கராலா, தில்லி

கராலா (Karala)[1] இந்தியாவின் வடமேற்கு தில்லியில் உள்ள ஒரு கிராமமாகும். இது பிரதான கஞ்சாவ்லா சாலையில் அமைந்துள்ளது.

கராலா
தில்லியின் கிராமங்கள்
கராலா is located in டெல்லி
கராலா
கராலா
தில்லியில் கராலாவின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 28°44′17″N 77°02′21″E / 28.738°N 77.0392°E / 28.738; 77.0392
நாடுஇந்தியா
ஒன்றியப் பிரதேசம்தில்லி
மாவட்டம்வடமேற்கு தில்லி மாவட்டம்
மொழிகள்
 • அலுவல்இந்தி, ஆங்கிலம்
 • தாய்மொழிஅரியான்வி, இந்தி
நேர வலயம்ஒசநே+5:30 (IST)
அஞ்சல் குறியீட்டு எண்
110081
குடிமை நிர்வாகம்வடக்கு தில்லி மாநகராட்சி

புள்ளி விவரங்கள்

தொகு

தில்லியின் மிகப்பெரிய கிராமமாகும். கராலாவில் உள்ள மக்களில் முக்கிய இனங்கள் மாத்தூர் (ஜாத்) (மத்தியாசர்) மற்றும் பிறர். அவர்கள் தில்லி மற்றும் இப்பகுதியின் நிரந்தர குடியிருப்பாளர்களாக இருக்கின்றனர்.

கராலாவின் மதப் பரவலாக்கம்
மக்கள் தொகை இந்து முஸ்லிம் கிறுத்துவர் சீக்கியர் பௌத்தம் சைனம் பிறர் அடையாளமில்லாதோர்
35,730 94.16% 3.03% 0.29% 1.83% 0.01% 0.62% 0.01% 0.04%

எப்படி அடைவது

தொகு

கரலா கிராமம் ([2]) முண்ட்கா இரயில் நிலையம், மெட்ரோ நிலையம், ரித்தலா மெட்ரோ நிலையம் மற்றும் கராலா இடையே 10 கி.மீ அல்லது 6.2 மைல் அல்லது 5.4 கடல் மைல் மற்றும் கெஹ்ரா கிராம இரயில் நிலையத்திலிருந்து கிட்டத்தட்ட 7 கி.மீ. கி.மீ. தொலைவில் உள்ளது. பேருந்து எண் 114, 174, 921,247, 182,972 ஏ, 741,962 ஏ, 962 ஆகியவற்றில் பயணம் செய்து கராலா கிராமத்தை எளிதாக அடையலாம்.

நிலவியல்

தொகு

இந்த கிராமம் இப்போது ரோகிணி பிரிவு 37, பிரிவு 38, பிரிவு 39 மற்றும் பலவற்றோடு இணைக்கப்பட்டுள்ளது. அருகிலுள்ள கிராமங்கள் கஞ்சவாலா, மஜ்ரி, இராணி கெரா, சுல்தான்பூர் தபாஸ் மற்றும் பேகம்பூர் ஆகியவை. கராலாவுக்கு அதன் சொந்த நீர் தொட்டி ஒன்று உள்ளது. கராலா கிராமம் அதன் சொந்த சமசுகிருதக் கல்லூரியைக் கொண்டுள்ளது. கிராமத்தின் நடுவில் அமைந்துள்ள புகழ்பெற்ற சாகித் பகத் சிங் பூங்காவில் ஒன்று பஜார் பன்னா என்று அழைக்கப்படுகிறது. "பஜார் பன்னா" வில் ஒரு பெரிய ராதா கிருட்டிணன் கோயிலும் அமைந்துள்ளது. இந்த கோயில் ஆண்டவர் கிருட்டிணரை நோக்கி இந்துக்கள் வழிபடும் ஒரு அடையாளமாகும். இந்த கிராமத்தில் ஒரு கால்பந்து விளையாட்டு மைதானம் கொண்ட பெரிய அரங்கமும் உள்ளது. பிரபலமான திரைப்படமான "இராக்ஸ்டார்" - "ஜோ பி மெயின்" பாடல் அதே அரங்கத்தில் 2010 14 டிசம்பர் அன்று படமாக்கப்பட்டது. பிரபலமான ஜதின் சிங் சவுகான் அதில் கலந்து கொண்டார்.

அடையாளங்கள்

தொகு

கராலா மற்றும் மஜ்ரி மக்களால் வழிபாட்டிற்காக பயன்படுத்தப்படும் தாதா மண்டு என்று அழைக்கப்படும் ஒரு பெரிய கோயில் உள்ளது.[3] கோயிலை ஒட்டியுள்ள ஒரு பெரிய குளமும், ஒரு பழங்கால சிவன் கோயிலும் உள்ளது. இந்த கிராமத்தில் ஒரு கால்பந்து விளையாட்டு மைதானம் கொண்ட பெரிய அரங்கமும் உள்ளது. "சாகித் பகத் சிங் பூங்கா" என்ற பெயரில் ஒரு பூங்காவும் உள்ளது. கராலாவில் இரண்டு கால்பந்து அணிகளும் உள்ளன, அவை கே.எஃப்.சி (கராலா கால்பந்து சங்கம்) ஆகும். இது இரண்டு பள்ளிகளைக் கொண்டுள்ளது.[4]- ஒன்று முதன்மை மற்றும் இரண்டாவது இரண்டாம் நிலை. இது இரண்டு பாட வேளைகளைக் கொண்டுள்ளது. ஒன்று பெண்கள் மற்றும் மாலை சிறுவர்களுக்கென கொண்டுள்ளது. இங்கு ஒரு மருத்துவமனையும் உள்ளது. கராலாவில் பல சிறிய புதிய குடியிருப்புகள் உள்ளன. அதாவது சிவ் விகார், ஆனந்த்புர்தம், இராம விகார் போன்றவை.

நிர்வாகம்

தொகு

கஞ்சாவ்லா பகுதியின் நகராட்சி அலுவலகம் மற்றும் காவல் நிலையத்தின் கீழ் கிராம காரலா வருகிறது.[5] அதன் அனைத்து நீதித்துறை நடவடிக்கைகளும் புது தில்லி ,சரசுவதி விகாரின் கீழ் வருகிறது. சட்டம் மற்றும் ஒழுங்கு காட்டுபாடுகள் அனைத்தும் கஞ்சாவ்லா காவல் நிலையத்தின் கீழ் வருகின்றன. 29 பேர் கொண்ட நகரமன்ற உறுப்பினர்கள் கராலா நிர்வாகத்தின் கீழ் வருகிறார்கள். கராலா அனைத்து 17 கிராம பர்தான்களின் தலைமையும் ஆகும். தற்போது சவுத்ரி சமுந்தர் என்பது 17 கிராமங்களைக் கொண்ட கராலா கிராமத்தின் தற்போதைய பர்தானாகும். கரலாவில் அனைத்து சமூகங்களும் உட்பட 6 சோபல் உள்ளது.

சான்றுகள்

தொகு
  1. "Villages | District North West, Government of Delhi | India". பார்க்கப்பட்ட நாள் 25 July 2023.
  2. https://www.facebook.com/Karalavillage
  3. "Jai Dada Mandu(Karala)" (in ஆங்கிலம்) – via Facebook.
  4. "Karala-SKV | District North West, Government of Delhi | India". பார்க்கப்பட்ட நாள் 25 July 2023.
  5. "Who's Who | District North West, Government of Delhi". District North West, Government of Delhi.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கராலா,_தில்லி&oldid=3931174" இலிருந்து மீள்விக்கப்பட்டது