ஸ்திரீ சிக்ஷன் சம்ஸ்தா |
சார்பு | புனே பல்கலைக்கழகம் |
தரநிர்ணயம் | அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு |
தலைவர் | ஜெயந்த் இனாம்தார் |
முதல்வர் | முனைவர் எம்.பி.காம்ளே |
கல்வி பணியாளர் | 127 |
மாணவர்கள் | 1,872 |
பட்ட மாணவர்கள் | 1800 |
பட்டப்பின் படிப்பு மாணவர்கள் | 72 |
அமைவிடம் | கார்வே நகர் , , , 411052 , |
வளாகம் | 11422.84 சதுர மீ |
இணையதளம் | கல்லூரி இணையதளம் |
சாவித்ரிபாய் புலே புனே பல்கலைக்கழகத்தோடு இணைக்கப்பட்டுள்ள இக்கல்லூரியானது மகரிஷி கார்வே ஸ்திரீ சிக்ஷன் சம்ஸ்தா நிறுவனத்தால் நிர்வகிக்கப்படுகிறது.
வரலாறு
தொகு1896 ஆம் ஆண்டில் மகரிஷி கார்வே என்பவர் சமூக ரீதியாக ஒடுக்கப்பட்ட பெண்களின் கல்வி மற்றும் விடுதலை ஆகியவைகளுக்காக ஹிங்னே ஸ்திரீ சிக்ஷன் சம்ஸ்தா என்ற தொண்டு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இதுவே பிற்பாடு மகரிஷி கார்வே ஸ்திரீ சிக்ஷன் சம்ஸ்தா(MKSSS), என மாறியுள்ளது.[2]
1991 ஆம் ஆண்டு இந்த கல்வி நிறுவனத்தால் பெண்களுக்கு கல்வி கற்பதன் மூலம் அவர்களை சுயசார்புடையவர்களாக மாற்றும் நோக்கத்துடன் கிழக்கின் ஆக்ஸ்போர்டு' என்று அழைக்கப்படும் புனே நகரில் தொடங்கப்பட்டதே இக்கல்லூரியாகும்[3].
இக்கல்லூரி, புனே பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது மேலும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவினால் (AICTE) தொழில்நுட்ப படிப்புகளையும் வழங்கிவருகிறது [4]
தரவரிசைகள்
தொகுகல்வி நிறுவனங்களுக்கான தேசியத் தரவரிசைக் கட்டமைப்பின் படி, இக்கல்லூரி 2020 ஆம் ஆண்டில் பொறியியல் கல்லூரிகளில் 173 ஆம் தரவரிசையில் உள்ளது.
தொழில் முனைவோர் மேம்பாட்டு பிரிவு
தொகுதொழில் முனைவோர் மேம்பாட்டு பிரிவு என்பது அதன் உறுப்பினர்களின் தொழில்முனைவு திறன்களை மேம்படுத்துவதற்கான ஒரு அமைப்பாகும். தொழில்முனைவோர் திறன்களை மேம்படுத்துவதற்கான பல்வேறு நிகழ்ச்சிகள் ஆண்டு முழுவதும் நடத்தப்படுகின்றன. இது தேசிய தொழில்முனைவோர் வலையமைப்பின் (NEN) ஒரு பகுதியாக இக்கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது. [6]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Maharshi Karve Stree Shikshan Samstha". Archived from the original on 25 January 2012. பார்க்கப்பட்ட நாள் 8 February 2012.
- ↑ "Institute Profile | About Legacy of Cummins College of Engineering for Women, Nagpur". Archived from the original on 2017-12-17.
- ↑ "MKSSS Cummins College of Engineering for Women". Archived from the original on 2012-02-12.
- ↑ "Cummins College of Engineering for Women, Pune".
- ↑ "Milk buzz and Prakaash, answers to saving electricity." DNA : Daily News & Analysis. Diligent Media Corporation Ltd. 2012. 28 Jul. 2012 பரணிடப்பட்டது 31 மார்ச்சு 2002 at the வந்தவழி இயந்திரம்>
- ↑ "NEN Member Institute Directory | NEN 360". Archived from the original on 2012-05-05. பார்க்கப்பட்ட நாள் 2012-05-02.